புதன், 12 நவம்பர், 2014

தமிழர்களின் சுவடுகள்தென் கிழக்கு ஆசியாவில்

தமிழர்களின் சுவடுகள்தென் கிழக்கு ஆசியாவில்

பகுதி-3

1933 இல் வல்வெட்டித்துறையில் இருந்து அமெரிக்கா சென்ற அன்னபூரணி

இன்றைய மலேசிய மலாய் இனத்தில் ஒரு பகுதியாய் மாறிகிடக்கும் மரைக்காயர் என்ற் முஸ்லிம் பிரிவினரின் பூர்வீகம் தமிழ் நாடு என்பது ஒரு சிலர்தான் அறிந்திருக்கின்றனர்.
மரக்கலத்தை கடலில் செலுத்தியதனால் மரக்காயர் என்று அழைக்கபட்டனர். அரபியர்கள் தொன்றுதொட்டு தமிழகத்துடன் வியபார நிமிற்த்தமாய் வந்து குடியிருபுக்ககளை அமைத்து தமிழர்களுடன் கலந்த்தபோது வாய்மொழியாய் இருந்த தமிழ் தாய் மொழியாகி போனது.எட்டாம் நூற்றாண்டுக்கு பிறகு தமிழ் முஸ்லிம்கள் என்ற ஒரு பிரிவாக தமிழகத்தில் உருவெடுத்தனர்.

நகுதா,(Nakhoda) பழைய மலாய் இலக்கிய கதைகளில் வரும் கடற்பயண தீரர்களை நகுதா என்றே அழைக்கப்பட்டனர். மரைக்கார், மாலிமார், செறாங்கு, சுக்காணி என்ற பெயர் தாங்கி வாழ்ந்தனர். ‘மரக்கலராயர்’ என்ற பெயர் மருவி மரைக்காயர்/மரைக்கார் ஆனதும், ‘மாலுமியார்’ என்ற சொல் மருவி மாலிம்/மாலிமார் ஆனதும் எல்லோரும் அறிந்ததே. இவர்கள் பாய்மரக் கப்பல்கள் மூலம் இலங்கை, கீழைநாடுகள் மட்டுமின்றி கல்கத்தா போன்ற நகரங்களுடனும் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தனர். [படம்: 1926-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அப்துர் ரஹீம் உஸ்மான் என்பவரால் கட்டப்பட்ட இந்த பள்ளிவாயிலுக்கு Nakhoda Mosque என்று பெயர்]
Nakhoda என்ற பெயரின் மூலத்தை ஆராய்கையில் பல சுவையான தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.

Nao + Khoda என்ற கூட்டு வார்த்தைதான் Nakhoda என்று வாதிடுகிறார் முனைவர் ஜே.ராஜா முகம்மது. இவர் “Maritime History of Coromandel Muslims 1740-1900”) என்ற ஆய்வு புத்தகத்தை எழுதிய ஆய்வாளர்.

அரபு மொழியில் Nokhoda என்றால் Chief என்று அர்த்தம். பாரசீக மொழியில் “Khoda” என்றால் மாஸ்டர் அல்லது கேப்டன் என்று அர்த்தம். “Nao” என்ற வார்த்தை “நாவாய்” என்ற சங்ககால வார்த்தையிலிருந்துதான் உருவாகி இருக்கிறது என்பது அறிஞர்களின் கருத்து.
தமிழ்நாட்டு அரசாங்கத்தின் கீழ்நாட்டுப் பழங்சுவடி நூல் நிலையம் 1950 ஆம் ஆண்டில் கப்பல் சாஸ்திரம் என்று தமிழில் ஒரு நூலை வெளியிட்டது. அந்நூல் 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. கப்பலை தமிழ் நாவாய் என்கிறது. உலக மொழிகள் பலவற்றில் கப்பலைக் குறிக்க நாவாய் என்ற சொல்லின் மரூஉச் சொற்களே பயன்படுத்தப்படுகின்றன.

''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
- (புறநானூறு - பாடல் 66)

தமிழில் ‘நாவாய்’ என்ற சொல் தொன்றுதொட்டு கப்பலைக் குறிப்பதாகும். ஆங்கிலத்தில் கையாளப்படும் ‘Naval’ , ‘Navy’ போன்ற சொற்கள் தமிழ் மொழியிலிருந்து பிறந்த வார்த்தை என்ற செய்தி நம்மைத் தலை நிமிர வைக்கிறது. கப்பலும், கப்பல் வணிகமும் தொன்று தொட்டு தமிழர்களின் கைவந்த கலையாக இருந்து வந்திருப்பதை சரித்திரம் நமக்கு எடுத்துரைக்கின்றது. தொலமி பாண்டி நாட்டுக் கடற்கரைப் பகுதியில் தரித்து நின்ற கப்பல் பற்றி தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நாவாந்துறை என்பது யாழ்ப்பாண நகருக்குள் அடங்கிய ஒரு இடமாகும். இது யாழ்ப்பாண நகர மத்தியிலிருந்து வடமேற்குத் திசையில் கடற்கரை ஓரமாக அமைந்துள்ளது. யாழ்ப்பாண மாநகரசபையின் 23 வட்டாரப் பிரிவுகளுள் ஒன்றாக நாவாந்துறையும் உள்ளது. நாவாந்துறை என்ற பெயர் நாவாய், துறை என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கையில் தோன்றியது. நாவாய் என்பது ஒரு வகைக் கடற் கலம். நாவாய்கள் கரைக்கு வந்து செல்லும் சிறிய துறைமுகமாக இருந்த காரணத்தால் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

விரிவாகச் சொல்ல வேண்டுமெனில் சங்க இலக்கியத்தில் அம்பி, நாவாய், வங்கம், படகு, தொணி, பங்றி, திமில் போன்ற பல வார்த்தைகள் கடற்போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட கலன்களை குறிப்பதை நாம் அறிய முடிகிறது. இதில் திமில், அம்பி –ன இவையிரண்டும் மீன் பிடித்தலுக்கும், பெரிய கப்பலிலிருந்து பொருட்களை துறைமுகங்களுக்கு கொண்டு வரவும் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. வங்கம், நாவாய் என இவையிரண்டும் நீண்ட கடற்பயணத்திற்கும், கடல் வர்த்தகத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மற்றொரு ஆராய்ச்சி இது. நூஹ் நபி (அலை) அவர்களுடைய பெயர் பைபிளில் “Noah” என்று அழைக்கப் படுகிறது. நூஹ் நபி (அலை) அவர்களுடைய கப்பல் “Noah’s Ark” என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. எனவே “Navy” “Naval” என்ற வார்த்தை “Noah” என்ற வார்த்தையிலிருந்து பிறந்ததாகவும் கருதப் படுகிறது.அந்த கூற்றின்படி ஆராய்ந்தாலும் தமிழின் தொன்மையை வைத்து பார்க்கும்போது, தமிழ் மொழி “மகா பிரளயம்” ஏற்பட்டதற்கு முன்பே தழைத்திருந்தது என்ற வாதத்தையும் நாம் மறுப்பதற்கில்லை.

ஆங்கில அகராதியில் “Navy” “Naval” என்ற வார்த்தையின் ஆதிமூலம் “நாவாய்” என்ற வார்த்தைதான் என்று பதிவாகியுள்ளது.
எனவே “நகுதா” (Nao + Khoda) என்ற பாரசீக/ அரபு வார்த்தையில் தமிழ் மொழியின் தாக்கம் இருக்கிறதென்பதற்கு போதுமான ஆதாரம் இருக்கிறது.
கட்டுமரம் என்ற தூயதமிழ் வார்த்தை ”கட்டமரான்” (catamaran) என்ற ஆங்கில வார்த்தையாய் உருமாறிப் போனதைப் போன்று “நாவாய்” என்ற தமிழ் வார்த்தை “Navy” “Naval” என்று ஆகியிருக்கிறதென்பது நமக்கு நன்கு விளங்குகிறது.

கடல்கடந்தும் ஏனய நாடுகளுடனெல்லாம் வணிகம் செய்து சிறப்புற்று விளங்கியதை வரலாறு கூறும். யவனர்கள், அரேபியர்களெல்லாம் கடல்கடந்து தமிழகம் வந்து வர்த்தகம் செய்ததை வரலாற்றறிஞர்களின் பிரயாணக் குறிப்புகள், பண்டையத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தகவல்கள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களெல்லாம் புலப்படுத்தும். கிழக்கிந்தியத் தீவுகள் கூட்டத்தை உள்ளடக்கிய மலேசியா சாவகம் (இன்றைய இந்தோனேஷியா), ஈழம், காழகம் (பர்மா) போன்ற நாடுகளுடனெல்லாம் தமிழர்களின் வர்த்தகம் கொடி கட்டிப் பறந்தது. யவனர்கள், அரேபியர்களெல்லாம் தமிழகத்துடன் வியாபாரம் செய்து வந்தார்கள்

பழந்தமிழர்கள் பண்ட மாற்று முறை, நாளங்காடி, அல்லங்காடி, தரைவாணிகம், கடல் வாணிகம் என்று எல்லா வகை வாணிகத்திலும் மிகவும் தேர்ச்சியுடையவர்களாக இருந்தனர்.தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்
_____

மலக்காவில் சுல்தான் அரசப்பரப்பரையை நிறுவிய பரமேஸ்வரனின் வழித்தோன்றலின் மூண்றாவது அரசன் சுல்தான் முஹாமட் ஷா ராஜா தெங்கா அல்லது ராடின் தெங்கா என்று அழைக்கப்பட்ட சுல்தான் முஹாமட் ஷா முதலிலே தன்னை ஸ்ரீ மஹாராஜா அழைத்துக் கொண்டு இந்து மன்னராகவே வாழ்ந்துள்ளார். இருப்பினும் ஒரு தமிழ் முஸ்லிம் பெண்ணை மணந்துக் கொண்டதனால் இஸ்லாமிய மதத்திற்கு மாறியவிட்டார். இல்லை என்றால் மலேசியா நாடு ஒரு வேளை இந்து நாடகவே இருந்திருக்கும்.

மலக்கா ராஜியத்தின் நான்காவது மன்னர் ஸ்ரீ பரமேஸ்வரா தேவ ஷா அல்லது ராஜா இப்ராகிம் அவர்கள் ரொக்கன் சுமத்திராவின் உள்ள அரசகுமாரியின் வழி வந்த அரசர். ராஜா இப்ராகிம் முதலிலே இஸ்லாமிய மதத்தை பின்பற்றவில்லை, இந்துவாகவே வாழ்ந்து வந்தார்.அவர் மலாக்கா தமிழ் முஸ்லிம்களுடன் பிணக்கு கொண்டிருந்தார். அவர் கொல்லப்பட்டவுடன் ராஜா காசிம் அல்லது சுல்தான் மூட்ஷாபர் ஷா அரியனையில் அமர்ந்தார். ராஜா காசிமின் தாய் தமிழ் இன வர்த்தகரின் மகள்.

மலாக்காவில் ஒவ்வொரு பெரிய ஊரிலும் தமிழர்களின் குடியிருப்புகள் இருந்தன. அவற்றை
'Pekan Keling', 'Tanjong Keling', 'Kampong Keling' என்றெல்லாம் அழைத்தனர்.
மலாக்காப் பேரரசு விளங்கிய காலத்தில் அங்கு தமிழ் வர்த்தகர்கள் மிகவும் செல்வாக்குடன் இருந்தனர். அவர்களைப் பற்றி போர்த்துகீசியப்பயணிகள் விரிவாக எழுதியுள்ளனர். அந்தத்
தமிழ் வர்த்தகர்களை அவர்கள் 'கிலிங்' என்றும் 'சிட்டி' என்றும் அழைக்கின்றனர். 'சிட்டி'
என்பது 'செட்டி' என்ற சொல்லின் போர்த்துகீசிய மருவல்தான். அவர்கள் வசித்த நகர்ப்
பகுதியே மலாக்கா நகரின் ஏனைய பகுதிகளையெல்லாம்விட பெரிதாகவும், அழகாகவும்,
உன்னதமாகவும், செல்வம் கொழிக்கும் இடமாகவும் இருந்ததாக அந்தப் பயணிகளின்
குறிப்புகள் கூறுகின்றன. அந்தப் பகுதி இன்றும் மலாக்காவில் 'தஞ்சோங் கிலிங்' என்ற
பெயரில் விளங்குகிறது.

14 ஆம் நூற்றாண்டில் மலாக்காவுக்குப் பரமேசு வரா என்ற இந்து மன்னன் பெயர் சூட்டியது உண் மையாயினும், இதைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக மாற்றிய பெருமை மலாக்கா செட்டி மார்களையே சாரும். மலாக்கா அரண்மனையில் 'Dato Bendahara' போன்ற பெரும்பதவிகளில் இடம் பெற்றதோடு, மீனவ கிராமமாக இருந்த மலாக்காவை வணிக விருத்தி செய்து அளப்பரிய பங்கை யாற்றியுள்ளனர். மலாய் இலக்கிய நூலான 'Sejarah Melayu' வில் இவர்கள் வசித்த கம்போங் கிலீங் என்ற கிராமம் பரபரப்பான வணிகத்தில் இயங்கியதைக் குறிப்பிட்டுள்ளது. மலாக்கா வாழ்மக்களும் இசுலாத்திற்கு மாறியபோது மலாக்கா செட்டிமார்களில் சிலரும் மதம் மாறினர் என்பதை மறுப்பதற்கில்லை. எஞ்சிய சிலரே இந்து பண்பாட்டில் உறுதிப்பாட்டுடன் இருந்தனர். அவர்களின் வழித்தோன்றல்கள்தான் இன்றிருக்கும் மலாக்கா செட்டிகள் தற்போது 50 குடும்பங்கள்தான் இருக்கின்றன.

நகர விரிவாக்கத்திற்காக மலாக்கா கடற்கரையைத் தூர்த்தபோது மண்வாரி இயந்திரங்கள் தோண்டிய மணலில் இந்தியத் துணைக் கண்டத்தின் குறிப்பாகத் தமிழகத்துப் புராதன பொருட்களும் சில சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில இப்பொழுது காஜா பெராங்கில் (காஞ்சிபுரம்) உள்ள மலாக்கா செட்டி தொல்பொருட்காட்சிச் சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன...
_______

Castanheda என்னும் போர்த்துகீசிய பயணியார் ஒருவர் மலாக்காவின் மிகச் சிறந்த காலகட்டத்தில் வந்தவர். அவர் 1528-இலிருந்து 1538வரைக்கும் மலாக்காவில் இருந்தவர்.அவர் கிலிங்’ களைப்பற்றை எழுதியிருக்கிறார்.

காஸ்டானெடா: "இந்த நகரத்தின் வடக்குப் பாகத்தில் கலிங் என்னும் வணிகர்கள் வசிக்கிறார்கள்('இந்தியாவின் கலிங்க நாட்டைச் சேர்ந்த க்லிங்'-சிரியர் குறிப்பு). இந்தப் பகுதியில் மலாக்கா நகரம் வேறெங்கையும்விட இன்னும் பெரிதாக இருக்கிறது. மலாக்காவில் வெளிநாடுகளைச்செர்ந்த பல வணிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்குரிய இடங்களில் அவர்களுக்குள் வசித்துக்கொள்கிறார்கள். அவர்களில் முஸ்லிம்களும் இருக்கின்றனர்; முஸ்லிம்/கிருஸ்துவர் அல்லாதாரும் இருக்கின்றனர். முஸ்லிம் அல்லாதார்கள் பளையக்காட் பகுதியிலிருந்து வந்தவர்கள்".

பளையக்காட் என்பது தொண்டைமண்டலம். ஆனாலும் சோழமண்டலத்தையும் சேர்த்தே அப்பெயரால் குறிப்பிட்டிருக்கிறார்கள். பிற்காலத்தில் பலெக்காட் என்றும் புலிக்காட் என்றும்
இந்தப் பிரதேசம் வழங்கலாயிற்று. தமிழ் முஸ்லிம்களை பலெக்காட் சாமி என்று மலாய்ககாரர்கள் குறிப்பிட்டதுண்டு. பிற்காலங்களில் பெருமளவில் கைலி, லுங்கி, சாரொங் ஆகியவை பளையக்காட்டிலிருந்து கொண்டுவரப்பட்டன. ஆகவே கைலிக்கே பலேக்காட் என்னும்
பெயர்கூட ஏற்பட்டுவிட்டது.

காஸ்டானெடா: "இந்த முஸ்லிம் அல்லாத வணிகர்கள் மலாக்காவிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்கள். அவர்கள் மிகப்பெரிய செல்வந்தர்கள். இந்தக் காலகட்டத்தில் உலகிலேயே
மிகச் சிறந்த பெரிய வணிகர்கள் அவர்கள்தாம்".

காஸ்டானெடா: "அவர்களுடைய செல்வத்தை அவர்கள் எத்தனை பஹார் பொன் என்பதை வைத்தே கணக்கிடுவார்கள். அவர்களில் சிலர் 60 குவிண்டால் பொன்னை வைத்திருக்கிறார்கள். ஒரு குவிண்டால் என்பது 700 கீலோகிராம்களுக்குச் சமம்".
காஸ்டானெடா: "பெரும் மதிப்பு மிக்க சரக்குகள் நிறைந்த கப்பல்கள் மூன்று அல்லது
நான்கை ஒரே நாளில் சரக்குகளுடன் அப்படியே முழுசாக வாங்கி அவற்றின் சரக்குகளை
மாற்றி ஏற்றி அவற்றிற்குரிய விலையை உடனேயே பட்டுவாடா செய்யமுடியாதவர்களை
அவர்கள் வணிகர்களாகவே கருதுவதில்லை".

“காஸ்டானெடா: "ஆகவே இந்தத் துறைமுகம்தான் உலகிலேயே மிக முக்கியமானது.
உலகத்தோர் அறிந்த அளவில் மிக விலையுயர்ந்த சரக்குகளும் பண்டங்களும் உடைய
நகரம் இதுதான்.”

காஸ்டானெடாவின் கூற்றுப்படி, பளையக்காட் என்னும் தொண்டைமண்டலம் சோழ
மண்டலம் ஆகியவற்றிலிருந்து வரும் முஸ்லிம்/கிருஸ்துவர் அல்லாத வணிகர்களையும்
அவர் கலிங் என்றுதான் குறிப்பிடுகிறார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சோழர்களின் ஆதிக்கம் மேலோங்கிய சமயத்தில்
மட்டும் தமிழர்களை 'சூலியா'(சோழியன்=சோழநாட்டான்) (Chulia) என்று அழைத்
திருக்கின்றனர். சீனர்களும்கூட 'Chu-Li-Yen' என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் பிற்காலத்தில் இச்சொல் நாகைப்பட்டினத்திலிருந்துவந்த தமிழ்
முஸ்லிம்களைக் குறிப்பிட மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து துணிமணிகள், யானைத்தந்தம், அரிசி, கோதுமை முதலியவற்றைக் கொண்டுவந்து விற்றுவிட்டு, அதற்குப் பதிலாக மிளகு, தகரம், பீங்கான், வாசனைத்திரவியம், பொன் முதலியவற்றை வாங்கிச் சென்று வியாபாரம் செய்துள்ளனர்.
கி.பி 15-நூற்றாண்டுவாக்கில் மலாயாவில் மலாக்கா நகரம் வணிகச் சந்தையாக சிறந்து விளங்கியது. Chulia Street என்னும் வீதியில் இருக்கிறது. சூலியா என்னும் சொல்

தமிழ் முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்று பினாங்கில் இருக்கிறது. அதன் பெயர் 'Mesjid
Kapitan Keling'. 'Kapitan Keling' என்பது அக்காலத்து மலாய்க்கார மன்னர்களால் நியமிக்கப்பட்டதொரு பதவி. தமிழர்களின் நாட்டாண்மையாக விளங்குபவருக்குரியது. மேற்கூறிய பள்ளிவாசல்,
தமிழ் முஸ்லிம்களைக் குறிக்கும் சொல். சோழியர் என்னும் பெயரிலிருந்து மலாய்
மொழிக்குச் சென்று அங்கு அது சூலியா என்று மருவியிருக்கிறது.
________

கி.பி 4 நூற்றாண்டில் இருந்து 8ம் நூற்றாண்டு வரைக்கும் பல்லவ வியாபரிகள் கெடாவுடனும் அதன் சுற்றியுள்ள நாடுகளுடன் வர்த்தகம் செய்தார்கள். அப்போழுது சமஸ்கிருதம் ,பாலி, தமிழ் கலந்த மலாய் மொழியை உண்டாக்கினார்கள்.கி.பி 12 நூற்றாண்டில் மலாய் வர்த்த்கர்கள் சுமத்திராவில் இருந்து ஸ்ரீவிஜய அரசு மலாய் மொழியை வர்த்தக மொழியாய் கெடாவில் உபயோகித்தார்கள்.கால ஒட்டத்தில் மலாய் மொழியில் பெர்சியன்,தமிழ்,சீனம்,தெலுங்கு ஹிந்தி குஜ்ராத்தி வங்காளி,பர்மியம். சீயாம்,போர்த்திகீஸ்,டச்சு, ஆங்கிலம், அரபி முதலிய மொழிகள் கலந்து கலப்பு மொழியாய் இன்று திகழ்கிறது.

மலாயா என்பது இரண்டு தமிழ் வார்த்தையின் கோர்வைதான் மலை (malay) மற்றும் ஊர் (ur) மலையூர் (malayur) என்று அழைக்கப்பட்டது. டாக்டர் திருநாவுக்கரசின் கூற்றின்படி மலேசியா என்பது ஆசியாவின் மலை என்பதாகும். (malayadvupa) மலைதீப என்று கூறப்படும் சுமத்திரா தீவில் மலாயு (malay-ur) எனற ஊர் இருகின்றது. தீசிங் i-tsing (671 A.D) என்ற சீனா யாத்திரி அந்த மலாய் நாட்டு இராஜியத்திற்கு வருகை புரிந்திருகின்றார்,பின்பு அந்த ராஜியம் ஜாம்பி என்று அழைக்கப்பட்டது. வரலாற்று ஆசிரியர்கள் j.v Sebastian மற்றும் A.w Hamilton போண்றோர்கள் வராலாற்றுக் காலம் தொட்டு தமிழ் மொழி வியாபரா மொழியாக மலேசியாவிலும் இந்தோனேசியாவில் இருந்த்தாகவும் அது 15 ஆம் நூற்றாண்டில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு வரைக்கும் தமிழ் வியாபார மொழியாக செழுமைப் பெற்று விளங்கியது.17 ஆம் நூற்றாண்டில் கிழ்கிந்த்தியா டச்சு கம்பனி மலாக்கவில் வியபார நிமிந்த்தமாய் கடிதம் எழுது ஒரு மொழியாய் தமிழை உபியோகப்ப்படுத்தியதற்கான குறிப்புகள் உண்டு..19 ஆம் நூற்றாண்டில் வியபார கணக்கு வழக்குகளை செய்ய பெரிய அளவில் தமிழ் மொழி உதவியது என்றும் வரலாற்று சாண்றுகள் உண்டு. மனக்கணக்கும் வாய்ப்பாடும் தமிழர்களின் அறிவு பொக்கிஷம் அண்றோ

கப்பல், பெட்டி, மீசை, ரோமம், ரூபம், ரகம், திரி, ஜெயம், ஆகம்ம், சக்தி, தேவி, புத்ரி, குரு, பாக்கி போன்ற நூற்றுக்கணக்கான சொற்கள் அப்படியே எவ்வித மருவுமின்றிப் பயன்படுத்தப்படுகின்றன. சிங்கம்- சிங்கா, தருமம்- தருமா, சங்காசனம்- சிங்காசனா, நாமம்- நாமா, நீலம்-நீலா, உபவாசம்- புவாசா, பாஷை- பகாசா, சாஸ்திரம்- சாஸ்திரா, வரம்- சுவாரா, கங்கை- சுங்கை என்பன சில. இன்னும் சில சொற்கள் முன்பின் இணைப்புப் பெற்று வழங்குகின்றன. கும்பல்- கும்புலான், ராஜாங்கம்- அரசாங்கம் என்பன போன்று ஏராளமாகும். இவ்வாறு மலாய்மொழியைத் தமிழோடும் தமிழ் பண்போடும் சேர்ந்து வளர்த்த பங்கினை மறைக்க முடியாது..இது போன்ற வரலாற்றுச் சான்றுகளைக் கெடாவிலுள்ள பூஜாங் பள்ளத்தாக்கின் அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்தும். தமிழ் மன்னர்களின் வருகையாலும், வணிகர்களின் வருகையாலும் மலாய் மொழியும்,கலையும் பண்பாடும் பழக்கவழக்கங்களும் வளம் பெற்றன என்றும் கூறலாம்.

சிங்கப்பூர் சிங்கம் +ஊர் சிங்கப்பூர் அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளை கொண்டதும் ஆகும் சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது. மலாய் வரலாற்றின் படி 14ம் நூற்றாண்டு சுமாத்திரா மலாய் இளவரசர் சாங் நிலா உத்தமா, ஒரு கடும் புயலின் போது இந்த தீவில் ஒதுங்கினார். அப்போது அவர் சிங்கம் போல ஒரு மிருகத்தை பார்த்து, சிங்கம் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு சிங்கபூரா என்று அழைத்ததாக வரலாற்றுக்கதையும் உண்டு .
சிங்கப்பூரின் வரலாறு 14 ஆம் நூற்றாண்டிலிருந்து குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம் என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. 14ம் நூற்றாண்டில் அது துமாசிக் என்ற பெயர் கொண்ட நகரமாக காட்சியளித்தது. அது சுமாத்திராவில் இயங்கிய ஸ்ரீ விஜய சாம்ராச்சியத்தின் ஆட்சிக்கு உட்பட்டது. சிங்கை தீவில் ஒரு நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் தென்கிழக்காசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது என்று மலாய் மக்களின் வரலாறு கூறுகிறது.

ஸ்ரீவிஜய பேரரசு மறைந்த பிறகு, துமாசிக் மற்ற அரசுகளால் தாக்கப்பட்டது. ஜாவாவில் இருந்த மாஜாபாஹித் பேரரசு, தாய்லாந்தில் இயங்கிய அயுத்திய அரசு போன்றவை அந்த நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயன்றன. தாய்லாந்தின் அயுத்திய அரசு குறைந்தது ஒரு முறை துமாசிக் தீவைத் தாக்க முயன்று தோல்வி அடைந்தது என்று வரலாறு காட்டுகிறது. அந்நேரத்தில் - 15ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் - துமாசிக் நகருக்கு "சிங்கப்பூரா" என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது

.1819-ஆம் ஆண்டில் ஸ்டாம் போர்டு ராகபிள்ஸ் சிங்கப்பூர் வந்திறங்கிய பின்னர் இத்தீவு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. சிங்கப்பூர் ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் இருந்த பாறையில் இந்திய மொழி போன்று செதுக்கப்பட்டிருந்த சொற்களை அவரின் பயணக் குழு கண்டுபிடித்தபோது, சிங்கப்பூரில் இந்து செல்வாக்கு இருந்திருக்க வேண்டும் என்பதை அவர் மறு உறுதிப்படுத்தினார்

ராகபிள்ஸ்வுடன் முன்ஷி அப்துல்லா எனும் மொழி பெயர்ப்பாளர் ஒருவரும் பயணம் செய்தார். முன்ஷி அப்துல்லா தமிழகத்துக் கடற்கரைப்பட்டினமான நாகூரைச் சேர்ந்தவர். தமிழில் பாண்டித்தியம் பெற்ற தமிழ் முஸ்லிMம்கள். மலாய் மொழியையும் முறையாகக் கற்றுப் புலமை பெற்றார். மலாய்க்காரர்களுடன் முன்ஷி அப்துல்லா நெருங்கி பழக்கக்கூடியவராக இருந்ததால் ராபிள்ஸ், மலாய்க்காரர்களுடன் உள்ள தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள முன்ஷி அப்துல்லாவையே பயன்படுத்தி இருக்கிறார். சிங்கப்பூர் சரித்திர வரலாற்றுக் குறிப்புக்கு முன்ஷி அப்துல்லா குறிப்புகளே மிகவும் உதவியாகி இருந்து வந்துள்ளன

முன்ஷி அப்துல்லா தமது பயணங்களைப் பற்றி குறிப்பு எழுதி வைக்கும் பழக்கம் உடையவர். அவர் தமது குழு கண்ட பாறைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது பாறையில் செதுக்கப்பட்ட எழுத்துக்கள் நீரால் அரிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார். அதனைக் கண்டதும் பல இனத்தவரும் அங்கு கூடிவிட்டனர்.பின்னர் அங்கு நடைபெற்றதை அவர் விவரிப்பது சி.பி.பக்லி என்பவரின் சிங்கப்பூர் பற்றிய வாய்மொழி வரலாறு (1819- 1867) எனும் நூலில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது."இந்துக்கள், அவை இந்து எழுத்துக்கள் என்றனர், சீனர், அவை சீன மொழி என்றனர். நான் திரு. ராகபிள்ஸ், திரு.தாம்சனுடனும் மற்றவர்களுடன் சென்றேன். பாறையில் இருந்தசொற்களைக் கண்ட போது அவை அரபு மொழி என நான் கருதினேன். ஆனால் என்னால் அதனைப்படிக்க முடியவில்லை. திரு. ராகபிள்ஸ் பாறையில் செதுக்கப்பட்ட சொற்கள் இந்து வார்த்தைகள் என்றார். ஏனெனில் இந்து இனம் இந்தத் தீவுக்கூட்டங்களுக்கு முதலில் வந்த இனம். தொடக்கத்தில் ஜாவா, பிறகு பாலி, அதன் பிறகு சயாம் (தாய்லாந்து) ஆகிய இடங்களுக்கு அவர்கள் சென்றனர். இவ்விடங்களில் உள்ள அனைவரும் அவர்களின் மரபு வழி வந்தவர்களே என்றார். இருப்பினும் செதுக்கப்பட்டிருந்த சொற்கள் என்ன
என்பதைச் சிங்கப்பூரில் இருந்த ஒருவராலும் கூற இயலவில்லை." என்று முன்ஷி அப்துல்லா தனது பயண குறிப்பில் கூறியுள்ளார்.

மலாய் மொழியின் தந்தை என்று போற்றக்குடிய முன்ஷி அப்துல்லா (Munshi Abdullah ) என்பவரின் பூர்வீகம் தமிழகம் என்பதும் அவர் ஒரு தமிழர் என்பதும் சரித்திரத்தில் இருட்டடிக்கப்பட்ட உண்மை. அவரின் பெருப்பானமையான குறிப்புக்களில் மலாய்க்கார்களை “அவர்கள்”என்று விளிந்து அழைத்துள்ளார்.

முன்ஷி அப்துல்லா ஒரு தமிழ் முசுலிம் என்பதையும் மறுப்பதற்கில்லை முன்ஷி அப்துல்லா மலேசியாவின் அறிவுச்சுடர். நவீன மலாய் இலக்கிய உலகில் தந்தை எனவும் போற்றப்படுகின்றார். அக்காலத்தில் மலாக்காவின் வியாபார பெருந் தகைகள் தமிழை கற்பதை கட்டாய கல்வியாக பயிற்றிருகின்றார்கள். தமிழ் மக்கள் தென்கிழக்காசியாவின் வியபாரத்தை கோல்லோச்சி இருந்து இருக்கின்றார்கள் என்பது தமிழராகிய நாம் பெருமை கொள்ளவேண்டிய விடயம்.

தென்கிழக்காசியா எங்கும் வெற்றிக் கொடி நாட்டிய சோழன் தூமசிக் என்று சொல்லப்பட்ட சிங்கபூரிலிருந்து சீன நாட்டை தாக்குவதற்கு தயரான பொழுது, அந்த செய்தி சீன நாட்டிற்கு எட்டியதாகவும் அவர்களின் அரச சபையில் கூடி ஆலோசித்தாதகவும் பயந்து போன அவர்கள் எப்படி சோழனின் படை எடுப்பை தடுப்பது என்று யோசித்த போது ஒரு வயோதிக சீனன் முன்வந்து தனக்கு ஒரு பழைய உடைந்து துருபிடித்து போன கப்பலை தருமாறும் அதில் ஏறி கடலில் பயணப்பட்ட பொழுது எதிர்ப்பட்ட சோழன் அந்த வயோதிக சீனனிடம் நீ எங்கிருந்து வருகிறாய் என்று வினாவ தன் சிறு வயதில் சீன தேசத்தை விட்டு கிளம்பியதாகவும் துமாசிக் நாட்டுக்கு செல்வதாகவும் கூறவும் சோழன் பயணம் மிகவும் தூரம் என்று வந்த வழியில் திருப்பிவிட்டதாவும் ஒரு கர்ணப்பரப்பரை கதை சிங்கபூரில் வழங்கப்படுகிறது.கதையில் உண்மை இருக்கோ இல்லையோ ஆனாலும் ராஜேந்திர சோழனின் படை எடுப்பின் ஆளுமையும் அதன் தாக்கமும் இன்னும் இவ்வட்டாரத்தில் பேசப்படும் ஒரு நிகழ்வாகவே இருக்கிறது. தமிழனின் வரலாற்று சாதனையை எத்தனை தமிழர்கள் உணர்ந்துகின்றனர் என்று தெரியவில்லை...
_______

ஐம்பெரும் தமிழ்ப் காப்பியங்களில் ஒன்றான மனிமேகலையில் சொல்லப்படும் மணிபல்லவம் பற்றியும் சாவகத்தையும் பற்றியும் குறிப்புக்கள் உண்டு. பாண்டிய கடற்கரையிலிருந்து சாவகம் செல்லும் கப்பல் மணிபல்லவத்தினூடாகவே சென்றது. இலங்கைக்கு கிழக்கேயுள்ள தீவுகளில் “ நக்கசாரணர்” அதாவது ‘ அம்ணமான நாடோடிகள்’ என்ற பெயருடன் மனிதரை தின்னும் மனித இனத்தவர் வாழ்ந்தனர். இந்த நிக்கோபார் இத்தீவுகளுக்கப்பால் சாவகம் என்ற பெருநிலம் கிடந்தது. அதன் தலைநகரம் நாகபுரம். இந்நாட்டின் அரசன் தன்னை இந்திரன் மரபினன் என்று குறித்துக் கொண்டான். இதில் வியப்புக்குரிய செய்தி என்னவென்றல், இச் சாவகத்தில் அன்று தமிழே பேசப்பட்டதாக தெரிகிறது. சாவகம் என்று இங்கு குறிக்கப்பெறுவது பெரும்பாலும் சுமத்ராத் தீவாகவோ, ஜாவாத் தீவாகவோதான் இருக்கவேண்டும்.

சாவகம் அல்லது சாவகத்தீவம் என்பது சுமாத்திரா தீவு ஆகும். சுமாத்திரா அரசன் சாவா தீவையும் அடுத்த சிறு தீவுகளையும் ஒரு சேரன் ஆண்டானென்று தோன்றுகிறது..சுமாத்தராவையும் சாவாவையும் குறிப்பிடும்போது டாலமி பெருஞ்சாவகம்,சிறுஞ்சாவகம் என்று கூறுகிறர்கள்.தற்போது சுமாத்த்ராவைப்பற்றி மிகுதியான செய்திகள் எதுவும் தெரியவரவில்லை.யாதலால், நாகபுரம் எதுவென்று என்னால் அடையாளமறிந்து கூற நடத்திய அதன் கிழ்கரையிலுள்ள மிக முக்கிய துறைமுகம் சீர் இந்திரபுரம் ஆகும். அது ஒர் அரசின் தலைநகரம். ஜே. அண்டர்சனின் அசீன், சுமத்ராக்கரை ( J. Anderson Acheen and coast of Sumatra) பக்கம் 395-396 பார்க்க, புத்த சமயமும் இந்து சமயமும் சமத்ராவுக்கும் சாவாவுக்கும் மிக முற்ப்பட்ட காலத்திலே சென்று பரந்தன என்பது இந்தீவுகளிலுள்ள பண்டைக் கோயில்கள் சிற்பங்களின் எச்சமிச்சங்களால் ஐயத்துக்கிடமில்லா நிலையில் தெளிவுப்படுகின்றன. மணிமேகளை xxiv.

ராட்சசர்கள் பிரதம தலைவர் இராவணன் இறந்தபின் இவருடைய சகோதரி சூரத்தங்கி,சூரத்தங்கி மகன் நீலமோகன் “லங்கையில்” உள்ள இராவணன் அரண்மனையிலிருந்து பூலோவ் லாடாவிற்கு வந்து சேர்ந்தார்கள். பூலாவ் லாடா லங்காவி தீவின் தலை நகரம். இதை இந்தியாவில் “ பொட்டக தீபம்” என்பார்கள்.ராஜாமூனோ 2950 அடி உயரமுள்ள குனோங் ராயாவில் வாழ்ந்தார். “பூலோவ் லாடா” என்ற இடத்தை ‘லங்காவி’. என அழைத்தார் இராவணன். அகத்தியரும் இராவணனும் உறவினர்கள். புலத்திய ரிஷியின் மகளை மணந்தவர் அகத்தியர் புலத்தியரின் மகன் வழிப்பிறந்தவன் இராவணன்.

ராட்சசர்கள் உயர்ந்த மலைகளிலும் குன்றுகளிலும் வாழ்ந்தவர்கள்.இவர்கள் உயரமாய் தடித்த்வர்களாகவும் இருப்பர்கள் இவர்கள் மந்திரத்தில் நம்பிக்கை உள்ளாவர்கள்.
சிவ பூமியான ஆதி தமிழர்களின் தாயகம் இலங்கை அல்லது லங்கை என்று அழைக்கப்பட்டது.தமிழர் வழி வந்த இயகர்கள் அல்லது ராட்சசர்கள் என்று கூறப்படும் ரக்ஸ்ஸஸ்சரின் ஒரு நிலப்பகுதியாக லங்காவி தீவும் இருந்துள்ளது.அங்கு ‘லங்கா’ இங்கு ‘லங்காவி’.

இராவணன் இராமரின் மனைவி சிதையை டெக்கான் காட்டில் சிறைபிடித்து கருடனை காவலுக்கு வைத்தார். கருடனை இந்துக்கள் விஷ்னுவின் அவதாரம் என்று வணங்குகின்றார்கள். இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போதியா, கெடா, இந்தியா, இலங்கை முதலிய நாடுகளில் வணங்குகின்றனர். லங்காவி தீவுக் காடுகளில் அனோக யோகிகள் காவி உடையனிந்து குடிசைகளில் வாழ்ந்தார்கள். கி.மு. 4ம் நூற்றாண்டில் கெடாவை இந்துக்கள் வனவாசகம் கெடா வரலாறு பக்கம் 5 பார்க்க ( History of Kedah by R.Faqir Muhammad}1959.என அழைத்தார்கள் என இந்துக்களின் வேத புத்தகங்கள்: கூறுகின்றனர். இக்காலத்தில் வாழ்ந்த மக்கள் குகைகளிலும் காடுகளிலும் வாழ்ந்திருந்திருக்கின்றார்கள் என புத்த மத ஏடுகளும் கூறுகின்றனர்.
_________-___________-_________

தொடரும்-பகுதி-4-பார்க்கவும்.

யாழறிவன்... Yalarivan Jackson

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக