ஞாயிறு, 16 நவம்பர், 2014

இத்தாலியும் தமிழும்

இத்தாலியும் தமிழும்

நான் தொடங்க நினைத்திருப்பது தமிழுக்கும் இத்தாலிக்கும் உள்ள மொழி தொடர்பு பத்தியே.

மொதல்ல ஒரு வார்த்தை வேதோவா(Vedova) நம்மூர் விதவை. இது நம்ம தமிழ் மாதிரி இருக்குதேன்னு பார்த்தேன். அப்படி ஒவ்வொரு வார்த்தையா தேடி ஏறக்குறைய 300 வார்த்தைகள் தமிழோடு தொடர்புடைய வார்த்தைகளை தேட முடிஞ்சது. வந்த வேலைய தவிர இந்த வேலைதான் முழு மூச்சா போனது. 
எல்லாத்தையும் ஒரே மூச்சில சொல்லல, பயப்பட வேண்டாம். மெதுவாவே பயணம் செய்வோம்.
மொதல்ல இத்தாலி ங்கற நாட்டு பேரே தமிழ் பெயர்.

1. இத்தாலியை அவர்கள் இத்தாலியா  என்றே அழைக்கிறார்கள்.
இதற்கு என்னடா அர்த்தம் என்று கூகிளில் தேடினேன். இத்தாலியாவின் மூலச்  சொல் கிரேக்கத்திலிருந்து வந்தது என்றார்கள். அந்த கிரேக்கச்சொல் இத்தேல்லோஸ் (itellos). இந்த இதல்லோஸ் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என்று தேடிய பொது அது ஒரு இலத்தின் வார்த்தை மூலம். அந்த வார்த்தை விதெல்லோஸ். இலத்தினில் விதெல்லோஸ் என்றால் இளங்கன்று என்று போட்டிருந்தார்கள். இத்தாலிய மொழியிலும் வித்தெல்லொ (Vitello) அப்படின்னா இளங்கன்று தான். 
இப்பதான் முக்கியமான திருப்பம். இந்த வித்தெல்லொ எங்கிருந்து வந்தது என்றால் இந்தோ-ஐரோப்பிய தொடர்பு அ கிழக்கத்திய மூலச்சொல் என்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள். இன்னும் போனால் குட்டு வெளிப்பட்டுவிடும் அல்லவா. அதாவது அவர்கள் இங்கிருந்து, தென் இந்தியாவிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்று குடியேறியவர்கள் என்ற உண்மை வெளி வந்துவிடும். ஐரோப்பியர்களுக்கு தாங்கள் மேன்மையானவர்கள்; தங்களிடமிருந்தே உலகம் அறிவு பெற்றது என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள்.
சரி நம்ம விசயத்திற்குள் வருவோம்
இந்த Vitello எங்கேருந்து வந்ததுன்னு தேடிப் பார்த்தால் நம்மூரு விடலை. விடலை என்றால் இளங்கன்று என்று தமிழ் அகராதியில் போட்டிருந்தார்கள். நாம சொல்வோம் இல்லையா. விடல பையன் இளங்கன்று பயமறியாதுன்னு. ஆக தொடக்கத்தில் மாடுகள் அதிகமாக இருந்த நாடு இது. மாடுகளின் நாடு. மாடு மேச்ச பசங்கதான் இந்த இத்தாலியர்கள்.
___
உறவுக்கான வார்த்தைகளில்
அடுத்து இத்தாலி மொழியில் உறவுக்கான வார்த்தைகளில் தமிழோடு தொடர்புகொண்ட ஒரு சில வார்த்தைகளை தேடுவோம்.

2.          இத்தாலிய  உறவுகள் பெயரில் தமிழ்

1. Genitori- பெற்றோர்-ஜெனித்தல், சனித்தல், சனனம், பிறப்புக்கு காரணமானவர்கள்.
2. Vedova-விதவை. (வேதொவா) அப்படியே உள்ளது. தமிழில் பெண்ணுக்கு மட்டுமே இந்தப்பெயர். ஆணுக்கு பயன்படுத்துவதில்லை. ஆனால் இத்தாலியர்கள் சமத்துவமாக பயன்படுத்துகிறார்கள். ஆணுக்கு vedovo, பெண்ணுக்கு vedova.
3. Papa-அப்பா
4. Mamma-அம்மா
(அம்மா என்ற சொல் உலகளவில் 48 மொழிகளிலும், அப்பா என்ற சொல் 23 மொழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார், மொழியியல் அறிஞர் தேவநேயப்பாவாணர். ஆக உலக மொழிகளுக்கெல்லாம் அப்பனும் ஆத்தாவும் தமிழே)
5. Juvenile-யுவன்,  யுவதி 
6. Marito-மரித்தோ  (கணவன் )
7. Moglie-மோளியே (மனைவி)
கணவன் மனைவிக்கான இத்தாலிய வார்த்தை. Marito-Moglie. நம்மூரில் பல வார்த்தைகள். கணவன் மனைவி, புருஷன் பொண்டாட்டி, துணைவி, இணைவி (உபயதாரர் ஆரூரார் ?) இதுல கணவன் இறந்தால் மனைவியை சில வார்த்தைகளில் அழைப்பார்கள். ஒன்னு விதவை. இன்னொன்னு மூளி.
கணவன் மரித்தால் மனைவி மூளி.
கணவன் - மரித்தோ-Marito மனைவி-மோளியே - Moglie.
(தமிழ்நாட்டுல ஆத்துல புது பெருக்கு வந்தால் அது வெள்ளம் ஆனா சேர (கேரள)நாட்டுல அந்த வார்த்தை பொதுவாக தண்ணியையே மட்டுமே குறிக்க பயன்படுது.) இங்கே தனிச்சொல்லாக இருப்பது அங்கே பொது சொல்லாக மாறுகிறது.
அது போல கணவன் மனைவி உறவு முறைக்கான வார்த்தைகளில் மரித்த கணவன் மூளி மனைவி உறவு வார்த்தை, பல ஆயிரம் ஆண்டு உருமாற்றத்தில் ஒரு குறிப்பிட்ட உறவுச்சொல்லே பொதுச்சொல்லாகிவிட்டது.
​சேர நாடு பற்றி பேசுவதால் ஒரு சின்ன இடைச்செருகல். நாம் பயன்படுத்தும் சோழ, பாண்டிய, சேர நாடுகள் என்ற வார்த்தைகள் உண்மையில் வேறு மூலச்சொல்லொடு தொடர்பு கொண்டவை.
பாண்டிய நாடு உண்மையில் பண்டைய நாடு. கடல் கடந்து வந்தவர்கள் முதலில் குடியேறிய பகுதி. ஆகவே பண்டைய நாடு, மருவி பாண்டிய நாடாகிவிட்டது.

சோழ நாடு என்பதும் உண்மையில் சோதிய நாடு. சோதியான சூரியன் முதலில் உதிக்கும் பகுதி என்பதால் (Japan - Nippon போல)​
​சோழர் கொடியும் முதலில் சூரியக் கொடியாக, சூரியனைக்குறிக்கும் ​​ காளை மாட்டு கொடியாகத்தான் இருந்தது. அதனால்தான் சிவக் கோயில்களில் எல்லாம் மத்தியிலும் சுற்றிலும் இருப்பது காளை. இது தமிழர்களின் வானவியல் அறிவின் அடிப்படையில் Taurus (தார்க்குச்சி என்பது வண்டி காளைக்கான குச்சி. இதைப்பற்றி பின்னர் விளக்கமாக கூறுகிறேன்)என்ற நட்சத்திரக்கூட்டத்துக்கருகில் உள்ள சிவந்த நட்சத்திரம் தான் இது.

இன்றும் கூட சோழ மண்டல கடற்கரை கொண்டிருக்கும் ஆந்திராவின் கொடியில் இருப்பது சூரியன்தான்.

சோழ மண்டலக்கடற்கரை ஆங்கிலேயர்களின் வாயில் Coromandel கடற்கரை ஆகி (நம்மையெல்லாம் mental ஆக்கிவிட்டான் ) இன்னும் அதையே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் Coromandel Express, Coromandel Cement என்று. ஆங்கிலேயனை விட்டாலும் நாம ஆங்கில அடிமைத்தனத்தை விட மாட்டேங்குறோம்.
கொஞ்சம் திசை மாறிப் போனதற்கு மன்னிக்கவும்.  மீண்டும் வருவோம்
8. Madonna, donna-மாது
மாது என்பது பெரிய பெண்ணைக்குறிக்கும். மாது மதோன்னா என்று ஆகி முதல் எழுத்து மறைய வெறும் தோன்னா donna என்பதோடு நின்று விட்டது.
9. Gente-சனம்
10. Vita-வித்து, விதை வித்யாலயா. உயிருக்கான தொடக்கம், வித்து, வித்யாலயா- தொடக்க அறிவு  ஆலயம். வேதங்கள்-தொடக்கம் பற்றி பேசும் நூல், உயிர்களின் விதை அறிவின் விதை அனைத்தின் துவக்கம்.
11. Filio-பாலகன்
12. Cognato-கொழுந்தன், நாத்தனார் நாற்று, உடன்பிறப்பு.
ஒரே செடியில் முதற் கொழுந்திற்கு அடுத்து, இரண்டாவது கொழுந்து வருவது போல கணவனோடு உடன் பிறந்த சகோதரக்கொழுந்து, கொழுந்தன் ஆகிறது. இத்தாலியில் cognato அ cognata. Cog-nato உடன் பிறந்தவர்.
13. Zio-சீயா- மாமா
எங்கள் ஊரில் (மதுரைக்கருகில்) மாமாவை சீயா என்றுதான் அழைப்பார்கள். என் அப்பா அவரது மாமாவை அவ்வாறு தான் அழைப்பார். இப்பதான் எல்லா உறவு வார்த்தைகளும் மறைந்துகொண்டே போகிறதே. எல்லாம் ஆண்ட்டி அங்க்கிள் தான். நம்ம நடிகர் விக்ரமுக்கான அடைமொழி பெயர்கூட சீயான் கூட மாமா என்ற அர்த்தம் தான் தரும்.

14. Nepoti- நெபொத்தி- பேரன், பேத்தி
பேரன் என்றால் தாத்தாவின் பெயரை ஏற்பவன், பெயரன் என்றே பொருள். கிராமங்களில் இன்னும் இந்த நடைமுறை இருப்பது நம்மில் பலருக்கு தெரியும். அதே போல பெண் குழந்தை என்றால் பாட்டி பெயர் அ தாத்தாவின் பெண்பால் பெயரினை வைப்பது வழக்கம்.
இத்தாலியிலும் இதே நடைமுறை. nepoti- Ne - Poti நாமம் பெயர்த்தி நெபொத்தி nepoti.​

15. Nato-நாதி, பிறப்பு
16. Natale- நத்தார்,  கிறிஸ்துமஸ் 
நாதி அற்றவன் அ அநாதை என்றால் பெற்றோர் அற்றவன், யாருமற்றவன், பிறப்புக்கான காரணங்கள் தெரியாதவன் என்பது நமக்கு தெரியும். இறைவனும் கூட அநாதியானவன் என்று அழைக்கபடுகிறார். அதாவது பிறப்பு, இறப்பு அற்றவர். நாதி-பிறப்பு Nato, Native, Nativity. நாதி, நத்தார் பெருவிழா, Natale.
___________
உடல் உறுப்புகளுக்கான வார்த்தைகளில்

3. உடல் உறுப்புகள்: இத்தாலியும் தமிழும்

1. Naso (நாசோ) - நாசி, மூக்கு
2. Gola (கோலா) - கழுத்து
3. Dente(தென்தே)-தந்தம், பல். யானையின் பல்லை மட்டும் தந்தம் என்கிறோம். இத்தாலியர்கள் இந்த யானையின் பல்லை பொதுவான பெயராக்கி பல்லுக்கு பயன்படுத்துகின்றனர்.
4. Tosse (தோசே)-சலதோசம். இத்தாலியர்கள் இருமலுக்கு இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர்.
5. Vegliare (வேழியாரே )- விழித்தல்
6. Capo (காப்போ) - தலைவன் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகின்றனர். கபாலம், தலை. தலைமையான பல அர்த்தங்களுக்கு இவ்வார்த்தை பயன்படுகிறது. நாமும் தலையை  அடிப்படையாக வைத்தே முதன்மையை சொல்கிறோம் இல்லையா. தலை-வர், தலை-ச்சன்பிள்ளை, தலை-நகரம், தலை-மை தபால் நிலையம் என்று.  கேப்டன் (Captain) என்ற ஆங்கில வார்த்தையும் கூட இப்படித்தான். ஆங்கிலத்திற்கு போனால் எக்கச்சக்க வார்த்தை வரும். இப்போ வேணாம். இத்தாலிக்கே வருவோம்.
Capo-linea(காப்போ-லீனையா) - இதன் பொருள் பேருந்து நிலையம். அதாவது எல்லா வழித்தடங்களுக்கும் தலையாக இருக்கும் நிலையம்.
Capo-d'anno (காப்போதான்னோ) - வருடத்தின் தலைநாள். வருடத்தின் முதல் நாள். வருடபிறப்பு
capo-cuoco (காப்போகுவோகோ) - தலைமை சமையல்காரர், headcook
Capo-luogo (காப்போலுவோகோ) - தலைமையிடம் 
ஒரு சின்ன இடைச்செருகல்: புத்த மதத் தலைவர் தலாய் லாமா என்பதற்கு பொருள் தலைமை குரு, தலைமை ஆசான் என்பதே. தலை-லாமா
7. Capelli (கப்பெல்லி) - capo - pelli கபால முடி. பீலி என்றால் தமிழில் முடி என்று பொருள். ( பீலி பீலிபெய் சாகாடும் அச்சிறு அப்பண்டம் சால மிகுத்து பெயின் ) இதன் பொருள்: எடை குறைந்த மயில் இறகே ஆனாலும் அதன் எண்ணிக்கை அதிகம் எனில் வண்டி குடை சாயும்.
8. Occhio (ஓக்கியோ)-கண், அக்கம் என்றால் கண் என்பது பொருள். சந்தேகம் உள்ளவர்கள் தேடிப்பார்க்கலாம். http://ta.wiktionary.org/wiki/ (அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா - சிப்பிக்குள் முத்து படப்பாடல்.)
9. Sangue (சாங்குவெ)-செங்குருதி, இரத்தம்
10. Cuor (குஓர்) - இருதயம், குருதி, செங்குருதி அனுப்பும் இடம்
11. Muorire, Morto (மொறீரே, மோர்த்தோ )- மரித்தல், மரித்தவர், அமரர்
12. Nascere (நாசெறே) Nato -நாதி, பிறப்பு
13. Mano (மானோ)-மணிக்கட்டு, கை
14. Collana-கழுத்துநகை, நாம் கொல்லன் என்று நகை செய்பவரை அழைக்கிறோம். கொல்லனா என்றால் இத்தாலியில் கழுத்து நகை.
15. Voce (ஓச்சே)- ஓசை
16. Pedonale (பெதோநாலே) - பாதசாரி ஆங்கிலத்தில் pedal, pedestrian எல்லாம் அடிப்படையில் பாதத்திலிருந்தே.
17. Unghia (உன்கியா)- உகிர் உதிர்த்தல் நகம்
18. Calcio- கால்பந்து விளையாட்டு . காலை பயன்படுத்தும் பல விசயங்களுக்கு கால் என்றே சொல்கிறார்கள். எடுத்துக்காட்டாக
calpestare (கால்பெஸ்தாரே)- கால்பதித்தல்
calzone (கால்சொனே) - கால் சட்டை, trouser.
calza (கால்சா) - சாக்ஸ், காலுறை, கால்மேசு
calcagno (கால்காங்னொ ) - கணுக்கால்
calzalaio (கால்சலையொ) - பெரிய ஷூ, பெரிய பாதணி
______

விலங்கு, பறவை, தாவரப் பெயர்களில்

4. விலங்கு, பறவை, தாவரம்

1. Animalia  (அனிமாலி)- விலங்குகள் 
தமிழில்  ஆத்மா ஆன்மா என்பதன் மூலச்சொல் அகத்துமம். மனிதன்
தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி, ஆராய்ந்து முடிவெடுப்பவன்.
ஆதலால் ஆறாம் அறிவை பயன்படுத்தி சீர்தூக்கி மெய்ப்பொருள்
காண்பவன் அகத்துமம், ஆன்மா உள்ளவன். இவை இல்லாதவை
அகத்துமம் இல்லாதவை, ஆன்மா இல்லாதவை எனப்படும்.
ஆன்மா இல்லாத, ஆன்மா - இலி, அனிமாலி (விலங்குகள்).
பிராணிகள் என்பதற்கும் தமிழ் நல்ல வரையறை கொண்டுள்ளது.
பிராண வாயு சுவாசிக்கும் அத்தனையும் பிராணிகள். அதனால்தான்
கல்லையும், மரத்தையும் பிராணிகள் என்று சொல்வதில்லை.
கல் சுவாசிப்பதில்லை. மரம் கார்பண்டைஆக்சைடை சுவாசிக்கிறது
நமக்கு தெரியும். இந்த கல் அ மரம் போன்று இருப்பவர்கள் அப்பிராணிகள்.

2. Toro (தோரோ) Taurus - தார், காளை
வானியலில் உள்ள 27 நட்சத்திரக்கூட்டங்களில் ஒன்று இந்த taurus நட்சத்திரக்கூட்டம். இது கிரெக்கப்பெயர் என்பார்கள். உண்மையில் சுத்த தமிழ்ப்பெயர். நம்மூரில் காளை மாட்டுக்கு, மாட்டு வண்டிக்கு பயன்படுத்தும் குச்சியை தார்க்குச்சி என்றுதான் சொல்லுவார்கள். தார் என்றால் தமிழில் காளை என்றே பொருள். வட இந்திய நடிகர் ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த படம் தாரே ஜமின் பர் (taare jamin par) இதன் அர்த்தம் 'மண்ணில் வந்த நட்சத்திரம்'. இந்த தாரே என்பது இந்த நட்சத்திரக்கூட்டத்தைத்தான் குறிக்கிறது. கிறித்தவர்கள் பாடும் ஒரு பாடலில் தாரகை சூடும் மாமரியே என்று பாடுவார்கள். இந்த தாரகை என்பது இந்த நட்சத்திரக்கூட்டத்தை மாலையாக அணிந்தவளே என்று தான் அர்த்தம்.
3. Gatto (காத்தோ)- பூனை, கொத்தி. கொத்தி என்றால் குருடு என்பது பொருள். பூனைக்கு பகலில் கண் சரியாகத் தெரியாது. ஆகவே தமிழர்கள் அதற்கு வைத்த பெயர் கொத்தி.
4. Gallo (கால்லொ)-கோழி இப்பெயர் அப்படியே வருகிறது.
5. Pollo (போல்லோ)-புல்லம், பறவை, கோழி
6. Agnello (அங்க்னெல்லொ)- ஆடு, ஆநிரை என்பது ஆட்டைக்குறிக்கும். தமிழ் செய்யுளில் படித்திருப்போம்.
7. Mandria (மந்த்ரியா)- மந்தை
8. Mucca (மூக்கா)- பசு மாடு. நாம் பசுமாட்டை கோ (மாதா) என்று அழைப்போம். இந்த கோ, மூ-கோ, மூ-கா, மூக்கா ஆகிவிட்டது.
9. Mangiare (மஞ்சாரெ) - சாப்பிடுதல், உண்ணுதல், மேய்தல்
10. Vitello - இளங்கன்று இதைப் பற்றி இரண்டாம் கட்டுரையில் எழுதி உள்ளேன், எவ்வாறு இத்தாலி என்றே வார்த்தையே இதிலிருந்து வந்தது என்று.
11. Erba (எர்பா)- அருகு, அருகம்புல் என்ற ஒரு புல் வார்த்தையையே இவர்கள் அனைத்து வகை புல், கீரைகளுக்கு பொது பெயராகப் பயன்படுத்துகிறார்கள்.
12. Serpente (செர்பெந்தெ ) - சர்ப்பம் அப்படியே உள்ளது.
13. Cavalio (கவாலியோ) - குதிரை, காவல் குதிரை. இந்தப்பெயர் அப்படியே பிரெஞ்சு மொழிக்கு செல்லும்போது செவாலியே என மாறுகிறது. நம்மூர் நடிகர் திலகத்துக்கு பட்டம் கொடுத்தாங்கல்ல அதே செவாலியே பெயர்தான். பொருள் குதிரை வீரன் என்பதே.
14. Ali (ஆலி), Uccello (உசெல்லொ) -
ஆலி என்றால் சிறகு என்று பொருள்.
உசெல்லொ என்றால் பறவை என்று பொருள்.
நம்மூரில் ஆலாய் பறக்கிறான் என்று சொல்வோம் இல்லையா.
ரெக்கை கட்டிக்கிட்டு பறக்கிறான் என்பதே.
15. Snaka - நாகம். விளக்கம் தேவைப்படாது.
16. Uva (உவா)-என்றால் திராட்சை, uovo (ஓவோ)- என்றால் முட்டை
என்று பொருள். நம் தமிழில் உவாமதி என்றால் முழு மதி.
உருவத்தில் கோளமாக, முழு வட்டமாக இருக்கக்கூடிய இவை இரண்டும்
அதே பெயரில் வருவது பொருத்தமே.
17. Zinzero (ஜிஞ்செரொ) - இஞ்சி
18 . Riso (ரீசோ) - அரிசி. இவை இரண்டிற்கும் விளக்கம் தேவைப்படாது.
19 . Zucchero (சூக்கெரொ)- சர்க்கரை
20 . Albero (ஆல்பெரோ) - மரம்.
நம்மூரில் அகல விரிந்திருக்கும் மரம் ஆல மரம். இந்த ஒரு மரத்தின்
பெயரையே மரத்திற்கெல்லாம் பொதுப்பெயராக ஆல்பெரொ என்று
அழைக்கிறார்கள். இது மட்டுமில்லை ஆலமரம் பல
பறவைகளுக்கும், மனிதர்க்கும் தங்கி ஓய்வெடுக்கும்
வகையில் இருப்பதைப்போல, பலரும் தங்கும்
விடுதியை (lodge) albergo (ஆல்பெர்கொ) என்றே அழைப்பது தமிழ்
இங்கே எந்தளவு ஊடுருவி உள்ளது என்பதையும் ஆராய தூண்டுகிறது.
____________

எண்கள், காலம், கணக்கீடுகளில்

5. கணிதம், எண்கள், காலம்

நம்ம தமிழ் நாட்காட்டியைப் பார்த்தால், (எங்கே கல்யாண பஞ்சாங்கம் பார்க்கத்தான் அதனைப் பயன்படுத்துகிறோம்) குறிப்பாக தின நாட்காட்டியில் கீழ்க்கண்டவாறு கிழமைகளைப் போட்டிருப்பார்கள். பிரதமை, துதியை... என்று. இவை எல்லாம் வடமொழியோ என சந்தேகம் படும்படியாக வார்த்தைகள் இருக்கும். நிச்சயம் இல்லை. சுத்தமான தமிழ் வார்த்தைகள். அவற்றில் சரியாக 14 நாட்களுக்குக் கிழமைகள் போட்டிருப்பார்கள் 1 லிருந்து 14 வரை, அடுத்த நாள் பௌர்ணமி. திரும்ப அந்த 1 லிருந்து 14 கிழமைகள். அடுத்த நாள் அமாவாசை.
வேறு ஒன்றும் இல்லை. நிலவின் வளர்பிறைக்கு 1லிருந்து 14 வரை, தேய்பிறைக்கு 1 லிருந்து 14 வரை. காரணம் நிலா, மதி யை வைத்தே நாட்கள் கணக்கிடப்பட்டதால் மாதம் என்றே பெயர் பெற்றதை நாம் அறிவோம்.
அந்த கிழமை பெயர்கள் அப்படியே இத்தாலியில்.
இந்த கிழமைகளில் 4 என்ற எண்ணைத்தவிர பிற எண்கள் அப்படியே வருவதைப்பார்க்கலாம்.
1. Primo (பிரிமோ)- பிரதமை
2. Due (துவெ)- துதியை
3. Tre (த்ரே)-திருதியை
4. Quattro (குவாத்ரோ)- சதுர்த்தி
5. Cinque (சின்க்வெ)-பஞ்சமி
6. Sei, sesto (சேய்)-சஷ்டி
7. Sette (செத்தே)- சப்தமி
8. Otto (ஒத்தோ)-அட்டமி
09. Nove (நோவே)-நவமி
10.  Dieci (தியெச்சி )- தசம் (இலத்தீனில் தெச்சம்). கணக்கில் தசமபின்னம்.1/10
11. Undici (உந்திச்சி)-ஏகாதசி
12. Dodici (தோதிச்சி)-துவாதசி
13. Tredici (திரேதிச்சி)-திரயோதசி
14. Quattordici (குவதோர்திச்சி )-சதுர்த்தசி
இவைகளில் 4, 14 இந்த இரண்டு கிழமைகளில் 4 ஏன் இப்படி வருகிறது என்று இரண்டு, மூணு நாள் யோசித்து பார்த்தேன். தேடியபொழுது அருமையான விளக்கம் கிடைத்தது.
இத்தாலி நாட்டுக்காரரே உதவி செஞ்சார். அவர் கொன்ஸ்தன்சோ ஜோசப் பெஸ்கி என்ற நம்ம வீரமாமுனிவர். இவர் இத்தாலி மிலான் நகரத்துக்கருகில் காஸ்திலியோனே (Castiglione) என்ற நகரத்தில் பிறந்தவர். இந்த நகரை காஸ்திகிலியோன் என்று நாம் தவறாக எழுதுவது இங்கு வந்ததும் தான் தெரிந்தது. இவர் தான் தமிழ் மீது கொண்ட பற்றால், கற்று, தேர்ந்து தமிழில் முதல் முறையாக அகராதியைத் தொகுத்தவர். ஆங்கிலத்தில் நாம் பயன்படுத்தும் 'Thesaurus' போல. சதுர் அகராதி. சதுர் என்றால் நான்கு. சதுரம் என்றால் நான்கு பக்கமும் சம தூரத்தில் இருக்கும் வடிவம். சதூரம் - சதுரம். நான்கு அகராதி. இதில் 1. சொல் அகராதி (சொல்லும் பொருளும்) 2. பெயர் அகராதி (ஒரு சொல் பல பொருள்) 3. தொகை அகராதி (கலைச்சொற்கள்) 4. தொடை அகராதி (எதுகை மோனை) என சதுர அகராதியை 1732 ல் எழுதி முடித்தார். இப்ப நம்ம விசயத்திற்கு வருவோம். இந்த நான்கு என்ற சதுர், ஹிந்தியில் சார் (ஏக், தோ, தீன், சார்) ஆகி சதுர்- சதூர்-chadhoor - cha என்பதை இத்தாலியர்கள் க என்றுதான் உச்சரிப்பார்கள், ஆக சதுர்-சதூர்-கதூர்- ஆகியிருக்கிறது. இது அப்படியே ஆங்கிலத்தில் 'quarter நான்கில் ஒரு பாகம்' என்றாகி விட்டது.
இந்த வகையில் மேலும் சில தகவல்கள் கிடைத்தன. வாகன ஓட்டிக்கு சாரதி என்று தமிழில் பெயர். பார்த்தசாரதி என்ற பெயர் நமக்கு அறிமுகமான பெயர். பார் என்ற உலகுக்கெல்லாம் ஒளி தரும் சூரியனுக்கு தான் அப்பெயர். கதிர்கள் என்ற குதிரைகள் பூட்டிய தேர் சூரியன். இதில் சாரதி என்பது சதுர அ சார் எனும் நான்கு சக்கரங்கள் கொண்ட தேருக்கு அதிபதி என்றே சாரதி பொருள் படுகிறது. இந்த சார்- சதுர்-கதூர்-கார் என்பதும் நான்கு சக்கரங்கள் பூட்டிய வாகனம். German மொழியில் car ஐ (வாகனம்) வாகன் என்றே அழைக்கிறார்கள். Volkswagen (f) வோல்க்ஸ்வாகன் அ மக்கள் வாகனம். நான்கு கரங்கள் கொண்ட இணைப்போடு இருப்பதால் (நான்கு)சதுர்-கரம், சக்கரம் என்று தமிழன் தான் முதன் முதலில் சக்கரத்தையே கண்டுபிடித்திருக்கிறான்.
5. Car-ta (கார்த்தா) - சதுர்த்தாள், நான்கு பக்கங்கள் கொண்ட தாள்.
6. Car-cere (கார்செரெ)- சிறை, நான்குபுற சிறை.
நான்குக்கான விளக்கம் கொஞ்சம் அதிகம்தான். பொறுமையாய் வாசித்ததற்கு நன்றி.

16. Cento (சென்தோ)-சதம்
17. Novena (நொவெனா)- நவநாள்
18. Ora, Hour (ஓரா)- ஓரை, ஓரை என்றால் நட்சத்திரக்கூட்டம் என்று தமிழில் பொருள். நமது பால்வெளி ( Milky way ) என்ற பேரண்டத்தில் ஒருபகுதியான நமது சூரியக்குடும்பம் இருக்கும் நட்சத்திரக்கூட்டத்திற்குப்பெயர் ஓரியன் (Orion) இதைக்கொண்டே horoscope, hour எல்லாம் உருவானது.
19. Dies,(தீயஸ்) day, date - திதி, தேதி
20. Mese, (மேசெ)Month-மாதம், மதி
21. Anno (ஆன்னோ) - ஆண்டு
22. GiorNALE (ஜோர்நாளே)-நாள்
24. Settimana (செத்திமானா)- சத்தமானம் என்பது தமிழ் வார்த்தைதான். சத்தமானம் என்றால் 7 நாள் வரிசை என்று பொருள். 'சப்த ஸ்வரம்' ன்னு சொல்றோம்ல. அதுவும் 7 சரம், வரிசையைக்குறிக்கிறது. ச, ரி, க, ம, ப, த, நி.
25. Mattina (மத்தீனா)- மத்தியானம் மத்தி அயனம். சூரியனின் பயணத்தில், அயணத்தில், மத்தியில் உள்ள நிலை மத்தியானம். இது தமிழ். விடியல் முதல் மத்தியானம் வரை உள்ள காலப்பகுதியை மத்தீனா என்பது இத்தாலி.
26. Sera (சேரா) - பொழுது சேரும் நேரம், சூரியன் சாயுங்காலம்.
27. Destra (தெஸ்த்ரா)- தெற்கு, தெக்கணம். (Deccan Plateau-தக்கான பீடபூமி, தெற்கு பூமி)
சூரியனுக்கு முன்பாக நின்று கிழக்கு பார்த்து, இரு கைகளையும் விரித்தால் இடது கை வடக்குப்புறமும், வலது கை தெற்கு புறமும் இருக்கும். திசை என்பதற்கு திரை என்றும் வார்த்தை உண்டு என்பது நமக்குத்  தெரியும். திரை கடல் ஓடியும் திரவியம் தேடு. இப்ப இந்த தென் திறம் என்பதுதான் தெஸ்திரம், இத்தாலியில் destra என்றாகி உள்ளது. வலது கை பகுதி வட புறத்திலுள்ள சனி மூலை, சனி திசை, சனி திரம் ஆக sinistra (அடுத்த வார்த்தை) ஆகியிருக்கிறது.
28. Sinistra (சினிஸ்திறா)- சனி, ஈசான மூலை. சனி-திரம்
29. Tele (தெலெ)- தொலைவு, telephone, television எல்லாம் இதன் பொருளில் தான்.
30. Geo- ஜெகம், செகம், சனித்தல், பிறப்பித்தல், உயிர் உருவாகக்கூடிய ஒரே கிரகம் இந்த பூமி என்பதால்.
31. Prima vera(பிறிமா வேரா)- வசந்த காலம், மழை, குளிர் காலம் முடிந்து இலை துளிர்க்கும் காலம். தமிழில் இது வசந்த காலம் என்றாலும் சரியான வார்த்தை பசந்த காலம் என்கிறார் தமிழறிஞர் இராம.கி. எங்கும் பசுமை இருப்பதால் இப்பெயர். prima vera- என்றால் பிரதம வருகை, துளிர்களின் முதல் வருகை தான் prima vera.
32. Secoli (சேக்கோழி)-ஊழி, பன்நெடுங்காலம், பல காலம்
33. Metere(மேதெரே)-மாத்திரை, செய்யுளில் நேர் நேர் புளிமா என்று வெண்பா பற்றி தமிழ் வகுப்புகளில் படித்திருப்போம். அப்போ அளவுகளுக்கு மாத்திரை என்று சொல்லக்கேட்டுருப்போம். அதேதான். அந்த மாத்திரைதான், metere, ஆங்கிலத்தில் meter.
34. Calendario (காலெந்தாறியோ )- கால அந்தம்-ஆதி. காலத்தின் தொடக்க முடிவு.
35. Zodiaco (சோதியாகோ)-ஜாதகம், சோதியம், சோதி (ஜோதி) யாக இருக்கும் பலகோடி நட்சத்திரங்களைப்பற்றிய துறை. நாம்தான் ஜாதகம். ஜோசியம் என்று சொல்லிகொண்டிருக்கிறோம்.
36. Cena (சேனா)- சேனம்,   சேனம் என்றால் உணவு. போசனப்பிரியன்-சாப்பாட்டுராமன், இராபோசனம், இராவுணவு. 
37. Colazione (கொலாட்சியோனே)- காலை சேனம், காலை உணவு.
38. Pranzo (பிரான்சோ)- மதிய உணவு.
இந்த விளக்கம் எனது தனிப்பட்ட கருத்து. மாற்று விளக்கம் இருந்தால் தெரியப்படுத்தலாம். பொதுவாக தமிழர்கள் தொடக்க காலத்தில் விவசாயிகள். மதிய உணவு சமைக்க நேரம் இருக்காது. ஆகவே முந்தைய நாள் சோறை தண்ணி ஊற்றி பழைய சாதமாக சாப்பிடுவார்கள். அந்த பழஞ்சோறு பிழஞ்சோறு, பிரான்சோறு, பிரான்சோ என ஆகியிருக்கலாம்.
39. Orientale (ஒரியென்தாலே)-Occidentale (ஒக்சிதேந்தாலே)
இந்த oriental என்ற வார்த்தை கிழக்கத்திய என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். சரிதான். சூரியன் உதிக்கும் பகுதியில் உள்ள நிலங்கள். உதியந்தல். இது ஏறக்குறைய ஜப்பான் முதல் துருக்கி வரை உள்ள பகுதியைக்குறிக்கும். occidental என்றால் மேற்கத்திய என்று அர்த்தப்படுத்துகிறோம். அது சரியல்ல. உண்மையில் சூரியன் உச்சியில் இருக்கும் பகுதி என்றே பொருள்படும். உச்சிதன்தல். அதாவது, ஐரோப்பா, ஆப்பிரிக்கா முழுவதையும் குறிக்கும். அப்ப சூரியன் மறையும் பகுதியில் உள்ள நாடுகளை எப்படி அழைப்பது. எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் தெரியப்படுத்தலாம்.
_____________

6. நிறம்.

1. Nero (நேரோ) - கறுப்பு.

கறுப்புதான்  எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலில் தமிழர் நிறம் கறுப்பு என்று  வரும். உண்மைதான்.
மனிதர், தெய்வங்கள் அனைத்தும் கறுப்பாக வைத்திருந்தான் தமிழன். கறுப்பை பிடித்திருந்தது தமிழனுக்கு. இப்ப இல்லை. வெள்ளைக்கு தாவி விட்டான். நடிகர், நடிகை முதற்கொண்டு, தெய்வத்தின் நிறம் வரை அனைத்தும் வெள்ளையாக இருக்க வேண்டும். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று வடிவேல் சொல்வது வெறும் நகைச்சுவை மட்டும் அல்ல அது சமுதாய உண்மை, கேடு. வெள்ளையாக இருக்கும் எதுவுமே நல்லதில்லை. பசும்பால், உப்பு, சர்க்கரை, வெள்ளை அரிசி, பற்பசை. எல்லாம் இரசாயன நிறமிகளால் நிறம் மாற்றப்படுகிறது வெள்ளையாக. ஐரோப்பாவிலுள்ள வெள்ளையர்களும் வெள்ளைத்தோல் நேரடியாக சூரிய ஒளியால் கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளாவதால் சூரியக்குளியல் செய்கிறார்கள். கறுப்பாக, நோய் எதிர்ப்புத்தன்மை பெற,  d விட்டமின் பெற. நமக்கு அது தேவையே இல்லை. உடம்பெல்லாம் மச்சம், கறுப்பு. சரி.
தமிழில் நிறம் என்றாலே அது கறுப்பைத்தான் குறிக்கும். நம்மூரில் மாப்பிள்ளை மாநிறம் என்றால், அவர் கறுப்பும் இல்லை. சிவப்பும் இல்லை, இரண்டுக்கும் இடைப்பட்ட நிறம் என்று நினைக்கிறோம். உண்மையில்லை. மாநிறம் என்றால் மா கறுப்பு, மிகவும் கறுப்பு என்றுதான் அர்த்தம். இந்த நிறம், கறுப்பு என்ற வார்த்தை தான் (நிறம்-negro-நெகறோ )நீக்ரோ என்றும் ஆனது. அது இத்தாலியில் நேரோ-கறுப்பு என்று ஆகிவிட்டது. நிறம் என்றாலும் நீக்ரோ என்றாலும் நேரோ என்றாலும் அர்த்தம் ஒன்றுதான். கறுப்பு.

2. Giallo (ஜாள்ளோ) - மஞ்சள், மஞ்சள் என்பதில் 'ம' வை மட்டும் எடுத்துவிட்டார்கள். ஞ்சள் -ஞ்சாள் -ஞ்சாள்ளோ. அப்படியே ஆங்கிலத்தில் யள்ளோ (yellow) என்றாகிவிட்டது.

3. Rosso (ரோசோ)- சிவப்பு, சிவப்புக்கு அடிப்படை இரத்தம். இரத்த வண்ணம் என்பது அப்படியே வண்ணத்துக்கானப் பெயராகிவிட்டது. சிவப்பு  வண்ணக் கடல் கூட (ரெட் சீ ) செங்கடல் என்றுதான் அழைக்கப்படுகிறது. முகம் சிவந்து கோபப்படுவதைக்கூட இத்தாலியர்கள் Arrabbiare என்று இரத்த நிறத்தை இணைத்துத்தான் சொல்கிறார்கள். (Arabia) அரபு நாடுகள் கூட செம்மண் பாலைவனமாய் இருப்பதால் தான் அரபு நாடு எனப்பெயர் பெற்றது.

4. Bianco (பியான்கோ)- வெள்ளை. பயத்தால் முகத்தில் இரத்த ஓட்டம் இல்லாது வெளிரிப்போய்விடும். பயங்கொண்ட நிறமாகத்தான் பியான்கோ என்கிறார்கள். ஆனால் எல் என்றால் ஒளி வெள்ளை என்று பொருள். இந்த 'எல்' லிருந்து வரும் சொல் இலவம். இலவம் என்றால் வெள்ளை என்று பொருள். இலவம் பஞ்சு. வெண்பஞ்சு. இத்தாலியர்கள் இந்த எல் அ ஒளி வெண்மையை பல வார்த்தைகளில் பயன்படுத்துகிறார்கள். இலவண்டெரியா-ஆடைகள் வெளுக்கப்படும் இடம். Elettricita - (Elettricity) ஒளி அமைப்பு,(Alpi) ஆல்ப்ஸ் மலை-வெண்பனி மலை. லெபனான் நகரத்தின் பெயர்ப்பொருள் வெண்பனி நகரம் என்பதே.

Rome நகரத்தின் ஊடாக பாயும் நதி டைபர் நதி. இத்தாலி மொழியில் அது தவெரெ (Tavere) என்று அழைக்கப்படுகிறது.Tiberinus silvius என்ற ரோமை நகர மன்னன் அப்போதைய நதியின் பெயரான (albula) அல்புழா என்ற இந்த நதியில் சிறுநீர் கழித்ததால் இந்த நதி அம்மன்னன் பெயரால் பெயர் மாற்றம் பெற்றது? அல்புழா என்பதும், கேரளாவில் உள்ள ஆலப்புழை என்ற நதியின் பெயர் அர்த்தமும் ஒன்றே அது வெண்ணிற நதி என்பதே. அதாவது இந்த நதி அன்றிலிருந்து இன்று வரை வெள்ளம் கரைபுரண்டு ஓடக்கூடியது. புது வெள்ளம் வெண்பழுப்பு நிறத்தோடு அடிக்கடி வருவதால் இப்பெயர் பெற்றது.
______________________

7.1 பொதுவானவை
1. Guerra (குவெர்ரா)- போர்- குரோதம்
2. Aqua (ஆக்குவா)- அக்கம் (தமிழ் வார்த்தைதான்), ஊற்றுநீர்.
3. Latte (லாத்தே)- பால் - பாலாடை என்ற தமிழ் வார்த்தையில் 'பா' என்ற வார்த்தை நீங்கி லாடை, லாதை, லாத்தே ஆகிவிட்டது.
4. Vestiti (வேஸ்திதி)-வேட்டி, வஸ்திரம்
5. Camminare (கம்மினாரே)- நடத்தல்-கம்முதல் என்றால் பதுங்கி நடத்தல்.
6. Tovalia (தொவாலியா)- மேசை விரிப்பு - மடித்துவாலை என்ற தமிழ் வார்த்தையில் 'மடி' யை எடுத்தால் துவாலை.
7. Coppa, cup- கோப்பை
8. Vuoto (வோத்தோ) - வெறுமை - வெற்று
9. Rullo (ருள்ளோ)-உருளை
10. Musica (மூசிகா)- இசை,  - இசைவு, பல ஒலிக்கோர்ப்புகள் மற்றும் இசைக்கருவிகளின் சப்தங்கள் கோர்வையாக, இசைவாக வருவது இசை.
11. Macinare-Masticare (மச்சினாரே)- அரைத்தல், சுழலுதல்- தமிழில் மசி என்றால் அரைத்தல் என பொருள்படும். எனது பாட்டியார் முன்பு என்னிடம் நல்லா மசிச்சு சாப்பிடு என்பார்கள்.  இந்த அரைத்தல் அப்படியே machine என்ற ஆங்கில வார்த்தையாய் எந்திரத்திற்கு எடுத்தாளப்படுகிறது.
12. Alarme (அலார்மே)- ஆங்கில அலாரம் தான். தமிழில் அலறுதல்
13. Scongiurare (ஸ்கொஞ்சுராரெ)-கொஞ்சுதல், கெஞ்சுதல்.
14. Hook- கொக்கி
15. Parola (பரோலா)- வார்த்தை - தமிழில் பரல் என்றால் வரிசை என்று பொருள். எழுத்துக்களின் வரிசை வார்த்தையாகிறது. தமிழிலும் அப்படித்தான், வார்த்தை என்றால் வரிசை என்றுதானே அர்த்தம். வார்க்கப்பட்டது, வரிசைப்பட்டது.
16. Conducente (கொண்டுச்செந்த்தே)- ஓட்டுனர், தமிழில் கொண்டுசெல்பவர்.
17. Caramilla (கரமில்லா)- இனிப்பு, மிட்டாய் - கார-மில்லா- காரம்- இல்லாதது, இனிப்பு.
18. Ciao(ச்சாவோ)- ஆங்கிலத்தில் bye என்று பிரியும் வேளையில் சொல்வதைப்போல் இத்தாலியில் இந்த வார்த்தை. நம் தமிழில்  சாவு என்றால் பிரிவு, மரணம். அவர்கள் பிரியும் வேளையில் அவ்வாறு சொல்கிறார்கள்.
19. Cucina (குச்சினா) - சமையலறை. நம் தமிழில் சமையறைக்கு இன்னொரு பெயர் குசினி. சமையற்காரரை குசினிக்காரர் என்றும் சொல்வார்கள்.

20. Casa (காசா)- வீடு. இந்த வார்த்தைக்கான மூலச்சொல் கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமப்பட்டேன். கடைசியில தேடிப் பிடிச்சாச்சு. மூலச்சொல் நம் தமிழ் அகம். அகம் என்றால் வீடு. அகம், பொருள், இன்பம், வீடு (இந்த வீடு - இறுதி வீடு பேறு). நம்மூர்ல பிராமணர்கள் தான் இன்னும் இந்த சுத்த தமிழ் வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஆத்துல எல்லாரும் சுகமா? என்றால் அகத்தில என்றுதான் அர்த்தம். பேச்சுவழக்கில் சற்று மாறிவிட்டது. தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் அது கூட சொல்வதில்லையே. சரி விசயத்திற்கு வருவோம். இந்த அகம். இந்த அகத்தை அப்படியே ஆங்கிலத்தில் எழுதினால் ahome, a-home. கிரேக்கத்தில் வீட்டிற்கு, அகத்திற்கு பெயர் (அகோஸ்) Oikos. இந்த Oikos ஐ Oi-kos என பிரித்தால் kos (அப்படியே இது ஆங்கிலத்தில் kos-hos-house), கொஞ்சம் மாறி இத்தாலியில் cos, cas, casa என ஆகியிருக்கிறது.
         21. Cipolli (சிப்போள்ளி)- வெங்காயம்- வெங்காயத்திற்கு ஒரு தமிழ் பெயர் உள்ளி.
நுந்தையை உள்ளிப் பொடிந்தநின் செவ்வி (பொருள்: நினைத்து, புறநானூறு)
22. Panorama (பனோரமா)- ஆங்கிலத்திலும் கூட 'panoramic view' என்ற ஒரு பதம் வரும். பூரணம், முழுமை.
23. Gaso (வாயு, எரிவாயு)-கசிவு, பாறைகளுக்கிடையிலிருந்து வரும் கசிவு. 
24. Covo (கோவோ)- குகை, மகாபலிபுரத்துக்கருகில் ஒரு சுற்றுலா விடுதியின் பெயர் 'Fisherman's cove'.
25. Giolleria (ஜோயல்லேரியா)- ஆங்கிலத்தில் jewellery. தமிழில் சொலித்தல், இதன் மூலச்சொல்லும் சோதி, சூரியன். சோதி போல சொலித்தலால், சுய ஒளித்தலால் இப்பெயர்.
26. Certo (செர்த்தோ)-சரிதான், அர்த்தமே அதுதாங்க. சரிதான் !
27. Coprire (கொப்ரீரெ)- மூடுதல். கொப்பரை
28. Scivolata (ஷிஒலதா)-  ஒலட்டுதல், மிதிவண்டி பழகும்போது ஓட்டத்தெரியாமல் ஆட்டுவொம்ல அதுக்கு பேர்தான் இந்த ஒலட்டுதல்.
29. Matura (மத்துரா)- முத்துதல், பழங்கள் முத்துதலுக்கு பயன்படும் வார்த்தை.
30. Bugia (புஜிஆ)-பொய்
31. Mosso (மோசோ)- கடல் அலைகள் கடுமையாக இருந்தால் அதற்கான வார்த்தை. (ஆங்கிலத்தில் rough sea) மோசம்.
32. Palestra(பாலஸ்திரா)- உடற்பயிற்சிக்களம், பல்வேறு உடற்பயிற்ச்சிக்கருவிகள் உதவியால் பல திறன்கள் கற்கும் இடம்.
33. Evitare (எவிதாரே) -தவிர்த்தல்
34. Ago (அக்கோ)- ஊக்கு, ஊசி
35. Filo (ஃபீலொ)- இழை, நூல்
36. Avvisare (அவ்விசாரெ)- விசாரித்தல்
37. Piove(பியோவே)- மழை, மழை பெய்கை, பொழிகை
38. Balcone(பால்கோனே)- ஆங்கில balcony, தமிழில் பலகணி, பல கண்ணிகள் அ திறப்புகள் உள்ளது.
39. Tour- ஆங்கிலத்திலும் 'tour' தான். தமிழில் தூரம், தொலைவு.
40. Esili(ஏசிலி)-அபலை, ஆதரவற்றவர், நாடற்றவர், அகதி. நல்ல தமிழில் ஏதிலி - ஏதும் இல்லாதவர்.
41. Vento(வெண்தோ)-காற்று. வடக்கிலிருந்து வீசும் காற்று வாடைக்காற்று. தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல். வன்மையான வாடைக்காற்று பனி நாடுகளில் அவ்வாறே அழைக்கப்படுகிறது. மின்விசிறிகூட ventilatore (வெந்திலாதோரே) காற்றை அலைபாயச்செய்தல் என்ற அர்த்தத்திலே வருகிறது. ஆங்கிலத்தில் கூட ventilator என்றால் காற்றை வெளியேற்றுதல் என்று நமக்குத் தெரியும்
42. Accuragione (அக்குறாஜியோனே)-குறிபார்த்தல்
43. Sorgere(சோர்ஜெரெ)- உதித்தல், சூரிய உதயம், சூரியனிலிருந்து மூலச்சொல்லை எடுத்து அதன் செயலுக்கு இவ்வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.
44. Tunica (தூணிகா)-துணி
45. Phallic-பாலியல், பலான
46. Serrare (செர்றாரே)-செறிவுள்ள
47. Fuoco(ஃபுவொகொ)- நெருப்பு, புகைக்கான வார்த்தையை அப்படியே நெருப்புக்கு பயன்படுத்துகிறார்கள். நாம சொல்வோமில்லையா நெருப்பு இல்லாமல் புகையாது என்று. அதனால அதை அப்படியே பயன்படுத்துறாங்க.
48. Smarrire(ஸ்மறீரே)-மறத்தல்
49. Stabilito (ஸ்தபிலித்தொ)-ஸ்தாபித்தல், திறப்படுத்துதல்.
50. territore (தெறித்தொரே)- தறிபோடுதல். (ஆங்கிலத்தில் textiles)
51. Cogliere (கோழியெரெ)-கொய்தல், பறித்தல்.
52. Birra (பிற்றா)- நீர், தமிழ்நாட்டில் பீர் என்றால் மதுபானம் என்றாகிவிட்டது. உண்மையில் பீர் என்றால் நீர் என்றுதான் அர்த்தம். மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகரம் பெய்ரூட் (Beirut) டின் அர்த்தம் கூட நீரூற்றுகளின் நகரம் என்பதாகும். காண்க: http://en.wikipedia.org/wiki/Beirut
53. Seno (செனோ) - சினை.
54. Terra (தெர்ரா)-பூமி. நாம் தரைக்கு பயன்படுத்தும் வார்த்தையை அவர்கள் ஒட்டுமொத்த நிலத்துக்கும் பயன்படுத்துகிறார்கள். Metro (Me-tro)- me அ ne என்றால் கீழே என்றுதான் பொருள்படும்.
(metro) மெட்ரோ-me - tharai தரை -தரைக்குக் கீழ்,
Nederland - ne -தரை -நிலம் - நிலத்தில் தாழ்வான பகுதி. (Holland - hollow land)

55. Mare (மாரே)- கடல், கடலுக்கு இன்னொரு தமிழ் வார்த்தை வாரி, அனைத்தையும் அலை வந்து வாரிச் சுருட்டி எடுத்துச் செல்வதால் அப்பெயர். இந்த வாரி தான் mare, marina என்றாகிவிட்டது. ஆங்கிலத்திலும் (maraine) மரைன். நம்மூர் மரினா (கடற்)கரை. marina என்றாலே கடல்தானே அப்பறம் என்ன தனியா கடல்னு.
56. Sala (சாலா)- பெரும் அறை, சாலை, கல்விசாலை
57. Tirare (திறாரே)-திறப்பது தமிழிலும் அப்படியே.
58. Vaso (வாசோ)- சிறிய கொள்கலன், பாத்திரம். தமிழில் வசி என்றால் பாத்திரம் என்ற பொருள். (வசிப்பது இன்னொரு பொருள்)
59. Pane (பாணே)- பண், ரொட்டி
60. Pagina (பாஜினா)- பக்கம்
61. Cassa (காஸ்ஸா )- காசு 
62. Paragonare (பரகொனாரே)- ஒப்புமைப்படுதிப்பார்த்தல், பல கோணங்களில் ஒப்புமைப்படுத்துதல்.
63. Pozzo (போட்சோ)-கிணறு, தமிழில் பொந்து, கிணறு.
64. Onda (ஓந்தா)-அலை தமிழில் ஓதம்
65. Digerire (திஜெரிரெ)-செரித்தல்
66. Isola (ஈசோலா)- தீவு. இந்த வார்த்தையும் கொஞ்சம் என்னை தேட வைத்தது. எங்கெங்கு பார்த்தாலும் பாலைவனமாய் இருக்கும் பகுதியில் ஏதோ ஒரு பகுதியில் பசுமை, மரங்கள் தெரிந்தால் அது பாலைவனச்சோலை என்பது நமக்குத்தெரியும். இதை அப்படியே கடலுக்கும் பயன்படுத்தலாம். எங்கெங்கும் கடலாய், கடல்நீராய் இருக்கும் இடத்தில் ஏதோ ஒரு பகுதியில் பசுமை, மரங்கள் தெரிந்தால் அது நீர்ச்சோலை. இந்த நீர்ச்சோலை தான், நீர்சோலை, ந் + ஈர்சோலை, ஈசோலை, ஈசோலா (isola). இந்த ஈசோலை யிலிருந்து isola, அப்படியே ஆங்கிலத்தில் island. (ஏதாவது ஆஸ்காருக்கு சொல்லுங்கப்பா இந்த கண்டுபிடிப்புக்கு.)
67. Cavalcare (கவல்காரே)-காவல்தாண்டுதல்
68. Signora, signore  (சிங்ஞோரா, சிங்ஞோரே  )- ஆங்கிலத்தில் சார், மேடம் என்பதைப்போல இத்தாலியில் பொதுப்பெயர். கணவான் எனலாம். சிங்காரன், சிங்காரி.  (சிங்காரவேலன்)
69. Assegnare (அசெங்ஞாறே )-அசைபோடுதல் 
70. Violino (வியொலினொ)- 'வை. கோ' சொல்வதைப்போல 17 வகையான யாழ் தமிழர்கள் பயன்படுத்தினார்கள். யாழ்ப்பாணன் என்றால் யாழ் கொண்டு பாட்டு இசைப்பவன் என்று பொருள். அதில் பெரிய யாழ் பேரியாழ் எனப்பட்டது. விரியாழ் என்பது அகன்ற பெரிய யாழ். விரியாழ், வியாழ், வியாழினோ, வியொலினொ (இத்தாலியில்), வயலின் (ஆங்கிலத்தில்). வியாழன் கிரகத்திற்கும் காரணப்பெயர் அது விரிந்த, மிகப்பெரிய கிரகம் என்பதாகும். வியாழன் பூமியைவிட 1200 மடங்கு பெரியது.
71. Tyranno(திரான்னொ)- கொடுங்கோலன், கொடூரன் என்பதில் உள்ள டூரன், தூரன், திரான்னொ.
72. Alluvione (அள்ளுவியோனே )- வெள்ளம், அள்ளிச்செல்லும்  வெள்ளம்.
73. Denaro (தெனாரொ)-செல்வம், பணம், தனம். அராபிய பணமதிப்பும் தினார் என்று வரும். அதுவும் தனம்  தான்.
74. Ospedale (ஒஸ்பெதாலே)- ஆஸ்பத்திரி- தமிழில் மருந்து என்பதற்குப்பெயர் ஔடதம்,  ஔஷதம், ஆஸ்பத்திரி, ospetale, hospital.
75. Farmacia (ஃபார்மாச்சியா)- மருந்து நிலையம். தமிழரர்கள் முதலில் பல தசை, எலும்பு, நரம்பு முடிச்சுகளை கண்டறிந்தவர்கள். அவற்றை சரிப்படுத்துவன்மூலம் எந்த நோயையும் குணப்படுத்தமுடியும் என்று கண்டவர்கள். அதிலே சிறப்பு பெற்றவர்கள் சித்தர்கள்.

தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப் புள்ளிக்களும்,
நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும்,
உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும்,
முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் முன் பக்கத்தில் 9 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் பின்பக்கம் 13வர்மப் புள்ளிகளும்,
கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும்

இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் அகத்தியர். 

இந்த தமிழ் வர்மம் தான், கிரேக்கத்தில் pharma என்று மாறுகிறது.

இத்தாலியில்  ஃபார்மாச்சியா (Farmacia ), ஆங்கிலத்தில் pharmacy.
____________

8. இத்தாலி-தமிழ்: மதம், வழிபாடு தொடர்பானவை
1. Ottaviano. வத்திகான் நகரத்தினருகில் முக்கிய சாலைப்பிரிவு ottaviano. காரணம் அங்கு நின்று பார்த்தால் 8 சாலைகளின் பிரிவு இருக்கிறது. 8 வழி - ஒத்தொ-வியானோ
2. Colleseo (கொலோசெயோ)- கொலை செய்யுமிடம், அடிமைகளையும், எதிரிகளையும் நேருக்கு நேர் சண்டை போடவைத்தோ அ கொடூர விலங்குகளோடு மோதவிட்டோ கொலை செய்வது. அதை அரங்கத்திலிருந்து அரசன் பரிவாரங்களோடு பார்த்து ரசிப்பது. இதற்கான இடம் தான் இது. Gladiator திரைப்படத்தில் வருவதைப்போல.
3. Buono (போனோ)- நல்லது தமிழில் புண்ணியம். உங்களுக்கு நல்லதா போகட்டும், உங்களுக்கு புண்ணியமா போகட்டும்.
4. Male (மாலே)- கெட்டது, தீயது. தமிழில் மலம் என்றால், கழிவு மட்டுமல்ல அழுக்கு, சீக்கு, குறை.
5. Amen-ஆம் அப்படியே.
6. Canto (காந்தோ) - பாட்டு, கானம்
7. Santo (சாந்தோ)- புனிதன், தமிழில்  சாந்தம், சால்பு, சாந்தன், சாந்தி.
8. Cere (சேரே)- மெழுகு, தமிழில் சேறு, மெழுகு சேறு.
9. Oliva (ஒளிவா)- ஒளிவ மரம். தமிழில் ஒலிவ மரம் என்று எழுதப் பழகிவிட்டோம். உண்மையில் ஒளிவ மரம் என்றுதான் எழுதவேண்டும். காரணம், இந்த மரத்தின் காயிலிருந்து எண்ணை எடுக்கப்பட்டு விளக்கு எரிக்கவும் பயன்படுகிறது.
10. Sano (சானோ)- ஆரோக்கியம் தமிழில் சாணம் தொடர்பான பொருட்கள் கிருமிநாசினியாக பயன்பட்டது. வீடுகளில் சாணத்தில் மெழுகியது அதன் காரணமாகத்தான்.
11. Parroco (பாரக்கோ)- பங்குப்பணியாளர் அ பங்குத்தந்தை. அவர் ஒரு குறிப்பிட்ட பகுதியின், பரப்பின் பொறுப்பாளர், தலைவன், (கோ) தலைவன், என்ற அடிப்படையில் பார் (உலகம், பகுதி) கோ.
12. Nuovo (நோவோ)- நவ, புதிய. (புதிய ஏற்பாடு)
13. Antico (அந்திக்கோ)- அந்திம காலம், வாழ்வின் இறுதிக்காலம், பழைய, முடிந்துபோன காலம். முந்தைய காலம். (பழைய ஏற்பாடு)
14. Preghiera (பிரெகெயிரா)- செபம், பரிகாரம்.
15. Capella (கப்பெல்லா) - சிற்றாலயம், தமிழில் கபால (capo-இல்லம்)அ தலைவனின் இல்லம்.
16. Aurora (ஔரோரா)- விடியல் தமிழில் ஆரோகணம், சூரியனின் எற்பாடு.
17. Cielo (சேலோ)-வானம், வானகம். தமிழில் சைலம் என்றால் மலை. தமிழ்நாட்டில் உள்ள சேலம் நகரம் மலைகள் சூழ்ந்த நகரம். ஏற்காடு, சேர்வராயன் மலை, நாம மலை, ஊத்து மலை, கஞ்ச மலை, சாமியார் குன்று என மலைகள் சூழ்ந்ததால் அப்பெயர். மலை உயர்வை, மேட்டை, தரையைவிட வானம் நோக்கிய பகுதியைக் குறிப்பதால் வானம் ஆனது.
18. Satana (சத்தானா)-சாத்தான்.
19. Paradiso (பரதீசோ)- விண்ணகம், தமிழில் பரதேசம், பாரதேசம், தூரதேசம்.
20. Croce (குரோச்சே)-சிலுவை. தமிழில் குருசு, குறுக்கு சட்டம்.
21. Fariseo (ஃபரிசேயோ )- பரிசேயர்கள், பரிசுத்தமானவர்கள்.
22. Carmel (கர்மேல்)- கருமலை, கருமையான மேரு (மலை) கருமேரு.
23. Giusseppe (யோசேப்பு) - ஆங்கிலத்தில் joseph தமிழில் சூசை. எபிரேய மொழியில் இதன் பெயர் விளக்கம் பார்த்தால், துணை, சேர்ப்பு, உசாத்துணை என்றே வருகிறது.
25. stella (ஸ்தெல்லா)- நட்சத்திரம்-
வானியலில் உள்ள 27 நட்சத்திரக்கூட்டங்களில் ஒன்று இந்த taurus நட்சத்திரக்கூட்டம். இது கிரெக்கப்பெயர் என்பார்கள். உண்மையில் சுத்த தமிழ்ப்பெயர். நம்மூரில் காளை மாட்டுக்கு, மாட்டு வண்டிக்கு பயன்படுத்தும் குச்சியை தார்க்குச்சி என்றுதான் சொல்லுவார்கள். தார் என்றால் தமிழில் காளை என்றே பொருள். வட இந்திய நடிகர் ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த படம் தாரே ஜமின் பர் (taare jamin par) இதன் அர்த்தம் 'மண்ணில் வந்த நட்சத்திரம்'. இந்த தாரே என்பது இந்த நட்சத்திரக்கூட்டத்தைத்தான் குறிக்கிறது. கிறித்தவர்கள் பாடும் ஒரு பாடலில் தாரகை சூடும் மாமரியே என்று பாடுவார்கள். இந்த தாரகை என்பது இந்த நட்சத்திரக்கூட்டத்தை மாலையாக அணிந்தவளே என்று தான் அர்த்தம். (இப்பத்தி மட்டும் இவ்வலைத்தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டது)
இந்த தார் அப்படியே எபிரேயத்திற்கு வரும்போது எஸ்தர், அப்படியே இத்தாலிக்கு வரும்போது எஸ்தெல்லா,  ஸ்தெல்லா-வாகி, ஆங்கிலத்தில் ஸ்டார் ஆகிவிடுகிறது.

26. Meditazione-(மேதிதாட்சியோனே )madi–tacere-மதி, மன அமைதிப்படுத்துதல். (tacere என்றால் அமைதிப்படுத்துதல் என்றே இத்தாலியில் அர்த்தம்)
27. Maranatha (மாரநாதா)- வாரும் நாதா.

28. Madonna, donna-மாது, 

29. Immacolato (இம்மாகொலாத்தொ)- male, மலம், சீக்கு, குறை, தீமை என்று இதே பதிவில் மேலே பார்த்தோம். அந்தக் குறைகளெல்லாம் இல்லாதவர்.

30. Diavolo (தீயாவுளோ)- தீயவன், சாத்தான், பேய். சூரியனிலிருந்து உருவான பூமி கோடிக்கணக்கான வருடங்கள் கழித்து குளிர்ந்து, நிலமாகி, உயிர் உருவாக்கத்தொடங்கியது என்று நாம் அறிவோம். அதனால் தான் இன்னும் பூமிக்குள்ளே அந்த சூரியக்குழம்பு நெருப்பாய், எரிமலைக்குழம்பாய் இருக்கிறது என்பதையும் அறிவோம். பூமிக்குள்ள உள்ள தீ யினால் நன்மை  இல்லை கெடுதல் தான். அதனால் ஏற்படும் எரிமலை சுனாமி போன்றவைகளால் தீமைதான் என்பதால் பூமிக்குள்ளே இருக்கும் தீயை நரகம், பேயின் இடம், 'தீ' யவன், தீயாவுளோ, சாத்தான் என்றார்கள் முன்னோர். தீ 'உள்', தீயாவுளோ, diavolo, ஆங்கிலத்தில் devil, evil.
31. Angelo (அஞ்செலொ )-வானதூதன். தமிழில் அஞ்சலன், அஞ்சல் அனுப்புவவன், தூதன். கிரேக்கத்திலும் Angelos.

32. Dio (தியோ)-கடவுள், தெய்வம்.
தமிழில் உயிர் உருவாக காரணமான தீயான சூரியனை தெய்வம் என்று வழிபட்டவர்கள் தமிழர்கள். அதனால் தான் பொங்கல் விழாவில் சூரியனுக்கு நன்றி தெரிவிப்பார்கள். தீயான சூரியன் உயிர் அனைத்தும் உருவாகக்காரணமாதலால் தீ - தீய்வம் - தெய்வம் என்போம். பூமிக்குள்ளே உள்ள தீ தீயது. ஆகவே diavolo, devil. பூமிக்கு வெளியே உள்ள தீ சூரியன் நல்லது. உயிர் தருவது. ஆகவே தெய்வம். உண்மையில் என்ன ஒரு அறிவியல் உண்மை.
மலயாளத்துலயும்  தெய்வம் தான்.
தெலுங்கில் இந்த தெய்வம் தேவுடு. சமஸ்க்ருதத்தில் தேஜஸ். தேஜஸா இருக்கிறான் என்றால் பிரகாசமாய், பள பள ன்னு இருக்கிறான் என்றே சொல்வோம்.
கிரேக்கத்தில் Theos, அதனால்தான் கடவுள் பற்றிய படிப்பு theology. Rome நகரத்தில் உள்ள மிகப்பழமையான கோயில் pantheon (பாந்தெயோன்). அதன் பொருள் பல தெய்வங்களின் கோயில். (pan-theon)
இந்தத்தெய்வம்   இலத்தீனில் Deus, அப்படியே இத்தாலியில் Dio- தியோ. இசுபானிய மொழியில் dios, பிரெஞ்ச் மொழியில் dieu,
  
வரலாற்றின் தந்தை யார்? கிரேக்க நாட்டு ஹெரொடோடஸ்,
தத்துவத்துக்கு தந்தை யார்? கிரேக்க நாட்டு சாக்ரடிஸ்,
நிலவியலின் தந்தை யார்? கிரேக்க நாட்டு தாலமி.
கணிதவியலின் தந்தை யார்? கிரேக்க நாட்டு ஆர்கிமெடிஸ்.
இலக்கியத்தின் தந்தை யார்? இலியட், ஒடிசி எழுதிய கிரேக்க நாட்டு ஹோமர்.

ஏன்யா வேற யாருமே அவர்களுக்கு முன்னாடி வாழவில்லையா. ஐரோப்பியர்களுக்கு எல்லாம் அவர்கள் நாட்டிலிருந்து தான் ஆரம்பித்தது என்ற நினைப்பு. அறிவியல், முன்னேற்றம், வளர்ச்சி எல்லாம் அங்கிருந்தே தொடங்கியதாக உலகத்தை நம்ப வைக்க செய்திருக்கிறார்கள்.

இதனால் தான் அறிவியலில் சிறந்த கிழக்கத்திய நூலகங்கள் எல்லாம் அழிக்கப்பட்டது. இந்தியாவின் நாளந்தா, தட்சசீலம், ஈராக்கின் (மெசபடோமியா) பாபிலோன், எகிப்தின் அலெக்சாண்டரியா என முன்னோடி அறிவியல், வானவியல், நூலகங்கள் பிரதிஎடுத்தபின் எரித்து அழிக்கப்பட்டது.

ஆனால் கிரேக்க நாட்டின் பெயரே தமிழ்ப்பெயர்.
(Greece) கிரேக்க நாட்டிற்கு தொடக்க கால பெயர் எல்லே நாடு (ELLE).
எல், அல், என்றால் ஒளி என்பது பொருள். கிரேக்கத்தில் ஒளி தரும் எண்ணெய் மரங்களான ஒளிவ மரங்கள் அதிகம் என்பதால் அந்த நாடு எல்லே எனப்பட்டது. (Greek philosophy) கிரேக்கத்தத்துவங்களை (Hellenistic Philosophy) எல்லெனிய தத்துவம் என்றுதானே அழைக்கிறோம். ஏன்?

அந்த நாட்டில் உள்ள தீவுகள் தமிழ்ப்பெயரில் தான் உள்ளது. கரட்டு தீவு (crete), கரடு முரடான பாறைகள் நிறைந்ததுதான். செப்பறைத்தீவு (cyprus). செம்பு அதிகம் கிடைப்பதால். செம்புவுக்கு அறிவியல் குறியீடும் cu தான்.
இசுலாமியர்களின் இறைவனும் 'அல்லா' என்று அழைக்கப்படுவது இந்த ஒளியானவர் என்ற பொருளில் தான்.

அதனால்தான் அராபிய வானியலில் அனைத்து நட்சத்திரங்களும் AL என்ற முதல் வார்த்தையாகக் கொண்டுதான் குறிப்பிடப்படுகிறது.
எபிரேயக்கடவுளும் எல் (El) என்றே அழைக்கப்பட்டார். (Bethel)  பெத்-தேல்- இறைவனின் வீடு. (Emmanuel) இம்மானுவேல் மனுவோடு, மனிதனோடு கடவுள் என்று அழைக்கப்பட்டார்.
ஏன் மோசேயும் அவரது எகிப்திய அரசன் ஏகநாதனும் (Akhenaton) வழிபட்ட ஒரே கடவுளின் பெயர் ஏதேன்.

ஆக, உலகில் மதங்களுக்கிடையே இருப்பது மத வித்தியாசம் இல்லை. மொழி வித்தியாசம் தான். ஆனால் ஒவ்வொரு மதமும் (மதங்களில் இருந்த "விவரமானவர்கள்") தங்களது தனித்துவத்தை தக்கவைக்க, நிரூபிக்க சட்ட திட்டங்களை, கோட்பாடுகளை, வழிபாட்டை ஏற்படுத்திக்கொண்டன. அது தான் உண்மை என்று உலக மக்களை நம்ப வைக்க எல்லா முயற்சிகளையும், தகிடுதத்தங்களையும் மேற்கொள்கின்றன. எதிர்ப்பவர்கள், உண்மையை வெளிப்படுத்துபவர்கள் "காணாமற்போய்" விடுவார்கள். எந்த மதமும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்த எல் என்பது ஒளி தான்...
___________________________________

யாழறிவன்... Yalarivan Jackson

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக