இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும்.....!
இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் மிகப்பெரிய கண்டம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நோர்வே நாட்டு நிலவியலாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
உலகின் ஒட்டுமொத்த நிலப்பரப்பும் ஆரம்பத்தில் ஏறக்குறைய ஒரே கண்டமாக இருந்தது என்று கூறும் இந்த நிலவியலாளர்கள், இதற்கு ரொடினியா என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.
சுமார் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலப்பரப்பானது பல்வேறு கண்டங்களாக பிரிந்து படிப்படியாக ஒன்றிலிருந்து ஒன்று விலகியதாகவும், இந்த பிளவு மற்றும் நகர்வின்போது பூமியில் மிகப்பெரிய நிலப்பகுதி ஒன்று இந்திய பெருங்கடலில் மூழ்கியதாகவும் அந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியை தாங்கள் தற்போது கண்டறிந்திருப்பதாகவும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்திய பெருங்கடலுக்குள் புதைந்திருக்கும் இந்த நிலப்பகுதிக்கு மொரிசி(ஷி)யா என்று விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கிறார்கள். இந்த நிலப்பகுதியானது, சுமார் 2000 முதல் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு மேலே இருந்திருக்கலாம் என்றும் நிலவியல் விஞ்ஞானிகள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.
மொரீசியா என்கிற இந்த நிலப்பகுதியானது, பூமியின் நிலப்பகுதிகள் பல்வேறு கண்டங்களாக பிரிந்து தற்போது நாம் பார்க்கும் விதத்தில் நிலைபெற்ற காலகட்டத்தில், சிறு சிறு பகுதிகளாக பிளவுபட்டு படிப்படியாக கடலுக்குள் மூழ்கி விட்டதாக இவர்கள் கருதுகிறார்கள்.
உலகம் ஒரே கண்டமாக இருந்தது
உலகம் முழுவதும் ரொடினியா என்கிற ஒரே கண்டமாக இருந்தபோது தற்போதைய இந்திய பெருநிலப்பரப்பும் மடகாசு(ஸ்)கரும் ஒன்றுக்கு ஒன்று அடுத்தடுத்து இருந்த நிலப்பகுதிகளாக இருந்ததாக கூறும் நிலவியலாளர்கள், இந்த ரொடினியா கண்டம் பலபிரிவுகளாக பிளவுபடத்துவங்கி, ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாக பிரிந்து செல்லத்துவங்கியபோது, மொரிசியா கண்டம் காணாமல் போனதாக கருதிவந்தனர்.
அப்படி காணாமல் போன அந்த மொரிசியா நிலத்தில் ஒரு பகுதியை தாங்கள் தற்போது கண்டறிந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். மொரிசியசு(ஸ்) தீவுகளின் கடற்கரை மணலை ஆராய்ந்த பிறகு இந்த முடிவுக்கு தாங்கள் வந்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த மணல்துகள்களை தாங்கள் ஆராய்ந்தபோது அந்த பகுதியில் சுமார் 9 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்பு நடந்த எரிமலைக்குழம்பின் தடயங்களை அதில் கண்டதாக தெரிவிக்கும் நிலவியல் நிபுணர்கள், அந்த எரிமலைக்குழம்புடன் கூட, அதற்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த சிர்கோன் என்கிற துகள்களையும் தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சிர்கோன் துகள்கள் கண்டங்களின் மேல்பரப்பில் காணப்படுபவை, மிக மிகத் தொன்மையானவை (சிர்கோன் துகள்கள் சுமார் 1970 முதல் 600 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை), என்று சுட்டிக்காட்டும் நார்வே நாட்டின் ஒசு(ஸ்)லோ பல்கலைக்கழக பேராசிரியர் ட்ரோண்ட் டோர்ஸ்விக், மொரீசியசு தீவுப்பகுதியில் நடந்த எரிமலை வெடிப்பில் இந்த மூழ்கிய கண்டம் மேலேவந்து மொரீசியசு தீவுநிலப்பகுதியுடன் மோதி மீண்டும் கடலுக்குள் சென்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார்.
மொரீசியசு தீவுக்கு கீழே புதையுண்டிருப்பது என்ன?
எனவே, மொரீசியசு தீவுகளுக்கு கீழே கடலுக்குள் சுமார் பத்துகிலோமீட்டர் ஆழத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் மொரீசியா கண்டத்தின் சிலபகுதிகள் இருக்கலாம் என்றும் பேராசிரியர் டோர்ஸ்விக் கருதுகிறார்.
இந்தியப்பெருங்கடலுக்குள் மூழ்கியிருக்கும் மொரீசியா கண்டத்தின் ஒரு சிறுபகுதி இன்னமும் கடலுக்கு வெளியில் தெரியலாம் என்று கருதும் இவர், இந்தியப்பெருங்கடலின் மத்தியில் இருக்கும் சீஷெல்சு தீவு அப்படியானதொரு நிலமாக இருக்கக்கூடும் என்றும் கருதுகிறார்.
சீஷெல்சு(ஸ்) தீவுகள் ஒருகாலத்தில் மடகாசு(ஸ்)கர் தீவுகளுக்கு வடக்கே இருந்ததை சுட்டிக்காட்டும் நிலவியலாளர்கள், இந்த தீவின் நிலப்பகுதி இதுவரை நினைத்ததைவிட மிகப்பெரியதாக இருக்கலாம் என்றும், இந்திய பெருங்கடலில் விரவிக்கிடக்கும் வேறு நில தீவுப்பகுதிகளையும் ஆராயவேண்டும் என்றும் கருதுகிறார்கள்.
இப்படியாக கடலுக்குள் காணாமல் போன உலகின் ஆதிகண்டமான மொரீசியாவின் மிச்ச சொச்சங்களை கண்டறிவதற்கான மேலதிக ஆய்வுகள் செய்யப்படுவது அவசியம் என்கிறார் பேராசிரியர் டோர்ஸ்விக்.
இதில் தமிழர்களுக்கு கூடுதல் ஆர்வத்தை அளிக்கும் தகவல் என்னவென்றால், தமிழ்நாட்டின் தென்கோடி நிலப்பரப்பான ராமேசு(ஸ்)வரத்துக்கும் தெற்கே கடலுக்குள் லெமூரிய கண்டம் என்கிற கண்டம் மூழ்கியிருப்பதாக பல ஆண்டுகளாக தமிழறிஞர்களால் கருதப்பட்டு வந்திருக்கிறது.
இந்த பின்னணியில், நோர்வோ நாட்டு நிலவியல் விஞ்ஞானிகள் கூறும் மொரீசியா என்கிற கண்டத்திற்கும் தமிழறிஞர்கள் கூறும் லெமூரியா என்கிற கண்டத்துக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்பதை தமிழறிஞர்களும், இந்திய நிலவியலாளர்களும் ஆராய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
_____________________________________
யாழறிவன்... Yalarivan JaffnaFox
ion titanium hair color - Titanium Art
பதிலளிநீக்கு· sunscreen with zinc oxide and titanium dioxide 2018-03-12 15:59:24. used ford fusion titanium Category: ART, price of titanium Abstract, titanium dab tool Art, Abstract. solo titanium razor