ஞாயிறு, 30 நவம்பர், 2014

கடலுக்கடியில் காணப்படும் அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுக நகரமான எயிற்பட்டினத்தின் படிமங்கள்.

கடலுக்கடியில் காணப்படும் அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுக நகரமான எயிற்பட்டினத்தின் படிமங்கள்.

சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’என்று பெயரிட்டேன்” என்றார்.

இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.

‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம். தவிர, மீனவர் நலனுக்கும் இன்றைக்கு தமிழக மீனவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கும் இந்த ஆய்வுகள் மிக முக்கியம். ஏனெனில் கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களின் இடிபாடுகளால்தான் பவழப் பாறைகள் பெருமளவு உருவாகின்றன. இடிபாடுகளும் அதிலுள்ள பவழப் பாறைகளுமே மீன், குறிப்பாக சுறாக்கள் மற்றும் கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த இடங்கள். அங்கு மீன் வளம் அபரிதமாக இருக்கும். அதனால், கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களைக் கண்டுபிடித்து அங்கு கழிவுகளைக் கொட்டாமல், செயற்கையாக வெப்பத்தை ஏற்படுத்தாமல், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் அரசு பாதுகாத்தால் மீன் வளம், மீனவர் நலம் காக்கப்படும்.

மீனவர்கள் எல்லை தாண்டி சென்று ஆபத்துகளை சந்திக்க வேண்டியது இல்லை. எல்லாவற்றையும்விட இதுபோன்ற பகுதிகள்தான் சுனாமி போன்ற பேரழிவுகளின்போது பொங்கி வரும் பேரலைகளை ஆற்றுப்படுத்தி ஊரை காக்கும் அரண்களாக அமைகின்றன.

மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.

ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர,பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.

புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.

எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.

மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.

நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆராய்ச்சிகள் முறையாக செய்தால் இந்தியாவின் வரலாற்றை தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டி வரலாம்..!

=====

பத்துப்பாட்டு மூலமும், அடிநேர் உரையும் என்ற நூலில், சிறுபாணாற்றுப்படையில் எயிற்பட்டினம் பற்றி வரும் பகுதியை இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். முதலில் பாடல் அடிகளும், பின்னர் உரையும் உள்ளன.

சிறுபாணாற்றுப்படை

அலை நீர் தாழை அன்னம் பூப்பவும்

தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்

கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்

நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும்

150     கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர

பாடல் சான்ற நெய்தல் நெடு வழி

மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய      (மது 351,மலை 250)

பனி நீர் படுவின் பட்டினம் படரின்

ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன

155     வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்

கரும் புகை செம் தீ மாட்டி பெரும் தோள்

மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து

நுதி வேல் நோக்கின் நுளைமகள் அரித்த

பழம்படு தேறல் பரதவர் மடுப்ப

160     கிளை மலர் படப்பை கிடங்கில் கோமான்

தளை அவிழ் தெரியல் தகையோர் பாடி

அறல் குழல் பாணி தூங்கியவரொடு

வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவிர்

அலையும் நீர்(கடற்கரையில் இருக்கும்)தாழை அன்னம்(போலே) பூக்கவும்,

(இளவேனிற்காலத்தின்)முதல் நாளில் செருந்தி (பூத்து)பொன்னோ என்று மருளப் பண்ணவும்,

முதல் சூலையுடைய கழிமுள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கவும்,

நெடிய தாளையுடைய புன்னை நித்திலம் (போல அரும்புகள்) வைக்கவும்,

கரையிடத்துள்ள வெண்மையான மணற்பரப்பில் கடல் பரந்து ஏற,                 150

(புலவர்)பாடுதற்கு அமைந்த நெய்தல் நிலத்தே கிடந்த நீண்ட வழியில்,

(நீல)மணி (போலும்)கழி (சூழ்ந்த)ஊர்களையுடையதும், மதிலின் பெயர்கொண்ட,

குளிர்ந்த நீர் மிக்க குளங்களையுடைத்தாகிய, (எயில்)பட்டினத்தே செல்வீராயின் -

உயர்ந்து நிற்றலையுடைய ஒட்டகம் (படுத்து)உறங்கிக் கிடந்ததைப் போல,

மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால்         155

கரிய புகையையுடைய சிவந்த நெருப்பை மூட்டி, பெரிய தோளினையும்,

திங்கள் ஏக்கமுறுகின்ற களங்கமற்ற அமைதியினையுடைய முகத்தினையும்,

(கூர்)முனையுள்ள வேல்(போன்ற) பார்வையினையும் உடைய நுளைமகளால் அரிக்கப்பட்ட,

பழையதாகிய (களிப்பு மிகுகின்ற)கள்ளின் தெளிவினைப் பரதவர் (கொணர்ந்து உம்மை)ஊட்ட,

கிளைகளில் பூக்களையுடைய தோட்டங்களையுடைய கிடங்கில் அரசனாகிய     160

அரும்பு அவிழ்ந்த மாலையையுடைய அழகுடையோனைப் பாடி,

தாள அறுதியை உடைய குழலோசையின் தாளத்திற்கேட்ப ஆடின மகளிரோடே,

உலர்ந்த குழல்மீனைச் சுட்டதனோடு இடங்கள்தோறும் பெறுவீர்
___________________________________

யாழறிவன்.... Yalarivan Jacksan

கிருட்டிணகிரி பாறை ஓவியத்தில் கழுதை உருவம்!: (2500-3000) ஆண்டுகளுக்கு முற்பட்டது (Rock paintings of Iron Age period found near Krishnagiri)

கிருட்டிணகிரி பாறை ஓவியத்தில் கழுதை உருவம்!: (2500-3000) ஆண்டுகளுக்கு முற்பட்டது (Rock paintings of Iron Age period found near Krishnagiri)

கிருட்டிணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியத்தில் கழுதை உருவத்தை வரவாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கிருட்டிணகிரியில் பெண்ணை யாறு தொல்லியல் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் தமிழகம் முழுக்கச் சென்று பல்வேறு வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கிருட்டிணகிரி, தருமபுரி மாவட்டங்களில் வரலாற்றுச் சின்னங்களைத் தேடிக் கண்டுபிடித்து, பதிவு செய்து வருகின்றனர். மேலும், வரலாற்றுச் சான்றுகளை அழிவிலிருந்து காக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆய்வில், கிருட்டிணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியத்தில் குரங்கு உருவம் இருப்பதைக் கண்டுபிடித்தனர். பாறை ஓவியங்களில் குரங்கு உருவம் இருப்பது அரிதானது. இந்த நிலையில், தற்போது பாறை ஓவியத்தில் கழுதை உருவத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களில் கழுதை உருவம் இருப்பதாக எந்தச் சான்றும் பதிவு செய்யப்படவில்லை. அந்த வகையில், தமிழகத்தில் கண்டறியப்பட்ட பழைமை வாய்ந்த கழுதை உருவ பாறை ஓவியம் கிருஷ்ணகிரியில் தற்போது கண்டறியப்பட்டதேயாகும்.
இந்த ஓவியம் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் கழுதையின் பயன்பாடு இருந்திருப்பது இந்த ஓவியத்தின் மூலம் உறுதியாகிறது.

மலைக் குன்று

இந்த ஓவியம், கிருட்டிணகிரி மாவட்டம், மேல்பட்டி கிராமத்தின் அருகேயுள்ள மலைக்குன்று ஒன்றில் உள்ளது. வரலாற்று ஆய்வாளர்கள் சுகவன முருகன், சதாநந்தன் கிருஷ்ணகுமார் ஆகியோர் இந்த ஓவியத்தைக் கண்டறிந்தவர்கள். இதுகுறித்து அவர்கள் கூறியது:
இதுவரை அறியப்பட்ட பழமையான பாறை ஓவியங்களில் குதிரை, எருது, பசு, மீன், மயில் என விலங்குகளும், பறவைகளும் கண்டறியப்பட்டுள்ளன. தற்போதுதான் முதன்முறையாக கழுதை ஓவியம் கண்டறியப் பட்டுள்ளது. இதில், கழுதையின் மீது வீரன் ஒருவன் வாளை ஏந்தியபடி சவாரி செய்கிறான். இந்த தொகுப்பில் இரு கோலங்கள், ஒரு மனிதன், ஒரு விலங்கு, ஒரு கை உள்பட 7 ஓவியங்கள் உள்ளன.

சுண்ணாம்புக் கலவை

தமிழகத்தில் பல இடங்களிலும் இதுவரை ஏராளமான கை ஓவியங்கள் கிடைத்துள்ளன. ஆனால், இந்த கை ஓவியம் சிறப்பான வகையில், ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் கை எனக் கருதும் அளவு சிறியதாக உள்ளது. இந்த ஓவியங்கள் அனைத்துமே வெண்சுண்ணம் எனப்படும் சுண்ணாம்புக் கலவையால் வரையப்பட்டுள்ளன. கிருட்டிணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில், இந்த கழுதை ஓவியம் கண்டறியப்பட்டது ஒரு மைல்லாகும்.
தனியாருக்குச் சொந்தமான இடத்தில் இந்தக் குன்று இருப்பதால், அடிவாரத்தில் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு விட்டன. குன்றின் உச்சியில் உள்ள சிறிய காளியம்மன் கோயில் அருகே இருப்பதால், இந்த பாறை ஓவியம் சிதைக்கப்படாமல் தப்பித்துவிட்டது. அந்த சிறு கோயிலை ஒட்டிய பாறைகளின் மீது அமைந்துள்ள பெரிய பாறை ஒன்றின் விதானப் பகுதியில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

சிலர் இந்தப் பாறை மீது கிறுக்கி, சேதப்படுத்தியுள்ளனர். மேலும், எந்நேரமும் இந்த பாறைகள் உடைத்து நொறுக்கப்படலாம் என்ற சூழலும் நிலவுகிறது. அரசு சிறப்பு சட்டங்கள் கொண்டு வந்தால் மட்டுமே, இதுபோன்ற வரலாற்று ஆவணங்களைக் காக்க முடியும் என்றனர்.

A rock painting of the Iron Age period was found in a hillock near Krishnagiri. This is one of the 11 rare rock paintings found in the hillocks of the district and within a radius of six kilometres from the town.

Archaeologist

According to Sugavana Murugan, a government school teacher and also a freelance archaeologist, only three of the paintings have been studied and the rest are yet to be documented.

Tamil Pandit

The first rock painting was found near the Gothigundu rock in 1972 by late Ramanujam, a Tamil Pandit who worked in the Government Boys Higher Secondary School. Megalithic potteries were also found in large numbers in and around Pethalapalli hillocks.

The need of the hour is to survey rare ancient rock paintings in the three hillocks around Krishnagiri and safeguard them, said Mr. Sugavana Murugan
___________________________________

யாழறிவன்... Yalarivan. Jacksan

சிந்துவெளியில் ஊர்கள், துறைமுகங்கள், ஆறுகள், மலைகளின் பெயர்கள் தமிழில் (Tamil Names in Sindh Valley)

சிந்துவெளியில் ஊர்கள், துறைமுகங்கள், ஆறுகள், மலைகளின் பெயர்கள் தமிழில் (Tamil Names in Sindh Valley)

சிந்துவெளி மற்றும் அரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்”

புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்

'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.

சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.

புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.

சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும்.  அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.

எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.

சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்

பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.

பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது.  கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.

எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.

நதிகள், மலைகளின் பெயர்கள்

நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai),  புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.

கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பöறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.

பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.

தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.

இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.

இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும்  பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.
___________________________________

யாழறிவன்.... Yalarivan Jacksan

சனி, 29 நவம்பர், 2014

திருவக்கரை:- 2கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்மரங்கள் ( Thiruvakkarai- 20 Million Years Old Fossilised Tree)

திருவக்கரை:-
2கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்மரங்கள்
( Thiruvakkarai- 20 Million Years Old Fossilised Tree)

திருவக்கரை தொல்பழங்கால, வரலாற்றுக்கால ஊராகும். திருவக்கரை இயற்கைச் சிறப்பு மற்றும் பண்பாட்டுச்சிறப்பு பெற்ற ஊராகும்.

அமைவிடம்

இவ்வூர் திண்டிவனத்திலிருந்து மைலம் வழியாகச் செல்லும் பாண்டிச்சேரி சாலையில் சுமார் 23 கி.மீ தொலைவில் உள்ளது.

கல்மரங்கள்

இங்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள் கல்லாகி படிவங்களாகக் (fossils) காணப்படுகின்றன.

இங்கு ஒரு கல்மரப் பூங்கா உள்ளது. இது போன்ற கல் மரங்கள் கிடைக்கும் இடங்கள் தமிழகத்தில் வெகு சிலவே உள்ளன.

தொல்பழங்காலச் சான்றுகள்

இங்கு பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள், கல் மரங்களுக்கு அருகில் காணப்படுகின்றன. இவற்றில் சுரண்டிகள். செதில் கருவிகள் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். இந்தக் கல் மரத்துண்டுகளும், குவார்ட்சால் ஆன கூழாங்கற்களும் கருவிகள் செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ளன

பெருங்கற்காலச் சான்றுகள்

இங்கு பெருங்கற்காலத் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கருப்பு-சிவப்பு மற்றும் சிவப்புப் பானைகள் காணப்படுகின்றன. மேலும் கருங்கற்களாலான கருவிகளும் கிடைக்கின்றன. இவைகளும் கல் மரங்களும் அருகிலேயே காணப்படுகின்றன.

கோவில்

இங்கு வரலாற்றுச்சிறப்பு மிக்க சிவன் கோவில் உள்ளது. இதன்பெயர் சந்திர மௌலீஸ்வரர் என்பதாகும். இக்கோவிலில் சோழர் காலத்தைச் சேர்ந்த முதலாம் இராசராசன் மற்றும் குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் உள்ளன. சோழ அரசன் கண்டராதித்தனின் மனைவியான செம்பியன் மாதேவி, இங்கு திருப்பணி செய்துள்ளார். இக்கோவிலில் தேவரடியார்கள் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன.
___________________________________

A repository of spectacularly preserved fossilised trees

The National Fossil Wood Park in Thiruvakkarai, located about 35 km from Puducherry on the road to Tindivanam in Villupuram district, maintained by the Geological Survey of India (GSI) is a repository of spectacularly preserved fossilised trees that are at least 20 million years old. They belong to what is called the ‘Mio-Pilocene' age and give a glimpse of the composition of flora that existed in the pre-historic ages.

R. Pitchai Muthu, Director of the GSI, Tamil Nadu believes that the fossil woods was the result of a huge flood that occurred millions of years ago. The flood waters destroyed large parts of forests in the adjoining area. The trees were then transported to the present site of deposition in inland seas. This can be confirmed from the fact that “branches and roots are absent in these horizontally disposed trees,” he says.

They then underwent the ‘petrification' process “during which the woody matter was replaced by silica and the water was expelled due to compaction of the superposed elements.”

The silica that has preserved these tress are said to be derived from volcanic ash ejected during explosions. But even today, the annular rings and pit structures of the tress are brilliantly preserved and are visible even to the naked eye. All these provide vital evidences in determining the age of such fossils. Infact, Mr. Muthu says that the degree of perfection in the petrification process in Thiruvakkarai is a rarity. Very few fossil forests in the world can boast of such high levels of preservation.

The park has around 200 fossil trees ranging from 3 to 15 metres in length and 5 metres in girth. According to local legends, the trees are the bones of a demon that was slain by Lord Vishnu. They also find mention during festivals at the famous Kali temple in the village. The number of tourists visiting this park has been minimum largely due to its location. The approach roads leading to the park are in a deteriorated state and travelling in cars and buses could be a difficult task. In order to improve such infrastructure, the GSI has proposed a Rs. 56 lakh project to construct a mini museum and approach steps to the park. Once completed, Mr. Muthu says it would help promote Thiruvakkarai as a major tourist spot in the State.
___________________________________
யாழறிவன்... Yalarivan Jacksan