Comedy WWE: http://youtu.be/k4Q1IKFBO-M WWE
திங்கள், 2 பிப்ரவரி, 2015
சனி, 24 ஜனவரி, 2015
ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன.
ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன.
அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர்.
லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார்.
ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி.
வாசு(ஸ்)கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள கள்ளிக்கோட்டையில் இறங்கி அதன்பின் 1519-இல் இலங்கைக்குப் போனார். அங்கு அப்போது தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி நடந்தது.
வாசு(ஸ்)கோடகாமா இறங்கியவுடன் அங்கு வியாபார ரீதியாகப் பணிகள் செய்ய உரிய அனுமதியும் அந்தத் தமிழ் மன்னன்தான் வழங்கினார் என்பது சரித்திர உண்மை.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவார்கள் என்ற கதைபோலப் போர்ச்சுகீசியர்கள் சிங்களர்களுடன் இணைந்து தமிழருடைய ஆட்சியை வீழ்த்தினார்கள்.
இந்தக் கலகம் ஏற்பட்டபோதுதான் தஞ்சையை ஆண்ட ரகுநாத மன்னன் சங்கிலி மன்னனுக்குத் துணையாக ஒரு படையை அனுப்பிப் போர்ச்சுகீசியர்கள் மற்றும் சிங்களருடைய தாக்குதலை முறியடிக்க உதவினான்.
அவரது மகன் இரண்டாம் சங்கிலி மன்னனை அவருடைய உடன்பிறந்த சகோதரர் மூலம் சதி செய்து கைது செய்து தமிழ் மன்னனுடைய ஆளுமையை மழுங்கடித்தனர். அந்த மன்னனைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று தங்களது ஆட்சிக்கு உள்பட்டிருந்த கோவாவுக்கு இழுத்துவந்து தூக்கிலிட்டார்கள் போர்ச்சுகீசியர்கள்.
ஐம்பது ஆண்டுகாலம் இலங்கையில் கோலோச்சிய போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று இலங்கையில் நுழைந்தனர். 1833-இல் தமிழர் பகுதியும் சிங்களர் பகுதியும் சேர்த்து ஆங்கிலேயருடைய ஆளுமையான நாடாக மாறியது.
1933-இல் இங்கிலாந்திலிருந்து வந்த சோல்பரி பிரபு ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி இலங்கைத் தீவு என்று அறிவிக்கிறார். அப்போது தமிழர்கள் தங்களுக்கு நியாயமும் சம உரிமையும் கிடைக்கும் என்று நம்பினர்.
ஆனால், அதற்கு மாறாக 1948 டிசம்பர் 12-ஆம் தேதி குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமல்லாமல் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் பத்து லட்சம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் இந்தியாவிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் ஆவார்கள். அவர்கள் அந்த மண்ணைத் தமிழகத்திலிருந்து போய் வளப்படுத்தி தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களைக் கடும் உழைப்பால் உருவாக்கியதற்கு அளிக்கப்பட்ட வெகுமதிதான் பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.
1956-இல் சிங்கள மொழிதான் ஆட்சி மொழி, புத்தம் தான் ஆட்சி மதம் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும், தந்தை செல்வா விட்டுக்கொடுத்து 1957-இல் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு பண்டாரநாயகாவுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.
அதில் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரமும் உரிமைகளும் வழங்க வேண்டும் என்பதுதான் அதில் குறிப்பிடப்பட்டது. அதை புத்த பிட்சுகளும் எதிர்த்தனர். அந்த ஒப்பந்தமும் பரிசீலிக்காமல் குப்பைத்தொட்டிக்குப் போனது.
இருப்பினும் செல்வா சமாதானம், காந்தியம் என்ற நிலையில் திரும்பவும் 1965-ல் அன்றைய அதிபர் சேனநாயகாவுடன் ஓர் உடன்பாடுக்கு முன்வந்தார். அந்த உடன்பாட்டு ஒப்பந்தத்தில் மாகாணக் கவுன்சில்கள் ஏற்படுத்தி அதிகாரங்களை ஒதுக்கி தமிழர்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்ற நிலையில் செல்வாவும் சேனநாயகாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதையும் புத்த பிட்சுகள் எதிர்த்தனர். அதனால் அந்த ஒப்பந்தமும் கிடப்பில் போடப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதையொட்டி தமிழர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் கடுமையாகக் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். நாடாளுமன்றத்திலும் உரிமைக்குரல் எழுப்பினர்.
இந்தக் கொடுமைக்கு இடையில் தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் சிங்களர்கள் குடியேற்றப்பட்டனர். வடபகுதியில் சிங்களர்கள் இல்லாத இடத்தில் 1948-லிருந்து இன்று வரை 33 சதவிகிதம் சிங்களவர்கள் தமிழர்கள் பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
பாலசு(ஸ்)தீனத்தில் மேற்குக் கரையில் யூதர்கள் குடியேறியதைக் கண்டிப்பவர்கள் ஈழத்தில் சிங்களவர்கள் குடியேறியதைக் கண்டிக்காதது மட்டுமல்லாமல் அதை இந்தியா உள்ளிட்ட நாடுகளே பார்த்தும் பார்க்காமல் இருப்பதுதான் வேதனை.
தமிழ் மாணவர்கள் 50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆனால், சிங்கள மாணவர்கள் வெறும் 29 மதிப்பெண்கள் எடுத்தால் போதும். வேலைவாய்ப்பிலும், ராணுவத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
தேவாலயங்களும், கோயில்களும் தாக்கப்பட்டன. நல்லூர் கோயில் அருகே பல சமயங்களில் தாக்குதல் நடந்தன. அதற்குப் பிறகு செஞ்சோலைச் சம்பவம். இப்படி எல்லையற்ற அத்துமீறல்களும் கொடூரங்களும் முள்ளிவாய்க்கால் வரை நடந்ததை யாரும் மறுக்க முடியாது.
இப்படியெல்லாம் நடக்கும் என்றுதான் தந்தை செல்வா 1976, மே 24-ஆம் தேதி வட்டுக்கோட்டையில் கூடிய தமிழர் விடுதலை முன்னணியின் கூட்டத்தில், இனிமேல் தனி வாழ்வுதான். ஈழம்தான் என்று முடிவெடுத்து அதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் அங்குள்ள தமிழர்களுடைய வரலாற்று ஆவணமாக இன்னும் திகழ்கின்றது.
இதை வைத்துக்கொண்டு 1975-இல் நடந்த இடைத்தேர்தல்களிலும் ஈழம்தான் முக்கியப் பிரச்னையாகக் கொண்டு வாக்காளர்களிடம் சென்றபோது 78.4 சதவிகிதம் பேர் செல்வாவின் ஈழத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
11 பேர் நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது மதச்சார்பற்ற தனி ஈழம் தங்களுக்கு வேண்டும் என்று தன்னுடைய உரிமைக் குரலைத் தெளிவாகப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்து செல்வா மக்களைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிங்கள ராணுவம் உள்ளே புகுந்து தாக்கி ஒன்பது தமிழர்கள் சுட்டு சாகடிக்கப்பட்டனர்.
இதையெல்லாம் பார்த்துப் பொறுக்க முடியாமல்தான் தமிழ் இளைஞர்கள் 1972-இல் புதிய புலிகள் என்ற இயக்கத்தை பிரபாகரன் தலைமையில் தொடங்கினர். 10 இலக்கத்துக்குக் குறைவான உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஆல விருட்சமாக வளர்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
1983-இல் இனப்படுகொலை நடக்கும்போது அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அதைப் பொறுக்க முடியாமல் அது இனப்படுகொலைதான் என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார். மனித உரிமைகளைப் பேசிய உலக சமுதாயம் இந்தக் கொடுமையினைத் தடுக்க வரவில்லை.
கிழக்கு வங்கத்தில் பிரச்னை வரும்போது தலையிட்டோம். பாலசு(ஸ்)தீனிலும், கிழக்கு தைமூரிலும் குரல் கொடுத்தோம். ஐரோப்பாவில் பல நாடுகள் இனரீதியாகப் பிரிந்ததை ஆதரித்தோம்.
யூகோசு(ஸ்)லோவோகியா இனரீதியாகப் பிரிந்தது. சூடான் பிரிந்தது. இம்மாதிரி பிரிந்த நாடுகளுக்குக் காரணங்கள் இருந்ததைப்போல ஈழம் பிரிந்து செல்லவும் காரணங்கள் உண்டு. அப்படியிருந்தும் இன்னும் அதற்கான வழிவகை தெரியவில்லை.
ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டது போல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாசி, போசு(ஸ்)போன்றவர்களுடைய படங்களையும் காணலாம். அந்த அளவில் இந்தியத் தலைவர்களை அங்குள்ள தமிழர்கள் அன்பு காட்டி நேசித்தார்கள்.
இந்தியா, சீனா போர் நடக்கும் போது இந்தியாவுக்கு ஆதரவாகத் தமிழர்கள் வீரசிங்கம் அரங்கத்தில் கூட்டம் நடத்தியதும்; தந்தை செல்வா, போர் நிதியாக தமிழர் பகுதியிலிருந்து சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பியதும் எல்லாம் வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல; நமது நாட்டை ஈழத் தமிழர்கள் எவ்வளவு பாசத்துடன் பார்த்தார்கள் என்பதை உணர்த்துபவை.
வங்கதேசப் பிரச்னையில் இந்தியாவையும் இந்திரா காந்தியையும் ஆதரித்து இலங்கை நாடாளுமன்றத்தில் மனப்பூர்வமாகக் குரல் கொடுத்தார்கள் தமிழ் உறுப்பினர்கள். ஆனால், சிங்கள அதிகார வர்க்கம் இந்தியா, சீனா போரிலும், இந்தியா பாகிசு(ஸ்)தான் போரிலும் இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது.
வங்கதேசம் பிரியும்போது பாகிசு(ஸ்)தான் விமானங்கள் இந்தியா வழியாகச் செல்ல முடியாமல் இருந்தபோது இலங்கை வழியாகச் செல்ல அனுமதியும் தந்தது சிங்கள அரசு. எவ்வளவோ உதவிகள் இலங்கைக்கு நாம் செய்தாலும் நன்றி கெட்டத்தனத்துடன் தான் சிங்கள அரசியல் தலைவர்களும், அதிகாரவர்க்கத்தினரும் நடந்து கொண்டார்கள்.
இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பு குறித்தும் இங்கே நாம் பார்க்க வேண்டும். தெற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள டீக்கோகர்சியாவில் 1974-75-இல் அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க முயன்றபோது இந்திரா காந்தி கண்டித்து உலக நாடுகளுடைய ஆதரவைக் கொண்டு அது தடுக்கப்பட்டது.
அமெரிக்கா அதன் பிறகும் விடாமல் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் உள்ள திரிகோணமலை துறைமுகத்தில் வாய்ஸ் ஆப் அமெரிக்கா (Voice of America)வுடைய ராடர்களை (Radar) அமைக்கவும், எண்ணெய் கிடங்குகளை அமைக்கவும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது இந்தியாவின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
இன்றைக்கு இந்தியாவைச் சுற்றியுள்ள, பாகிசு(ஸ்)தான், சீனா, வங்கதேசம், மியான்மர் ஆகியவற்றுடன் நமக்கு சுமுக உறவு இல்லை. இந்தச் சூழலில் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளோடு சீனா நட்பு பாராட்டி இந்தியாவுக்கு எதிராகத் திருப்பி வருகிறது. இப்போது சீனாவின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலிலும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
தனது கடற்படைத் தளங்களை அமைப்பது அணுஉலைகளை நிறுவ உதவி செய்வது, ராணுவத் தளவாடங்களைக் கொடுப்பது என்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளோடு ஒப்பந்தம் போட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் தென்மேற்குப் பகுதியில் பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடுத்த 15 ஆண்டுகளில் பாலிமெட்டாலிக் (Polymetallic) பணியில் ஈடுபடும் என்று சொல்கிறார்கள். செச(ஷ)ல்சு(ஸ்) (Cesals)தீவிலும் சீனா ராணுவத் தளம் அமைத்துள்ளது.
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் தன்னுடைய ஆளுமையைக் காக்க சீனா முயன்று வருகிறது. இந்தியாவோடு பகைமை உணர்வை மனதில் கொண்டு சீனா, இலங்கையைத் தனது நட்பு நாடாக வைத்துக் கொண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆர்வம் காட்டி வருகிறது.
இராணுவத் தளவாடங்கள், அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைத்துக் கொடுத்து சீனாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது என்று அதன் முயற்சிகள் தொடர்கின்றன. கச்சத்தீவில்கூட சீனர்களின் நடமாட்டம் இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.
இலங்கையைச் சுற்றி சீனக் கப்பல் படைகள் வருவதும் போவதும் இந்தியாவின் எல்லைப்பக்கத்தில் அந்தக் கப்பல்கள் ஊடுருவதும் இந்தியாவின் நலனுக்கும் பாதுகாப்புக்கு உகந்ததே அல்ல. எனவே, இந்தியா ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வையோடு ஈழப் பிரச்னையில் முடிவுகள் எடுப்பது காலத்தின் கட்டாயம்.
ஈழப் போராட்ட வரலாறு, அதில் உள்ள நியாயங்கள், இந்தியப் பெருங்கடலில் வல்லரசுகளின் ஆதிக்கம், இலங்கை இந்தியா மீது மறைமுகமாகக் கொண்டுள்ள பகைமை போக்கு இதையெல்லாம் பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும். நாம் எவ்வளவுதான் இலங்கைக்கு உதவினாலும் அவை யாவும் தமிழர்களுக்குச் சென்றடைவது இல்லை.
தமிழ்மொழியைப் பாதுகாத்து ஆட்சிமொழியாக அறிவிப்பது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்துவது போன்ற உறுதிமொழிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பதாக இந்திய அரசிடம் வாக்குறுதி கொடுத்த ராச(ஜ)பட்ச இப்போது பல்டி அடித்துவிட்டார்.
இந்தியா வழங்கிய 500 கோடி ரூபாய்க்கு மேலான தொகையைக் கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாகச் சொன்ன வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
இந்தியா கொடுத்த அனைத்து உதவிகளையும் சிங்களப் பகுதியில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பயணங்கள், அங்கு சென்ற நாடாளுமன்றக் குழுவின் பயணங்களும் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையவில்லை.
இந்திய மண்ணில் உள்ள நாம் அனைவரும் இந்தப் பிரச்னையின் நீள அகலத்தை அறிந்து கடந்தகால வரலாற்றை மனதில்கொண்டு பார்த்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஈழம்தான் தீர்வு என்ற விடை நமக்குக் கிடைக்கும்.
ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டது போல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாசி(ஜி), போசு(ஸ்) போன்றவர்களுடைய படங்களையும் காணலாம்.
வியாழன், 22 ஜனவரி, 2015
தமிழரின் போர்க்கருவிகள்
தமிழரின் போர்க்கருவிகள்
நண்பர்களே படித்து பார்த்து உங்களுக்கு தெரிந்த தமிழரின் போர்க்கருவிகள் பற்றி கூறுங்கள்
வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாக அமைந்துள்ளது.
1) வளைவிற்பொறி
2) கருவிரலூகம்
3) கல்லுமிழ் கவண்
4) கல்லிடுகூடை
5) இடங்கணி
6) தூண்டில்
7) ஆண்டலையடுப்பு
8) கவை
9) கழு
10) புதை
11) அயவித்துலாம்
12) கைப்பெயர் ஊசி
13) எரிசிரல்
14) பன்றி
15) பனை
16) எழு
17) மழு
18) சீப்பு
19) கணையம்
20) சதக்களி
21) தள்ளிவெட்டி
22) களிற்றுப்பொறி
23) விழுங்கும் பாம்பு
24) கழுகுப்பொறி
25)புலிப்பொறி
26) குடப்பாம்பு
27) சகடப்பொறி
28) தகர்ப்பொறி
29) அரிநூற்பொறி
30) குருவித்தலை
31) பிண்டிபாலம்
32) தோமரம்
33) நாராசம்
34) சுழல்படை
35) சிறுசவளம்
36) பெருஞ்சவளம்
37) தாமணி
38) முசுண்டி
39) முசலம்
தமிழரின் தாயகமான இலங்கையை ஆரியம் அரித்தபின் 20.380 சதுரக்கல் தமிழீழத்தின் தேசிய படை உருவாக்கிய போர்க் கருவிகளும் போர் ஏந்துகளும்.
களத்துப் போர்க்கருவிகள்
1) அருள் 89 (வீரவேங்கை அருள் 89 ஆம் ஆண்டு உருவாகியது)
2) யொனி மிதி வெடி (யொனி நினைவாக உருவாக்கப்பட்டது)
3) பசிலன் 2000 (பசிலன் நினைவாக)
4) குமரப்பா 5000
களத்துப் போர் ஏந்துகள்
1) மிதிவண்டி(Hero)
2) விசைப் படகுகள்
3) மீன் வடிவிலான நீர்மூழ்கிப்படகு
4) கரும்புலி விசை வண்டிகள்
5) போர் விண்ணூர்திகள்
மிதிவண்டி கண்காணிப்பு அணி
தற்கொடை நீர்மூழ்கி விசை உந்து
விசைப் படகு
பசிலன் 2000
விண்ணூர்தியிற் சீறும் புலிகள்
எல்லாக் காலங்களும் போர் நமக்குக் கற்பிப்பது சுடுகாட்டு அமைதியைத் தான். ஆனாலும் சொந்த மண்ணிழந்து வாழ்தல் மனிதனுக்குக் கேடு.
___________________________________
யாழறிவன்
ஞாயிறு, 4 ஜனவரி, 2015
ஈழம்
ஈழம்:
ஒரு பார்வை-3:
பண்டாரநாயகா - செல்வநாயகம் ஒப்பந்தம்
அடிமையாய் இருக்கும் ஒருவனுக்கு சுதந்திரத்தினைப் போல் கனவுகளைத் தரக் கூடிய விடயங்கள் வேறெதுவும் கிடையாது. சுதந்திரம் என்றச் சொல் அவனுள் நம்பிக்கையினை விதைக்கின்றது...அந்த நம்பிக்கையினைக் கொண்டே அவனும் ஆவலாய் சுதந்திரத்தினை எதிர்பார்த்துக் கொண்டு நிற்க ஆரம்பிக்கின்றான். அவனைப் பொறுத்தவரை சுதந்திரம் அவனுடைய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வினைக் கொண்டு வந்து விடும்.
ஆனால் உண்மையோ பல நேரங்களில் வேறாக இருக்கின்றது...தீர்வினைத் தரும் என்று நம்பியச் சுதந்திரங்கள் பல நேரங்களில் வேறு பல பிரச்சனைகளுக்கே அடித்தளம் அமைத்து விட்டுச் சென்று இருக்கின்றன. இலங்கையிலும் அதே வரலாறு தான் நிகழ்ந்து இருக்கின்றது.
தமிழர்களும் சரி சிங்களவர்களும் சரி சுதந்திரத்தினை மிகவும் ஆர்வமாகத் தான் எதிர்பார்த்தனர்...அதற்காக ஒன்றாகத் தான் போராடவும் செய்தனர். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அவ்வளவே...மற்ற பிரச்சனைகளை எல்லாம் பின்னர் அவர்களாகப் பார்த்துக் கொள்ள முடியாதா என்ன என்ற எண்ணமே அவர்களுள் மேலோங்கி இருந்தது.
அந்த எண்ணம் எவ்வளவு தவறான ஒன்றாக அமையும் என்பதனை அவர்கள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை. சரி இப்பொழுது வரலாற்றுக்குள் வருவோம்.
இலங்கை சுதந்திரம் அடைந்து விட்டது. அதன் முதல் பிரதம மந்திரியானார் சேனநாயகே. பிரச்சனைகள் அன்றில் இருந்தே தொடங்க ஆரம்பிக்கின்றன.
1) மலையகத் தமிழர்களின் குடியுரிமைப் பறிக்கப்படுகின்றது.
2) தமிழர்களின் இடங்களில் நிலச் சீரமைப்புத் திட்டங்கள் என்றுக் கூறி சிங்களவர்கள் குடி ஏற்றப்படுகின்றனர்.
தமிழர்களின் சார்பாக தந்தை செல்வா மேலே உள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்புகின்றார். "சேனநாயகேவிற்கு எங்களது வணக்கங்கள்...உங்களுடைய நடவடிக்கைகள் தமிழர்களின் மத்தியில் சில கசப்பு உணர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் எங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக எண்ணுகின்றோம்...அதுவும் குறிப்பாக தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை அமைப்பது என்பது நம் இரண்டு இனங்களும் ஒன்றிணைந்து வாழும் சூழலை நிச்சயமாக கெடுக்கும் ஒரு செயலாகவே அமையும்...இதனைக் கருத்தில் கொண்டு தாங்கள் நடவடிக்கைகள் எடுப்பீர் என்றே நம்புகின்றோம்...நன்றிகள்!!!"
"ஆ...செல்வா...!!! தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத செயல்களை என்னுடைய அரசாங்கம் ஒரு பொழுதும் செய்யாது...கவலையினை விடுங்கள்...தக்க நேரத்தில் அனைத்தும் சரியாக்கப் படும்...!!!"...சேனநாயகேவிடம் இருந்து பதில் விரைவாக வந்தது. பதில் மட்டுமே வந்தது. ஆனால் வருடங்கள் ஓடியும் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களும் சரி மலையகத் தமிழர்களின் பறிக்கப்பட்ட குடியுரிமைகளும் சரி நிகழ்ந்தவை நிகழ்ந்த வண்ணமே இருந்தன.
இந்நிலையில் ஒரு விபத்தில் சேனநாயகே காலமாக...அரசியல் என்றால் என்ன என்று இலங்கை அறிய ஆரம்பிக்கின்றது. சில கட்சிகள் உடைகின்றன...பல கட்சிகள் புதிதாய் உருப்பெறுகின்றன...அனைத்திற்கும் காரணம் ஒன்று தான்...பதவி...!!!
'சனநாயக நாட்டினில் யார் வேண்டும் என்றாலும் தலைவர் ஆகலாம் தானே...தப்பில்லையே...அப்படி இருக்க ஒரு முயற்சி செய்துத் தான் பார்ப்போமே...!!!' இந்த எண்ணத்திலேயே தான் பல கட்சிகள் புதிதாய் தோற்றம் பெற ஆரம்பிக்கின்றன.
'சரி கட்சியினை ஆரம்பித்தாயிற்று...நல்லது. இனி வெல்வதற்கு என்ன செய்ய வேண்டும்...அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும் என்றால் பெருவாரியான மக்களை நாம் கவர வேண்டும்...நம் நாட்டினில் பெருவாரியான மக்கள் சிங்களவர்களே...அப்படி என்றால் அவர்களை நாம் கவர்ந்தாலே போதுமே...ஆட்சி நம் கைக்கு வந்து விடுமே...அடடே...இவ்வளவு எளிதான ஒன்றா ஆட்சியினைப் பிடிக்கும் தந்திரம்...' என்ற சிந்தனையுடனே அக்கட்சிகள் சிங்கள மக்களை குறி வைத்து தங்களது பிரச்சாரத்தினை தொடங்குகின்றனர். அதனைத் தொடங்கி வைப்பவர் பண்டாரநாயகா என்றொருவர்.
"இது சிங்களர்கள் அதிகமாக இருக்கும் நாடு...நம் நாடு...இங்கே எதற்காக இரண்டு மொழிகள்...அதிகார மொழியாக சிங்களம் மட்டுமே இருந்தால் தானே சிங்களவர்கள் வளர முடியும்...நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வந்த ஒரே நாளிலேயே சிங்களம் மட்டுமே அதிகார மொழி என்ற சட்டத்தினைக் கொண்டு வருவோம்...அதற்காக தமிழையும் மறந்து விட மாட்டோம்...வடக்கு மட்டும் கிழக்கு மாகாணங்களில் தமிழுக்கென்று சில சலுகைகள் வழங்கப்படும்...ஆனால் சிங்களமே ஆட்சி மொழியாக இருக்கும்..." இது தான் பண்டாரநாயகாவின் தேர்தல் வாக்குறுதி. தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறியினைத் தூண்டி விட்ட முதல் தீக்குச்சி!!!
பண்டாரநாயகாவின் பேச்சினைக் கேட்ட சிங்களவர்கள் அகமகிழ்ந்தனர். "வாழ்க பண்டாரநாயகா...வாழ்க சிங்களம்..." என்ற முழக்கங்கள் சிங்களர்கள் இருந்தப் பகுதி எங்கும் கேட்க ஆரம்பிக்க 'தமிழுக்கும் சிங்களத்திற்கும் சரிசமமான உரிமை வழங்கப்படும்' என்றுக் கூறி வந்த மற்ற சிங்களத் தலைவர்களுள் சிலரும் வாக்குக்காக 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிங்களமே அரசு மொழியாக அறிவிக்கப்படும்...பௌத்தமே அரச சமயமாக அறிவிக்கப்படும்' என்றுக் கூற ஆரம்பித்தனர்.
ஒட்டுமொத்தமாக தமிழர்களுக்கு எதிரான சிந்தனை அங்கே விதைக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. தமிழர்கள் அதனைக் கண்டு கொதித்துக் கொண்டு இருந்தனர்.
"சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்றால் பின்னர் நாம் யார்...இந்நாட்டின் இரண்டாம் தரக் குடிமக்களா?...அனைத்தும் சிங்களத்தில் என்றால் பின்னர் அங்கே நமக்கும் நம் இனத்திற்கும் என்ன மரியாதை இருக்கின்றது...இது நம்மைத் தாழ்த்தும் திட்டமிட்ட செயல்...இதனை இவ்வாறே விடக் கூடாது..." என்று தமிழர்கள் கொந்தளித்துக் கொண்டு இருந்த வேளையில் தான் தந்தை செல்வா அரசாங்கத்துடன் பேசிக் கொண்டு இருந்தார்.
"சிங்களம் மட்டுமே அரசாங்க மொழி என்பது ஏற்புடையதில்லை...இது தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் மற்றொரு செயலாகும்...எங்களுக்குரிய உரிமைகளை நீங்கள் வழங்குவீர் என்றே நம்புகின்றோம்...இல்லையேல் போராடுவதனைத் தவிர்த்து எங்களுக்கு வேறு வழிகள் இல்லை என்றே எண்ணுகின்றேன்....முடிவு உங்கள் கையில்."
செல்வாவின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலும் வந்தது..."அட...தமிழர்களை நாங்கள் எவ்வாறு கை விடுவோம்...கவலைப்படாதீர்...அவர்களுடைய உரிமைகள் என்றும் எங்களால் மறுக்கப்படப்போவதில்லை...இது நமது நாடு".
ஆனால் வெறும் பதில் மட்டுமே வந்தது. 1956 தேர்தல்களில் பண்டாரநாயகா வெற்றிப் பெற்ற உடன் அறிவித்த முக்கியத் தீர்மானம் 'இனி சிங்களமே அரச மொழி...'
சிங்களவர்கள் சிரித்தார்கள். தமிழர்கள் தங்களது பகுதிகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றி விட்டு தந்தை செல்வாவின் குரலுக்காக காத்திருந்தார்கள்.
"அவர்கள் அவர்களது முடிவினைக் கூறி விட்டனர்...நாம் நம்முடைய முடிவினை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்...ஆட்களைத் திரட்டுங்கள்...நமக்கு உரிமைக் கிடைக்கும் வரை போராட வேண்டும்... ஆரம்பிக்கட்டும் சத்தியாகிரகப் போராட்டங்கள்...!!!" தந்தை செல்வாவின் குரல் ஒலித்தது. தமிழர்கள் போராட ஆரம்பித்தனர்...அமைதியாக.
"எங்களின் உரிமையினை எங்களுக்குத் தா...தமிழர் வாழும் பகுதிகளுள் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்" என்ற முழக்கங்களுடன் ஆரம்பமாகின சத்தியாக்கிரகப் போராட்டங்கள்...கூடவே ஒத்துழையாமை இயக்கங்களும் தான்.
போராட்டங்களை சில சிங்கள இன வெறியர்கள் கண்டனர்...'என்னடா இது நம்முடைய நாட்டினில் இவர்கள் போராடுகின்றனர்...சிங்களம் ஆட்சி மொழியாக இருந்தால் இவர்களுக்கு என்ன வந்ததாம்...விட்டால் நம்மை இவர்கள் வளர விட மாட்டார்கள்...ம்ம்ம்...அடித்து துரத்துங்களடா அவர்களை..." என்று எண்ணி அமைதியாய் போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தத் தொடங்கினர்.
பண்டாரநாயகா பார்த்தார். பாராளுமன்றத்தின் வாசலின் முன்னேயே சிங்களர்கள் தமிழர்களை அடித்துக் கொண்டு இருந்தனர். 'அரசாங்கத்துக்கு எதிராக தமிழர்கள் போராடுகின்றார்களா...சரி....அவர்களை சிங்களர்கள் அடிக்கின்றார்களா...சரி,,,தமிழர்களுக்குத் தேவை தான்...சில அடி வாங்கியவுடன் போராட்டம் முடிந்து விடும்...முடியட்டும் முடியட்டும்' என்று எண்ணி அமைதியாக இருந்தார்.
ஆனால் பண்டாரநாயகா எண்ணியது நடக்கவில்லை. சிங்களவர்களின் இன வெறி அடக்க முடியாத ஒன்றாக மாறிற்று. தமிழர்கள் தேடிப் பிடித்து அடிக்கப் பட்டனர்...எரிக்கப் பட்டனர்...அவர்களது உடைமைகள் கொள்ளை அடிக்கப்பட்டன...காவல் துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றது...வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு நின்றது. வண்டி வண்டியாக மத்திய இலங்கையில் இருந்து வடக்கே தமிழர்கள் இடம் பெயரத் தொடங்கினர். இது நடந்தது 1958 ஆம் ஆண்டு. சிங்களர்கள், தமிழர்கள் ஆகியோருக்கு இடையே இனக் கலவரத்தினைத் தோற்றுவித்து வைத்த ஒரு ஆண்டு.
சிங்களவர்கள் அடித்துக் கொண்டு இருந்தனர்...தமிழர்கள் அமைதியாக போராடிக் கொண்டே இருந்தனர்.
"நாம் காந்திய வழியில் போராடுகின்றோம்...அது தோற்காது...நாம் தொடர்ந்து போராட வேண்டும்..." என்றே தந்தை செல்வா சொன்னார்...அவ்வண்ணமே தமிழர்கள் செய்தனர்.
"சாதாரணக் கலவரமாக ஓய்ந்து விடும் என்று என்னியக் கலவரம் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டதே...ஐயகோ எவ்வளவு சேதங்கள்...போதும் இவ்வாறே விட்டால் தேசம் இரண்டாகி விடும் வாய்ப்பும் உள்ளது...சரி தமிழர்கள் கேட்பதும் சரியாகத் தானே உள்ளது...அவர்கள் பகுதியில் தமிழ் ஆட்சி மொழியாகவே இருந்து விட்டுத் தான் போகட்டுமே...என்ன குறைந்து விடும் இப்பொழுது..." என்று தாமதமாக மனம் திருந்திய பண்டாரநாயகா தந்தை செல்வாவினை அழைத்து புது ஒப்பந்தத்தையும் போட்டுக் கொள்கின்றார். அதன் படி,
1) தமிழர் பகுதிகளில் தமிழே ஆட்சி மொழியாக இருக்கும்.
2) வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் அவர்களாக ஆட்சி செய்துக் கொள்ளலாம்...இலங்கை கூட்டாட்சியினை கொண்ட நாடாக இருக்கும்.
3) தமிழர்கள் பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றங்கள் நிகழ பெறாது.
4) குடியுரிமை பறிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
தமிழர்கள் மகிழ்ந்தனர். அவர்களின் உரிமையை தந்தை செல்வா பெற்றுத் தந்து விட்டார். அறவழியிலான போராட்டம் வென்று விட்டது. காந்திய வழிக்கு கிட்டிய மற்றுமொரு வெற்றி இது.
ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. தான் போட்ட ஒப்பந்தத்திற்கு சிங்களவர்களின் மத்தியில் எழும்பிய எதிர்ப்பினைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தத்தினை கிழித்துப் போட்டார் பண்டாரநாயகா. அவரை தமிழர்களின் ஆதரவாளர் என்றுக் கூறி பின்னர் பௌத்த பிக்கு ஒருவன் சுட்டுக் கொன்றான். எந்த இனவெறியினைத் தூண்டி ஆட்சியினைப் பிடித்தாரோ அந்த இனவெறியே அவரின் உயிரைப் பறித்த ஒன்றாக மாறியது.
தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றிணைந்து வாழ முடியும் என்ற நிலை இலங்கையில் சாத்தியமே இல்லாத நிலையினை நோக்கிச் சென்றுக் கொண்டு இருந்தது.
தொடரும்....!!!
_____
ஒப்பந்தங்கள்...பிரபாகரன்...தனி ஈழம்!!!
பண்டாரநாயகா இறந்து விட்டார்...அவருடன் இட்டுக் கொண்ட ஒப்பந்தமும் செயல்படுத்தப்படவில்லை... இந்நிலையில் தமிழர்களின் உரிமைகள் என்னவாகும் என்று தமிழர்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் அடுத்த தேர்தலில் வென்று இலங்கையின் முதல் பெண் பிரதம மந்திரி ஆகின்றார் பண்டாரநாயகாவின் மனைவியார் திருமதி. சீறிமாவோ பண்டாரநாயகா.
ஆனால் இவருடையக் கொள்கையிலும் பெரிய மாற்றங்கள் இல்லை... "சிங்களமே ஆட்சி மொழி...உத்தியோக மொழி...நீதி மன்ற மொழி...இதில் மாற்றமே இல்லை... சிங்களம் தெரியாத பணியாளர்கள் சிங்களம் கற்றுக் கொள்ள வேண்டும்...இல்லையேல் வேலை இழக்க நேரிடும்...அனைத்துப் பள்ளிகளிலும் சிங்களமே போதனை மொழியாக இருக்கும்...சிங்கள மொழியில் தேர்ச்சி பெறத் தவறினால் ஆசிரியர்களுக்கும் சரி மற்ற பணியாளர்களுக்கும் சரி வேலை இல்லாத நிலை உருவாகிவிடும்...நன்றி". இதுவே தான் அவரது கொள்கையாக இருந்தது.
சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் இலங்கையில் தமிழுக்கு இடம் இல்லை... நீ இங்கே இருக்க வேண்டுமானால் சிங்களவனாக மாறி விடு...வேறு வழிகள் உனக்குக் கிடையாது. அவ்வளவே...!!!
"பார்த்தீர்களா ஐயா...நம்மை இரண்டாம் தர குடிமக்களாகவே அவர்கள் கருதுகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது...ஏற்கனவே 1958 இல் அவர்கள் அடித்தப் பொழுது பொறுத்துக் கொண்டோம்...ஆனால் அவர்கள் மாறியபடி தெரியவில்லை...இப்படியே போனால் நாம் என்ன ஆவது தந்தையே...நாம் இருவரும் தனி நாடுகளாக இருந்தவர்கள் தானே...தனியாகப் பிரிந்து விடலாமே...என்ன சொல்லுகின்றீர்?" என்று இளைஞர்களின் மத்தியில் புதிதாக எழுந்த சிந்தனையை தந்தை செல்வா பொறுமையாகப் பார்த்தார்.
"இல்லை இளைஞர்களே..உங்களின் உணர்ச்சிகள் எனக்குப் புரிகின்றன...ஆனால் நாம் தனி நாடு கோர வேண்டிய அளவிற்கு பிரச்சனைகள் மோசமாகவில்லை என்றே நான் எண்ணுகின்றேன்... பேசிப் பார்ப்போம்...நிச்சயம் உண்மை வெல்லும்..." என்றார்.
சிலருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் 'தந்தை செல்வாவே கூறி விட்டார்... இன்னும் சில நாட்களுக்கு பொறுமையாகத் தான் இருப்போமே...நம்முடைய எதிர்ப்பினைத் தெரிவிக்க இருக்கவே இருக்கின்றது சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை போராட்டங்கள்' என்றே அகிம்சை வழியில் போராடத் தொடங்கினர்.
ஆனால் முடிவு தான் அவர்களுக்குக் கிட்டியப்பாடில்லை. அரசு வன்முறையால் அவர்களை அடைக்க முயலும்...வன்முறை கை கொடுக்கவில்லையென்றால் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்...வாக்குறுதிகளையும் அள்ளி வீசும். ஆனால் அந்த வாக்குறுதிகளோ வெறும் வார்த்தையாகவே நின்றுப் போகும்.
இந்த நிலை தான் யார் ஆட்சிக்கு வந்தாலும். சிங்களவர்கள் பெருவாரியாக இருக்கும் நாட்டினில் அவர்கள் தானே ஆட்சிக்கு வர முடியும்...அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு சில நேரங்களில் தமிழர்களின் உதவி தேவைப்படும்...அப்பொழுது தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருவோம் என்று வாக்கினைக் கொடுத்து விட்டு ஆட்சியினைப் பிடித்தப் பின்பு அவ்வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவது என்பது அனைத்து சிங்கள கட்சிகளும் செய்யும் ஒரு பொதுவான செயலாக மாறிற்று.
சில நபர்கள் உண்மையிலேயே தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணினாலும் அதற்கு சிங்கள மக்கள், பத்திரிக்கைகள், எதிர் கட்சியினர் ஆகியோரிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தமையின் காரணமாக அவர்களின் எண்ணம் வெறும் எண்ணமாகவே போயிற்று.
இவ்வாறே ஆண்டுகள் பல கடந்தன...தமிழர்களுக்கான உரிமைகளை சிங்கள அரசு நிச்சயம் வழங்காது என்ற எண்ணங்கள் தமிழர்களின் மத்தியில் நன்றாக பதியத் தொடங்கி இருந்தன.
தோல்வி அடைந்த பேச்சுவார்த்தைகள்...கிழித்து எறியப்பட்ட ஒப்பந்தங்கள்...ஏமாற்றங்கள் இவைகளை மட்டும் தான் தமிழர்களின் போராட்டங்கள் பெற்றுத் தந்துக் கொண்டு இருந்தன... புதிதாக தமிழர்களின் மரணங்களும் அங்கங்கே ஏற்படலாயின. 1948 இல் ஆரம்பித்த போராட்டங்கள் 1971 வரை இவைகளை மட்டுமே தமிழர்களுக்குத் தந்து இருந்தன.
23 வருடங்கள் தமிழர்களின் பொறுமையினை சற்று சோதித்துத் தான் பார்த்து இருந்தன. அது போதாதென்று கல்வியினை சீர்திருத்தும் திட்டம் என்று தமிழ் மாணவர்களுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானமும் தமிழ் மாணவர்களை கொந்தளிக்கச் செய்து இருந்தது.
'தமிழ் மாணவர்களுக்கு தமிழ் ஆசிரியர்கள் நேர்மையாக மதிப்பெண்கள் வழங்குவது இல்லை...அவர்களுக்கு குறுக்கு வழியில் அதிகமான மதிப்பெண்களை வழங்குகின்றனர்...அதனால் இனிமேல் தமிழ் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் மறுபரிசீலனைப் பண்ணப்படும்...கூடுதலாக நேர்மையாக தேர்வினை எழுதும் சிங்கள மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.' இது தான் சுருக்கமாக அந்தக் கல்விச் சீர்திருத்தத் திட்டம். இதன் மூலம் சிங்கள மாணவனை விட அதிக மதிப்பெண்கள் எடுத்தால் தான் தமிழ் மாணவன் தேர்ச்சி அடைய முடியும் என்ற நிலை உருவானது.
மாணவர்கள் கொதித்தார்கள்...போராட்டத்தில் இறங்கினார்கள்...அவர்களின் போராட்டங்கள் காவல் துறையினரால் ஒடுக்கப்பட்டன...பலர் கைது செய்யப்பட்டனர்...சிலர் காயங்களுடன் விடுவிக்கப்பட்டனர்...சிலர் என்ன ஆனார்கள் என்றே தெரியாது மறைந்தனர். சிங்கள அரசின் இந்த அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் இளைஞர்களை வேறு விதமான போராட்டத்திற்கு தயார் செய்துக் கொண்டு இருந்தன.
அந்தக் காலக்கட்டத்தில் தந்தை செல்வாவும் இனியும் பேச்சு வார்த்தைகள் பலன் தருமா? என்ற எண்ணத்தினில் இருந்துக் கொண்டு இருந்தார். அவரின் கட்சிக்குள்ளே 'தனி நாடு தான் தீர்வு தந்தையே...' என்ற குரல்கள் பலமாகக் கேட்கத் தொடங்கி இருந்தன. 'தனி நாடு கேட்பதற்கு காலம் கனியவில்லை என்று முன்னர் கூறியவர்களும் இப்பொழுது வேறு வழி இல்லாதவர்களாக தனி நாடு கோரலாமா என்ற எண்ணத்தில் இருந்தனர்.
தந்தை செல்வா அரசுக்கு கடிதம் எழுதினார்...'அரசே...தமிழர்களின் உரிமைகளும் அவர்களது மண்ணும் இங்கே பறிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...உங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்புகின்றோம்...நாம் சுதந்திரம் பெற்ற பொழுது எந்த கொள்கையுடன் இருந்தோமோ அதற்கு நீங்கள் மதிப்பளிப்பீர் என்றே கருதி உங்களின் பதிலினை ஆர்வத்துடன் எதிர் பார்கின்றேன்...நன்றிகள்'
பதில் வரவில்லை...ஏன் கடிதம் கிட்டியது என்ற செய்தியே வரவில்லை.
"தந்தை செல்வாவின் வழிமுறைகள் அருமையானவை தான்... ஆனால் சிங்களவர்களின் முன்னே அவை அர்த்தமற்று நிற்கின்றன...நாம் எந்த ஆயுதத்தினை எடுக்க வேண்டும் என்பதனை நம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான்...கடிதத்திற்கு பதில் இல்லையா...சரி...துப்பாக்கிச் சத்தத்திற்கு பதில் வருகின்றதா என்று பார்ப்போம்" என்று சில இளைஞர்கள் கூட்டம் களம் இறங்கத் தொடங்கியதும் அப்பொழுது தான்.
அவ்வாறு களம் இறங்கியவர்களுள் ஒருவன் தான் மாவீரன் பிரபாகரன்.
நிற்க...!!!
ஈழத்தின் வரலாற்றினைப் பற்றி இவ்வளவு தூரம் கண்டாயிற்று...25 வருட அமைதியானப் போராட்டங்கள் எவ்வித தீர்வினையும் தமிழர்களுக்கு வழங்க வில்லை. இந்நிலையில் நீங்கள் அக்காலத்தில் இருந்தீர்கள் என்றால் உங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்...?
ஒன்றுபட்ட இலங்கையில் இரண்டாம் தர குடிமக்களாக எந்நேரமும் பயத்துடன் வாழ்வீர்களா...அல்லது 'எங்கள் நாடு எங்களுக்கே' என்றுக் கோருவீர்களா?
உங்களின் நடவடிக்கை சிந்தனை எவ்வாறு இருக்கும்?
'எங்களின் நாடு எங்களுக்கே...உரிமைகளை இழந்து வாழ நாங்கள் அடிமைகள் அல்ல...எங்களின் உரிமைகளை நீ மறுக்கின்றாயா? நல்லது அதை நாங்களே எடுத்துக் கொள்கின்றோம்...!!!' என்பதே உங்களின் சிந்தனையாக இருக்கும் என்றால் உங்களின் சிந்தனை தான் அன்றைய ஈழத் தமிழ் இளைஞர்களின் சிந்தனை.
அதுவே தான் பிரபாகரனின் சிந்தனை!!!
தேவை தனி ஈழம்... இனியும் சிங்களவனிடம் இருந்து எந்தப் பிச்சையும் தேவை இல்லை.
மோதிப் பார்பதற்கு நாங்கள் தயார் என்றே தமிழ் இளைஞர்கள் களம் இறங்க ஆரம்பித்தனர்.
தொடரும்...!!!
சில குறிப்புகள்:
1) தனி ஈழம் என்றக் கோரிக்கைகள் எழும் என்று 'சிங்களம் மட்டுமே' என்றச் சட்டத்தினை பண்டாரநாயகா என்று கூறினாரோ அன்றே பல சிங்களத் தலைவர்கள் கூறி இருந்தனர். சம சமாச கட்சித் தலைவரான டாக்டர். கொலவின் ஆர்.டி. சில்வா 'இரு மொழிகளென்றால் ஒரு தேசம் உருவாகும்...ஒரு மொழி என்றால் இரு தேசங்கள் உருவாகும்' என்றே முன்னர் கூறி இருந்தார்.
2) தந்தை செல்வா முதல் முறையாக தனி நாடுக் கோரிக்கையினை 1973 ஆம் ஆண்டில் தான் முன் வைக்கத் தொடங்குகின்றார்...25 ஆண்டுகள் ஒன்றுபட்ட இலங்கையில் வாழ முயற்சிகள் செய்த அவர் இறுதியில் சிங்களர்களிடம் தமக்கு எவ்வித நியாயமும் கிடைக்கப் போவதில்லை என்று அறிந்தப் பின்னரே தனி நாடுக் கோரிக்கையினை முன் வைக்கின்றார்.
3) சுதந்திர இலங்கையின் முதல் தேசியக் கொடி முழுக்க முழுக்க சிங்களர்களைக் குறிப்பதாக இருந்தது...பின்னர் 1951இல் தான் அதில் தமிழர்களைக் குறிக்க சிகப்புக் கோடும் இசுலாமியர்களைக் குறிக்க பச்சைக் கோடும் சேர்க்கப்பட்டன.
4) 1964 ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 7 இலட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவிற்கு திரும்ப அனுப்பப்பட்டனர்.
ஒரு வேண்டுகோள்:
நண்பர்களே இப்பொழுது நீங்கள் ஈழத்தின் வரலாற்றையும் 'தனி ஈழம்' என்ற கோரிக்கை எழுந்த வரலாற்றினையும் அறிந்து இருப்பீர்.
தனி ஈழம் என்ற கோரிக்கை நியாயமானதான ஒன்றாக நீங்கள் உணருகின்றீர்களா?
அவ்வாறு உணர்ந்தீர்கள் என்றால் அதனைப் பற்றிய தகவல்களையும் உண்மையினையும் நம்மால் இயன்ற அளவுப் பரப்புங்கள்... போராடுபவர்களுக்கு இயன்ற வண்ணம் உதவியையும் ஆதரவினையும் வழங்குங்கள்...போராடுங்கள்....மடிந்துக் கொண்டிருக்கும் நம் மக்களுக்கு ஒரு வாழ்வளிக்க நம்மால் இயன்றதெல்லாம் செய்யலாம்...அல்லது அதனைப் பற்றிய விழிப்புணர்வினையாவது பரப்பலாம்.
யாராவது..."அவங்களோட நாட்டுக்கு வேல செய்றதுக்கு போயிட்டு எங்களுக்குன்னு தனி நாடு கொடு அப்படின்னு கேட்டா அவன் தந்துருவானோ...இல்ல அப்படி கேக்குறதும் சரியான ஒண்ணா...போனோமா வேலயப் பார்த்தோமா...வந்தோமான்னு இல்லாம தனி நாடு கேட்டா அவன் அடிக்கத் தான் செய்வான்" என்றுக் கூறினால் அவரின் கூற்றில் உள்ளப் பிழை நமக்கு இன்று தெரியும் தானே...அவரின் அறியாமையை விலக்குவோம்.
இல்லை தனி ஈழக் கோரிக்கை சரியானதொன்று இல்லை என்று நீங்கள் கூறினால் ஏன் அவ்வாறுக் கூறுகின்றீர்கள் என்றும் கூறுங்கள்...உங்களின் கருத்துக்களை நாங்கள் அறிந்துக் கொள்ள அது மிக்க உதவியாக இருக்கும்.
நன்றி...!!!
_______
அறிந்துக் கொள்ள சில விடயங்கள்
1) சிங்களவர்கள் இலங்கையின் பூர்வீகக் குடியினரா?
இல்லை. சிங்களவர்கள் என்பவர்கள் கி.மு நான்காம் நூற்றாண்டு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்த கலிங்கத்துப் பகுதியில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு இலங்கைக்கு பிழைத்துப் போன இளவரசன் விஜய சிங்கனின் வம்சாவழியினரே ஆவர்.
அவர்கள் இலங்கைக்குப் போவதற்கு முன்னரே அங்கே தமிழர்கள் வாழ்ந்துக் கொண்டு தான் வந்திருக்கின்றனர். இதனை விளக்கும் வண்ணம் இலங்கை அரசாங்கமே ஒரு தபால் தலையினை வெளியிட்டு உள்ளது.
2) அப்படி என்றால் அங்கே தமிழர்களும் வசித்து வந்தார்கள் என்றுக் கூறுகின்றீர்களா?
ஆம். கி.பி 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இலங்கை முழுவதையும் பிடிக்கும் வரை இலங்கையில் தமிழர்கள் தனியாக ஆண்டுக் கொண்டு இருந்தனர்...சிங்களவர்கள் தனியாக ஆண்டுக் கொண்டு இருந்தனர். இலங்கை என்றுமே ஒரே நாடாக இருந்தது கிடையாது. பல்வேறு நாடுகள் இலங்கையில் இருந்து வந்துக் கொண்டு தான் இருந்தன.
3) இலங்கை ஒரே நாடாக இருந்தது கிடையாது என்றுக் கூறுகின்றீர்களே...ஆனால் இன்று அது ஒரே நாடாகத் தானே இருக்கின்றது. இது எவ்வாறு எப்பொழுது நிகழ்ந்தது?
ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இலங்கை ஒரே நாடாக மாற்றப்படுகின்றது. இது நடக்கும் காலம் 1831 ஆம் ஆண்டு. தமிழர்கள் ஆண்ட பகுதியினையும், சிங்களவர்கள் ஆண்ட பகுதியினையும் ஒன்றாக இணைத்து ஒரே நாடாக மாற்றியவர்கள் ஆங்கிலேயர்களே.
4) தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடியினர் என்றுக் கூறுகின்றீர்கள். ஆனால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பிழைக்கச் சென்றவர்கள் தான் தமிழர்கள் என்றும் அவ்வாறு பிழைக்கச் சென்றவர்கள் எவ்வாறு தனி நாடுக் கோரலாம் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றனவே...அது ஏன்?
இலங்கையில் இன்று இரு வகையான தமிழர்கள் இருக்கின்றனர். ஒரு வகையினர் ஈழத்தினையே பூர்வீகமாகக் கொண்டத் தமிழர்கள். மற்றொரு வகையினர் இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்களால் இலங்கையின் மலைத் தோட்டங்களின் பணிப்புரிய அழைத்துச் செல்லப்பட்ட இந்தியத் தமிழர்கள். இவர்கள் இருவருக்கும் வேறுபாடுகள் உண்டு.
அந்த வேறுபாட்டினை அறியாது தான் இலங்கையில் இருக்கும் அனைத்து தமிழர்களும் இந்தியாவில் இருந்துச் சென்ற தமிழர்கள் என்ற தவறானக் கருத்து இங்கே நிலவிக் கொண்டு இருக்கின்றது.
மேலும் 1964 ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 7 இலட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவிற்கு திரும்ப அனுப்பப்பட்டும் விட்டனர்.
5) சரிங்க...தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடியாகவே இருக்கட்டும்...ஆனால் அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்று கருதாமல் தனி நாடுக் கோருவது சரியா?
தனி நாடு என்றக் கோரிக்கை திடீரென்று எழுந்த ஒன்று அல்ல. மேலும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து வாழவே எண்ணினர். ஆனால் காலங்கள் செல்ல செல்ல சிங்களவர்களின் செயல்களால் தமிழர்கள் தாங்கள் தங்களது உரிமைகளோடு வாழ்வதற்கு தனி நாடினைப் பெறுவதனைத் தவிர வேறு வழி இல்லை என்பதனை உணர்ந்தே 'தனி ஈழம்' என்றக் கோரிக்கையை முன் வைக்க ஆரம்பித்தனர்.
இலங்கை சுதந்திரம் பெற்றது 1948 ஆம் ஆண்டில். தமிழர்கள் தனி ஈழம் என்றக் கோரிக்கையினை முன் வைக்க ஆரம்பித்தது 1973 ஆம் ஆண்டில் இருந்து தான். அதாவது சுமார் 25 ஆண்டுகள் அமைதியாக ஒன்றாக வாழ முயற்சிகள் செய்து, அவைகள் அனைத்தும் பலன் தராது சென்ற பின்னர் தான் தனி நாடு வேண்டும் என்றக் கோரிக்கையை தமிழர்கள் அங்கே முன் வைக்கின்றனர்.
6) அதற்காக ஆயுதப் போராட்டத்தினை தான் முன்னெடுக்க வேண்டுமா?
ஈழத் தமிழர்கள் கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியான காந்திய முறையில் தான் தங்களது கருத்துக்களையும் எதிர்ப்புக்களையும் தெரிவித்துக் கொண்டு வந்தனர். தந்தை செல்வா என்ற ஒரு காந்தியவாதியின் தலைமையில் தான் 30 ஆண்டுகளாக தமிழர்கள் போராடினார்கள்.
ஆனால் அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்தும், தமிழர்களின் மேல் வன்முறையினை பயன்படுத்தியும் சிங்கள அரச தொடர்ந்து தமிழர்களை ஒடுக்கியதைக் கண்ட இளைஞர்கள் சிலர் தான் பின்னர் ஆயுதப் போராட்டங்களில் இறங்கினர்.
எனவே தமிழர் போராட்டங்கள் என்பது ஆரம்பத்தினில் இருந்தே வன்முறையினை அடிப்படையாகக் கொண்டு இருந்த ஒரு போராட்டம் அல்ல...காந்திய வழியிலான போராட்டம் நீண்ட காலங்களுக்கு பின்னரே ஆயுதப் போராட்டமாக மாறி இருக்கின்றது.
காந்தி வாழ்ந்த மண்ணில் தான் பகத் சிங்கும் சுபாஷ் சந்திர போசும் செம்பகராமன் பிள்ளையும் தோன்றி இருக்கின்றார்கள்.
7) தனி ஈழம் தான் தீர்வு என்கின்றீர்களா?
ஒன்றரை இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். பிஞ்சுகள் என்றுக் கூட பார்க்காது பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். சரணடைந்த மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்னரும் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல வழி இல்லாமல் அகதிகளாக தமிழர்கள் அலைந்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களின் இடங்களின் சிங்களர்கள் இடம் பெயர்ந்து நாட்கள் பல ஓடி விட்டன.
இன்றும் சிங்களப் படைகளில் பெரும்பான்மையானவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே நிலைப் பெற்று இருக்கின்றன. சுதந்திரம் இல்லாத அடிமைகளாகவே தமிழர்கள் அங்கே உலாவிக் கொண்டு இருக்கின்றனர்.
இத்தனை இழப்புகளுக்கு பின்னரும் சிங்களவர்களோடு சேர்ந்து தமிழர்கள் வாழ முடியுமா இல்லை வாழ்ந்தாகத் தான் வேண்டுமா?
ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு சிங்களவர்களும் தமிழர்களும் தனித் தனி நாடுகளைக் கொண்டு ஆண்டு வந்தவர்கள் தானே. அப்படி இருக்க தமிழர்கள் ஆண்ட பகுதியை தமிழர்களே மீண்டும் பெறுவது என்பது நியாயமான கோரிக்கை தானே.
மாபெரும் இழப்புகள் இலங்கையில் நம் இனம் கண்டிருக்கின்றது. ஒரு இனப் படுகொலையே அங்கே நிகழ்த்தப்பட்டு இருக்கின்றது. இதில் இருந்து மீளவும் சுய மரியாதையுடன் சுதந்திரமாக தமிழர்கள் வாழவும் அவர்களுக்கு அவர்களின் உரிமை வேண்டும்.
அவர்களுக்கு உரிமை வேண்டும் என்றால் தனி ஈழம் மலர வேண்டும்.
அதற்கு நமது குரல்கள் வேண்டும்...!!!
தமிழர்களின் தாகம்... தனி ஈழத் தாயகம்...!!!
_________
தமிழர் - திராவிடர் - ஆரியர்
இன்றைக்கு ஈழத்திற்காக மாபெரும் எழுச்சி தமிழர்களின் மத்தியில் எழுந்துள்ளது...'ஈழத்தில் உள்ள தமிழர்கள் காக்கப்பட வேண்டும்...அவர்கள் உரிமையோடும் சுதந்திரத்தோடும் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும்...அதற்கு அவர்களுக்கென்று தனி நாடு வேண்டும்...அதில் சிறிதளவும் மாற்றுக் கருத்துக்கள் எங்களிடம் இல்லை...கூடுதலாக தமிழர்களின் மேல் கொடூரமான இனப்படுகொலையினை ஏவி விட்ட அனைத்து நபர்களின் மேலும் நேர்மையான விசாரணையும் அதற்கேற்ற தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.' இதுவே தான் அனைத்து தமிழர்களின் குரலாக இன்று தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இக்குரல்களுக்கு எதிராக ஒலிக்கும் சில குரல்களையும் இந்நேரத்தில் நாம் இனம் காண வேண்டி இருக்கின்றது.
"இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காது. அங்கு நடந்தது இனப்படுகொலை அல்ல..." என்று காங்கிரஸ் தரப்புக் கூறுகின்றது.
"இலங்கையை போர் குற்றவாளியாக அறிவிக்க முடியாது..." இது பா.ஜ.க கட்சியினரின் கூற்று.
"இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து வாழவே விரும்புகின்றனர்..." இது RSS இன் கூற்று.
போராடும் தமிழ் இளைஞர்களை 'தமிழ் பொறுக்கிகள்' என்று சு. சுவாமி வலைத்தளங்களில் குறிப்பிட்டு இருக்கின்றார்.
இப்பொழுது நாம் காண வேண்டியது அரசியல் அளவில் அவர்களுள் பலவிதமான வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்கள் விடயத்தில் மட்டும் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்புவது ஏன்?
இக்கட்சிகள் அனைத்தும் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் தாக்கப்பட்ட பொழுதும் ஒற்றுமையாக மௌனம் காப்பது ஏன்?
ஏன் தமிழர்களின் மீது மட்டும் இத்தனை வன்மம்?
இந்தக் கேள்வியினை நண்பர் ஒருவருடன் விவாதித்தப் பொழுது அவர் கூறிய விடை,
'ஆமாம்...அந்தக் கட்சிகளினால் தமிழகத்துல ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியாது...அதுனால தான் அவன் எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் அப்படின்னு விட்டுட்டு அவன் எந்த இடத்துல ஜெயிக்க முடியுமோ அந்த இடத்தை மட்டும் பார்த்துக்கிறான்..."
ஆனால் இவ்விடையினை ஏனோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம்,
1) எந்த கட்சியானாலும் சரி மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களிலும் இருந்து குறிப்பிட்ட அளவு தொகுதிகளை வென்று இருக்க வேண்டும். அந்நிலையில் தமிழகத்தில் அவர்களுக்கு செல்வாக்கு இல்லை என்றால் செல்வாக்கினைப் பெறவே கட்சிகள் முயற்சி செய்யுமே அன்றி, அவர்களே அவர்களின் செல்வாக்கினைக் குறைத்துக் கொள்ளும் வண்ணம் செயலாற்ற மாட்டார்கள்.அவ்வாறே அவர்கள் செயலாற்ற ஆரம்பித்தனர் என்றால் விரைவில் அவர்களின் கட்சி அழிந்து விடும்.
2) அந்நிலையில் தமிழகத்தில் மட்டும் அக்கட்சிகளுக்கு செல்வாக்கு இல்லாமல் போனதற்கும் அவர்கள் இழந்த செல்வாக்கினை மீண்டும் பெறுவதற்கு முடியாமல் இருப்பதற்கும் அடிப்படையானக் காரணம் ஏதேனும் நிச்சயம் இருக்க வேண்டும். எனவே மேலே உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு என்ன காரணம் என்று நாம் காண வேண்டும் என்றால் நாம் தமிழகத்திலே அக்கட்சிகள் கால் ஊன்றாதிருப்பதற்கு என்ன காரணம் என்றே காண வேண்டி இருக்கின்றது.
அப்படி அந்த காரணத்தினை நாம் தேடினோம் என்றால் அதற்கு விடையாய் கிடைப்பது திராவிடர் இயக்கங்கள். அந்த இயக்கங்கள் இங்கே எழுந்தக் காரணத்தினாலேயே காங்கிரஸ், பா.ஜ.க போன்ற கட்சிகளால் இங்கே வேரூன்ற முடியாத நிலை ஏற்பட்டு இருக்கின்றது.
அதாவது பிராமணர்களின் ஆதிக்கத்தினை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த இயக்கத்தின் காரணமாக பிராமணர்களின் கட்டுப்பாட்டினில் இருக்கும் கட்சிகள் தமிழகத்திலே வேரூன்ற முடியாத நிலை இருக்கின்றது. நிற்க.
இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய மற்றுமொரு விடயம் திராவிடர் என்றச் சொல் 'தெலுங்கர்கள், கன்னடியர்கள், மலையாளிகள்' போன்றோரையும் தமிழரையும் குறிக்கும் ஒரு சொல் என்றே இன்றைக்கு திராவிடம் பேசுவோர் கூறுகின்றனர்.
ஆனால் அதனை தெலுங்கர்களோ, கன்னடியர்களோ அல்லது மலையாளிகளோ ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கே திராவிடர் என்றச் சொல்லோ அல்லது திராவிடர் இயக்கங்களோ பரவவும் இல்லை. இந்நிலையில் திராவிடர் என்றச் சொல் தமிழர்களை மட்டுமே குறிக்கக் கூடியச் சொல்லாக அமைந்து இருக்கின்றது. இதனை அம்பேத்கர் அவர்களும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களுமே கூறி இருக்கின்றனர்.
அப்படி இருக்க தமிழகத்தினில் தமிழர்களுக்கு மத்தியில் தோன்றிய தமிழர் இயக்கங்களின் வாயிலாக ஆரியர்கள்/பிராமணர்களின் இயக்கங்களும் கொள்கைகளும் தமிழகத்திலே பின்னடைவு அடைகின்றன. மீண்டும் அக்கொள்கைகளோ அந்த இயக்கங்களோ தமிழகத்திலே மலரப் போவதே இல்லை.
இந்த நிலை தமிழகத்தில் மட்டுமே நிலவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் ஆரியர்கள் பயப்படுகின்றனர். ஒருவேளை இந்தத் தெளிவு மற்ற மாநிலங்களுக்கும் பரவி விட்டால், அங்கும் நமது செல்வாக்கு மலிந்து விட்டால்... நாம் என்ன செய்வோம்? நாம் எங்குப் போவோம்?
அவர்களின் பயத்திற்கும் காரணமின்றி இல்லை.
இந்திய சனத்தொகையினில் அவர்களின் எண்ணிக்கை வெறும் 10% மட்டுமே... அதிலும் பிராமணர்கள் எண்ணிக்கை வெறும் 3% மட்டுமே. அந்நிலையில் மற்ற மாநிலங்களிலும் அவர்களின் செல்வாக்கு சரிந்து விட்டால், அவர்களின் வேடம் கலைந்து விட்டால்...அவர்கள் என்ன ஆவார்கள்? அவர்களின் போக்கிடம் தான் என்ன?
அதனால் தான் பிரச்சனைக்குரிய மூலத்தினை அழித்துக்கட்ட அவர்கள் உறுதியாக முயல்கின்றனர்...அரசாட்சிக் காலத்தில் அரசனைக் கைக்குள் போட்டுவிட்டு எளிதாக மக்களை தாழ்த்தியதினைப் போன்ற வசதிகளை சனநாயகம் அவர்களுக்கு வழங்கவில்லை. அதனால் தான் அவர்கள் வெவ்வேறு வழிமுறைகளைக் கையாண்டுக் கொண்டு இருக்கின்றனர்.
ஆரியர் - திராவிடர் என்ற பிரிவுகள் புரட்டு என்று கதைகளைக் கட்டி விடுவது, தங்களால் இயன்ற அளவு வரலாற்றினை மறைக்க/திரிக்க முயல்வது, பெருன்பான்மையான திராவிட மக்கள் ஒற்றுமையாக இருக்காத வண்ணம் அவர்களின் நடுவே சாதி/ மதச் சண்டைகளை ஏற்படுத்திவிட்டு வேடிக்கைப் பார்ப்பது போன்ற இவை அனைத்தையும் தாங்கள் அடிமையாக்கி வைத்துள்ள சைவ வைணவ சமயங்கள் மூலமாகவும், சூழ்ச்சியினால் பிடித்த அரசியல் உரிமையினாலும் செம்மையாகச் செய்துக் கொண்டு தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முயன்றுக் கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் தமிழும் சரி தமிழர்களும் சரி அவர்களுக்கு மிகப் பெரிய இடையூறாகத் தான் இருக்கின்றனர். பிராமணர்கள், சைவ வைணவ சமயத்தினை அடிமைப்படுத்தி வைத்து இருக்கின்றனர் என்பதனை தமிழ் இலக்கியங்கள் பறைசாட்டிக் கொண்டு இருக்கின்றன. தமிழர்களோ தங்களின் மண்ணில் பிராமண செல்வாக்கு உள்ள இயக்கங்களை துரத்தி அடித்து விட்டு இருக்கின்றனர்.
இது தான் ஆரியர்களுக்கு கவலையையும் கோபத்தினையும் வர வைக்கின்றது. சைவ வைணவ சமயங்களை அவர்கள் அடிமையாக்கி வைத்து இருப்பது அனைத்து மக்களுக்கும் தெரிந்து விட்டால் அச் சமயங்களின் மீது அவர்களுக்கு இருக்கும் பிடி போய் விடும். பின்னர் எவ்வாறு அவர்கள் தாங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்றுக் கூறிக் கொண்டு வாழ்வை வாழ்வது?
மேலும் தமிழர்களைப் போன்றே அனைத்து மக்களும் ஆரியச் சதியினை அறிந்துக் கொண்டு தெளிவடைந்து விட்டனர் என்றால் ஆரியர்கள் எங்கே செல்வார்கள்? அவர்களுடைய செல்வாக்கு வேறு எங்கே செல்லுபடியாகும்? வேறு எங்கும் செல்லுபடியாகாதல்லவா....அதனால் தான் இங்கே தமிழ் மொழியும் தமிழர்கள் அழிவதையும் மகிழ்ச்சியாக ஆரியன் கண்டுக் கொண்டு நிற்கின்றான். பிரச்சனைக்குரியவர்கள் ஒழிந்துவிட்டால் பின்னர் அவன் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா...!!!
அதனால் தான் தனி ஈழம் அமைவதை அவன் தடுக்கின்றான். ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் ஒன்றும் செய்யாது நிற்கின்றான். தன்னை இந்து மதத்தின் தலைவன் என்றுக் (பொய்) கூறிக் கொண்டு ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்களையும் இந்துக்களான தமிழர்களையும் கொன்றுக் குவித்த இராசபக்சேவினை மகிழ்ச்சியாய் திருப்பதிக் கோவிலில் வரவேற்கின்றான் (சிங்களர்கள் தங்களை ஆரியர்கள் என்றுக் கூறிக் கொள்வதும் குறிப்பிடத்தக்கது). அவர்களுக்குத் தேவை தமிழ் அழிய வேண்டும்... தமிழர்கள் அழிய வேண்டும்...ஏன் என்றால் அவைகள் அழிந்தால் தான் அவன் நிம்மதியாக மக்களை ஏமாற்றி வாழ முடியும்....!!!
இதனால் தான் திருமூலர் அன்றே பாடிச் சென்று விட்டார்...
சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட் டோ டும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே - திருமந்திரம்
இன்று ஈழத்தில் நிகழ்வதும்...இந்தியாவில் நிகழ்ந்துக் கொண்டு இருப்பதும் ஆரியத் திராவிடப் போரின் ஒருக் கட்டமே அன்றி வேறல்ல...!!!
இவை அனைத்தையும் விரிவாகக் காண முயற்சிப்போம்...!!!
தொடரும்...!!!
பி.கு:
இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன
________________________________
தொடரும்... பகுதி-4 பார்க்கவும்
யாழறிவன்... Yalarivan Jacksan