சனி, 8 நவம்பர், 2014

மொழி ரீதியாக ஈழம் உட்பட குமரிக்கண்ட நாடுகளின் தொடர்பு

மொழி ரீதியாக ஈழம் உட்பட குமரிக்கண்ட நாடுகளின் தொடர்பு

தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு துனைகளாக பழைய சாசனங்கள், கல்வெட்டுக்கள் ,இலக்கியங்கள் போன்றவற்றைதான்  எடுத்து கொள்கிறார்களே தவிர அறிவியல் அம்சங்கள் மூலமாகவும் ஆராயலாம் என்பதை மறந்து விடுகின்றனர்.

உலகில் உள்ள அனைத்து உரினங்களும்  தனக்கு தெரிந்தும் தெரியாமலும் தன் முன்னோர்களின் தடையங்களை சுமந்து கொண்டுதான் இருக்கிறன.அப்படித்தான் மனித இனமும் காலம் காலமாக தங்களது இரத்த உறவுகளின் மரபணுக்களை சுமந்து கொண்டு இருக்கிறது.
உங்களுக்கு குமரிக்கும் மரபணுக்களுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்க தோன்றும். ..சம்பந்தம் இருக்கிறது ..அதுதான் "M130" எனப்படும் மரபணு  இந்த வகை மரபணுவானது சுமார் 60,000ஆண்டில் இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது (குமரிக்கால மரபணு). நாங்கள்தான்   இந்த மரபணுக்கு சொந்த காரர்கள்.இந்த பூரண மரபணு கொண்ட மனிதர்கள் குமரியின் பாகமாக இருந்த மடகஸ்கார் இந்தியா அவுஸ்திரேலியா(பழம்குடிகள்)ஆகிய பகுதியில் வாழ்த்து வருவது  இதுவரை செய்யபட்ட ஆராட்சிகளில் இருந்து தெரிய வருகிறது. (ஆதாரம் -"Michael Wood " என்ற பிரபல பிருத்தானிய  மரபணு ஆய்வாளர் BBC தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டார்.)
இலங்கையில் "M130மரபணு  தொடர்பாக எந்த ஆராட்சியும் இது வரை தொடங்கவில்லை.ஆனாலும் புவியியல் ரீதியாக நாம் குமரியின் நடுப்பகுதியில் இருந்த படியால் நிச்சயம் அதன்  தாக்கம் நமக்கும் இருக்கும்.
உங்களுக்கு கேள்வி எழலாம்.அவுஸ்திரேலிய பழங்குடியினரும்குமரி வாசிகளா ,அவர்கள் தமிழையா(திராவிட மொழியையா) பேசினார்கள் என்று ? என்று. சந்தேகமே இல்லை அவர்கள் குமரி வாசிகள்தான் அவர்கள் பேசியது தமிழ் தான்.இன்னும் வரை சில தூய தமிழ் சொற்களை கூட பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
எ. விருமாண்டி
முதலில் நாம் தமிழ் நாட்டில் இருந்து தொடங்குவோம்."M130" எனப்படும் மரபணு வின் பூரணத்தன்மை கொண்ட நபர்களை காமராசர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராமநாதன் பிச்சப்பன் என்பவர் தமிழ் நாட்டில்  உசிலம்பட்டி பகுதியில் கண்டு பிடித்தார்.இதில்  எ. விருமாண்டி என்ற நபர் உட்பட 13 நபர்கள் M130 மரபணுவைக் கொண்டுள்ளதை கண்டு பிடித்தார்.. இதே மரபணுக்களை கொண்ட நபர்கள் மடகஸ்கார் நாட்டில் அதிகமாக காணப்படுகின்றனர்.
அவுஸ்ரேலியாவின் வடமேற்குப் பகுதியில் தற்போதும் வாழும் கரிறியா போன்ற ஆதிக்குடிகள்M130 மரபணுவைக் கொண்டு காணப்படுவது , குமரிக்கண்ட வாசிகளின் வழித்தோன்றல் என்பதையும்  அவர்களது மொழி , உருவத் தோற்றப்பாடு என்பன தமிழர்கள் என்பதையும் நிருபிக்கின்றன.
அவுஸ்ரேலிய பழம்குடியினரின் தோற்ற அமைப்பு தமிழரின் தோற்ற அமைப்புடன் முழுமையாக ஒத்து போகிறது.அதை விட அவர்களது மொழியிலும் தமிழ் (திராவிட )மொழியின் சாயலும் இலக்கண, ஒலியியல்  ஒற்றுமைகள் உள்ளது.

மேலும் அங்குள்ள சில ஆதிக்குடிகளின் சில இனக்குழுமங்களின் பெயர்கள் வியப்புத்தருவதாகவும் மேலும் ஆராயப்பட வேண்டியதாகவும் இருக்கிறது . அவையில் ஒரு குழுவின் பெயர்தான் குவேனி . இது இலங்கையின் இயக்கர் இனப்பெண்ணான (திராவிட பெண் )குவேனியின் பெயரை ஒத்திருக்கின்றது. இவரையே இந்தியாவின் கலிங்கத்திலிருந்து துரத்தப்பட்ட கலிங்கத்து இளவரசனான விஜயன்மணம் முடித்தார் என மகாவம்சம் கூறுகின்றது. மேலும் அவுஸ்திரேலிய ஆதிக் குடிகளின் சில குழுக்களின் பெயர்கள் நகர, நன, நந்தா, நங்கா, நகரியா, நகுரி, நகண்டி, நகம்பா என்று காணப்படுகின்றன. இலங்கையில் கூட நாகர் என்ற பண்டைய தமிழ் இனமும் காணப்படுகிறது .நாக என்ற சொல் இந்தியாவிலும் இலங்கையிலும் நிறைய சந்தர்பங்களில்  பாவிக்கப்படுவது நாம் அனைவரும் அறிந்தது.
இங்குதான் மொழியியல் அடிப்படையில் குமரிக்கண்ட நாடுகள் தொடர்புபடுவது நமக்கு புரிகிறது....

யாழறிவன்.... Yalarivan Jackson

2 கருத்துகள்:

  1. M130 என்கிற மரபணு ஆப்ரிக்க பழங்குடி மரபணு.

    எதை வைத்து இதை குமரி கண்ட மரபணு என்கிறீர்கள்.

    முதலில் ஒன்றை கூறும் போது அடிப்படை இன்றி கூறாதீர்கள்.

    தமிழகத்தில் M130 மரபணு கொண்ட மக்கள் பெரும்பாலும் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    இம்மக்கள் குடியேறிய மரபணு கொண்ட மக்களின் தொடர்பில் வகுக்கபட்ட மக்கள்.

    M130 மரபணு மிகவும் பழைய மரபணு என்பது உண்மை அதை வைத்து இவர்கள் தான் முதலில் குடியேறிவர்கள் என்று கூற முடியாது எப்போது வேண்டுமானாலும் இவர்கள் தமிழகத்தில் குடியேறிய மக்களாக இருக்கலாம்.

    இவர்கள் மரபணு பூர்வீக மரபணு என்றாலோ தமிழர் மரபணு என்றாலோ தனித்து இருக்க வேண்டும் இல்லை என்றால் இவர்கள் தொடர்பில் உள்ள மக்கள் இருக்க வேண்டும் இரண்டுமில்லாது குடியேறிய மக்களோடே இவர்களுக்கு தொடர்பிருக்கின்றது.

    இந்திய மக்களை பொதுவாக இரண்டு வகையான மரபணு சார்ந்த மக்களாக பிரிக்கலாம்.

    திராவிட மரபணு என்று கூறுவது பிலை தமிழர்களை இழிவுபடுத்துவதாக கருதுகிறேன்.

    1-தமிழர்கள் மரபணு

    2-இந்தோ ஐரோப்பிய மரபணு

    இதில் தமிழ் மரபணு என்று வகுக்கபட்ட மரபணு உடைய சாதியாக தேவேந்திரர் (பள்ளர், மள்ளர்) சமூகம் பிர சமூக மரபணு சாராது தனிதுவத்துடன் உள்ளது.

    இந்தோ ஐரோப்பிய மரபணு கொண்ட சாதியாக சமர் எனும் மக்கள் உள்ளனர் இவர்கள் வழி வந்த சமூகமே M130 மரபணு கொண்ட கள்ளர் சமூகம்.

    தமிழர் மரபணு தொடர்பில் பல தமிழ் மற்றும் இந்திய மக்கள் உள்ளனர்.

    தமிழ் மரபணு (தேவேந்திரர்) வழி மக்கள் சில.

    தேவேந்திரர் (பள்ளர், மள்ளர்)

    வன்னியர்

    அம்பளகாரர்

    இராஜ புத்திரர்கள் (சீக்கியர்கள்)

    கொங்கு வெள்ளாள கவுண்டர்

    நாடார்

    முஸ்லிம்

    வீர கொடி வெள்ளாளர்

    தமிழ் மரபணு (தேவேந்திரர்)வழி வந்த இந்தோ ஐரோப்பிய மரபணு கொண்ட சாதிகள்.

    உத்திர பிரதேச பிராமணர்கள்

    ஐயர்

    ஐயங்கார்

    மேற்கு வங்க பிராமணர்கள் (இவர்கள் பெரும்பாலும் தமிழ் மரபணு கொண்டவர்கள்)

    இந்தோ ஐரோப்பிய (சமர்) மரபணு வழி சமூகங்கள்.

    சமர்(இவர்களே தமிழ் மரபணு அதிகம் களப்பு இல்லாத சமூகம் ஏனைய சாதிகளில் அதிகம் கலந்து உள்ளது)

    இந்தோ ஐரோப்பிய(சமர்) மற்றும் ஆப்ரிக்க மரபணு வழி கொண்ட தென்னிந்திய சாதிகள் சில.

    மீனவர்கள் (இந்தியா)

    பரையர்

    ரெட்டி

    நாயுடு

    மறவர்

    கள்ளர்

    அகம்படியர்.

    இவையே உங்கள் கூற்றை பிலை என்கிறது.

    பதிலளிநீக்கு