இலங்கை தமிழர் சிங்களவர்களின் “ப்ளாஷ்பேக்”
(((நான் இந்த பதிவு எழுத முன்பு மகாவம்சம் சுருக்கம் (334 பக்கம்) படித்தேன்.
அதன்பிறகுதான் இது எழுவதற்கான எண்ணம் வந்தது. இதில் கூறப்பட்டவை மகாவம்சத்தை அடிப்படையாக கொண்டு அமைந்தவை))))
பிழைகள் இருந்தால் கட்டாயம் பின்னூட்டல் இடவும்.
இலங்கையில் என்னதான் பிரச்சனை? இரண்டு இனங்களுக்கு இடையில் ஆதிகார பிரச்சனை இதில் மதங்களும் சம்பந்தபட்டுகொள்ளும்.
இனம் என்றால் என்ன ?ஒரு மொழி காலச்சாரத்தை கொண்ட மக்கள்.இலங்கையில் பிரச்சனைக்குரிய இரண்டு இனங்கள் தமிழர் சிங்களவர். சரி வாங்க இவங்கட ப்ளாஷ்பேக்க கொஞ்சம் சுருக்கமாக பார்போம் ..
.இலங்கையில் ஆதிகுடிகள் இயக்கர் நாகர்(திராவிடர் ) இதை சொல்லுவது மகாவம்சம். அதன் பிறகு வடஇந்தியாவில் இருந்து தனது 700 நண்பர்களுடன் விஜயன் வருகை, அதன் பிறகுதான் இலங்கையில் இன்னுமொரு புதிய இனம் உருவாக அத்திவாரம் இடப்படுகிறது .அதாவது குவேனி என்ற பெண்ணை திராவிட(தமிழ்குடி) பெண்னை விஜயன் திருமணம் செய்வதன் மூலம் இரண்டு பிள்ளைகள் பிறக்கின்றன.ஆனாலும் விஜயன் மறுபடியும் மதுரை பகுதியை ஆண்ட பாண்டு என்ற மன்னனின் மகளை திருமணம் செய்கிறான் அது மட்டும் இல்லாமல் தனது 700 நண்பர்களுக்கும் மதுரை பெண்களை திருமணம் செய்து வைக்கிறான்.
குவேனி விஜயனால் துரத்தபட்டு தனது இரு பிள்ளைகளோடு (ஆண்,பெண்) வாழ்கிறாள். குவேனி திராவிடர்களால் கொல்லப்படுகிறாள்.அதன் பிறகு விஜயனுடைய பிள்ளைகள் தங்களை தங்களே திருமணம் செய்து கொண்டு மலையா (malaya)(விஜயனின் சந்ததி) என்ற இனம் உருவாகிறது.
அதன் பிறகு மதுரை இளவரசிக்கும் விஜயனுக்கும் பிறந்த குழந்தைகள் மூலம் புலிந்தா (Pulinda) என்ற இனம் உருவாகிறது. அது மட்டும் அல்ல விஜனால் தனது மாமா மூலம் (மதுரை ராஜா) கலை குடும்பத்தினர் பிராமணர்கள் இலங்கைக்கு வருகின்றனர்.
இவை அனைத்தும் நடந்தாலும் இயக்கரும் நாகரும்(தமிழ் குடிகள்) இலங்கையில் வடகிழக்கு பகுதியை தங்கள் ஆட்சி செய்கின்றனர்.
ஆனால் இலங்கை பூராகவும் காலாச்சாரம் ஒன்றாக காணப்பட்டது
(இந்து).இதற்க்கு காரணம் இந்திய ஆதிக்கம்.
கிட்டதட்ட கி.பி நான்காம் நுற்றாண்டு தொடக்க காலப்பகுதி விஜயனின் சந்ததிகள்(ஆரிய திராவிட கலப்பு ) மற்றும் மதுரை வம்சத்தினர்கள்,பிராமணர்கள் என்பவர்கள் மூலம் ஒரு புதிய இனம் உருவாகிறது.
மலையா இனம்+புலித்தா இனம்+பிராமணர்கள்+மதுரை வம்சத்தினர்
= சிங்களவர் என்ற இனம் உருவாக அடிப்படையான இனம்
ஆரிய திராவிடம் கலந்த இனம்தான் சிங்களஇனம். ஆனாலும் இம்மக்கள் தமிழ்,பாளி மொழிகளைதான் பேசி இருக்க வேண்டும்.ஏன் என்றால் அந்த இன மக்களின் தாய்மார்கள் தமிழர்கள்! தந்தையர் ஆரியர்.
அதன் பிறகு பௌத்த மதம் இலங்கை தீவுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. பௌத்தம் இனம் (திராவிடர்,ஆரியர்) பாராமல் பரவுகிறது.
இப்போதுதான் சிங்கள மொழிக்கு அடித்தளம் இடப்படுகிறது. இலங்கை தீவில் உள்ள பௌத்த மதத்தவர்களுக்கு பொதுவான மொழி ஒன்று தேவைபடுகிறது.ஏன் என்றால் தமிழ் பாளி சமஸ்கிதம் ஆகிய மொழிகளை கொண்டவர்கள் கானபடுவதால் மொழி பிரச்சனை ஏற்படுகிறது. அப்பொழுதான் சிங்களம் என்ற மொழி தமிழ் பாளி சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கொண்டு உருவாக்கபடுகிறது.
*பழைய சிங்களம் -கி.பி 7 - 12ம்நூற்றாண்டு வரை காலப்பகுதியிலும்
புதிய சிங்களம் 12ம் நூற்றாண்டு முதல் தற்போது வரை வரையிலும் உருவாக்கப்பட்டன.
தற்போதைய சிங்களமொழி உருவாக காரணமாக அமைந்த மொழிகள் தமிழ்,வங்காள மொழி, பாளி, சமஸ்கிருதம்,டச்,ஆங்கிலம்,அது மட்டும் அல்ல இந்திய மொழிகள் அனைத்தும் சிங்களத்தில் உள்ளன.
இப்பொழுது ஒரு தீவில் இரண்டு மொழிகள்......இரு இனம்.....
இரண்டு இனத்திற்கும் தென்இந்திய தொடர்புகள்.. திருமணங்கள், படையெடுப்புகள் ,ஆக்கிரமிப்பு,...என்பவை போர்த்துகீசியர் வருகை மட்டும் இடம் பெறுகிறது..பிறகு ஒல்லாந்தர், பிறகு ....பிரித்தானியர் எல்லோரையும் ஒன்றாக்கி “பிரிடிஷ் சிலோன் மக்கள்” ஆக்கினான்!
அதுக்கு பிறகு நமக்கு நாமே வைச்சிகிட்டம் ஆப்பு!
நாங்க ஒண்டா இருக்கிறம் சாமி எண்டு சொல்லி அவனிட்ட நாட்ட வாங்கி...... இண்டைக்கு வரைக்கும் மல்லுக்கட்ட வேண்டிஇருக்கு.....
(((நான் இந்த பதிவு எழுத முன்பு மகாவம்சம் சுருக்கம் (334 பக்கம்) படித்தேன்.
அதன்பிறகுதான் இது எழுவதற்கான எண்ணம் வந்தது. இதில் கூறப்பட்டவை மகாவம்சத்தை அடிப்படையாக கொண்டு அமைந்தவை))))
பிழைகள் இருந்தால் கட்டாயம் பின்னூட்டல் இடவும்
யாழறிவன்... Yalarivan Jackson
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக