கொற்கை: 3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு! (Korkai Excavation)
தூத்துக்குடி அருகே, பாண்டிய மன்னர் காலத்தில் துறைமுக பட்டணமாக திகழ்ந்த கொற்கை கிராமத்தில், 3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், காயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், குலசேகரன்பட்டணம், கொற்கை உள்ளிட்ட கிராமங்கள், துறைமுக பட்டணமாக திகழ்ந்தன. இவற்றிக்கு, தலைமையிடமாக கொற்கை இருந்தது. இங்கிருந்து கடல் வழியாக கப்பல், படகுகளில், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முத்து, சிப்பி, பவளம் உள்ளிட்ட பொருட்களும், மற்ற அத்தியாவசிய பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதுபோல, இறக்குமதியும் நடந்தது. காலப்போக்கில், கொற்கை துறைமுகம் அழிந்து போனது. இந்நிலையில், பெங்களூரில் மத்திய அரசின் தொல்லியல் துறையில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும் அறவாழி, சில நாட்களுக்கு முன், சொந்த மாவட்டமான தூத்துக்குடி வந்தார். அவர், கொற்கையில், பொக்லைன் இயந்திரத்தால் தோண்டப்பட்ட குளத்தில், ஆய்வு மேற்கொண்டார். அங்கு, முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார்.
கொற்கை சங்க காலம் தொட்டே ஒரு துறைமுக பட்டினமாய் இருந்து வந்தது. இதன் பழமையை அறிய தமிழ் நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையினர் 1968, 1969களில் இவ்விடத்தில் 12 அகழாய்வு குழிகள் இடப்பட்டன. அதன் படி பொ. மு. 850 ஆம் ஆண்டு மதிக்கத்தக்க பழம்பொருட்கள் கிடைத்தன. அதனால் இவ்வகழாய்வுகள் தமிழ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இங்கு தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பாணையோடு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் காலம் கரிம நாற்படுத்தல் மூலம் கி.மு. 755 ± 95 எனக் கணிக்கப்பட்டது. அதனால் இதன் ஆய்வுகள் தமிழ் எழுத்து வளர்ச்சியின் ஒரு திருப்புமுனையாய் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அறவாழி கூறியதாவது: இந்த குளத்தின் மேற்பரப்பில் களிமண்ணும், அதனடியில் சாதாரண மண்ணும், அதற்கடியில் கடற்கரை மண்ணும் உள்ளன. இதன்மூலம், இங்கிருந்த கடற்பரப்பில் முன்னோர்கள் வாழ்ந்தது தெரிய வருகிறது. காலப்போக்கில் அதற்கு மேல் மண், களிமண் படிந்தது. நடு அடுக்கிலுள்ள சாதாரண மண்ணில், இறந்த முன்னோர்களின் உடலை மண் பானைகளில் போட்டு புதைத்த, முதுமக்கள் தாழிகள் உள்ளன. சராசரியாக, நான்கு அடி உயரத்தில், 25க்கும் மேற்பட்ட தாழிகள், சிதிலமடைந்த நிலையில், இங்கு காணப்படுகின்றன. அதிலுள்ள மனித உடல்களின் எலும்புத் துண்டுகளை வைத்து பார்க்கும்போது, இவை, 2,500 முதல் 3,000 ஆண்டிற்கு முந்தையது என கணிக்கப்படுகிறது. எனினும், தொல்லியல் துறை நிபுணர்கள் மூலம், இங்கு மேலும் ஆராய்ச்சி மேற்கொண்டால், இங்கிருந்த முன்னோர்களின் வாழ்க்கை முறை, முதுமக்கள் தாழி போன்ற பல்வேறு அரிய பொருட்கள், தகவல்கள் துல்லியமாக தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, மிகப் பழமையான கண்ணகி கோவில் இங்குள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் முன்னோர்களின் முதுமக்கள் தாழிகள், தொல்லியல் துறை மூலமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுபோல, கொற்கையிலும் முதுமக்கள் தாழிகளை முழுமையாக கண்டறிந்து, வேலியிட்டு பாதுகாத்து, அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென, வரலாற்று ஆய்வாளர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, மணல் கொள்ளைக்காகவும், புதையல் இருப்பதாக கிளப்பி விடப்பட்ட வதந்தி காரணமாகவும், இக்குளம் பொக்லைன் இயந்திரம் மூலம் தொடர்ந்து தோண்டப்பட்டு, மணல் எடுக்கப்படுகிறது.
மொத்தம் தோண்டப்பட்ட 12 குழிகளில் சில முக்கியக்குழிகள்
இரண்டாம் குழி
1.62மீ ஆழத்தில் முதுமக்கள் தாழி ஒன்று கிடைத்தது. தமிழகத்தின் தொன்மையான இதே தாழி அடக்கமுறை ஆதிச்சநல்லூரிலும் காணப்படுகிறது.
மூன்றாவது குழி
செவ்வக வடிவ கட்டிடப்பகுதி.
நான்காம் குழி
செங்கற்சுவர் பகுதி. இதன் செங்கற்கள் 14*29*7.5 செ.மீ. அளவினைக் கொண்டிருந்தன. மேலும் இக்கட்டிடத்தின் கீழ் கிணற்றின் உறைகளும் அதன் தெற்கில் கழிவு நீர் கால்வய்க்கான சுவடுகளும் உள. மேலுமிக்குழியில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், சில கரித்துண்டுகளும் கிடைத்துளது.
ஐந்தாவது குழி
நான்கு சாடிகள், சில எலும்புத்துண்டுகள், மட்கலண்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சில்லுகள் ஆகியவை கிடைத்துள்ளன.
மற்ற குழிகள்
சில சங்குகள், சங்கு வளையல்கள், குறியீடுகள் கொண்ட பாணையோடுகளும் உள்ளன.
நான்காவது குழியில் கிடைத்த கரித்துண்டின் காலம் பொ.மு. 785 என்று மதிக்கப்படுவதால் (சி 14) அக்காலம் முதலே இங்கு கடல் போக்குவரத்து நடந்தது பற்றி அறிய முடிகிறது.
இங்கு காணப்படும் நாகரிகத்தை காலத்தைக் கொண்டு இதை 3 வகையாக பிரிக்கைன்ற்னர்.
முதல் பண்பாடு - கி.மு. 800 - கி.பி. 400
இரண்டாம் பண்பாடு - கி.பி. 401 - கி.பி. 1000
மூன்றாம் பண்பாடு - கி.பி.1001 - கி.பி.1400
அதன்படி முதற்பண்பாடே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
Korkai is a small village in Srivaikuntam Taluk of Tuticorin district. It is situated at a distance of 3 km to the north of the river Tamaraparani. The sea originally had receded about 6 km to the east. The river Tamaraparani skirted this town in ancient days. The site is referred to in Tamil Sangam literature, and has attracted the notices of the classical geographers as an important port of pearl fishery.
In the excavation a structure with nine courses of bricks in six rows was unearthed at the depth of 75 cm from surface level. Below the structure three large sized rings placed one over the other (probably soakage jars) were found. Inscribed potsherds bearing Tamil Brahmi letters assignable, to 300 BCE to 200 CE were also found. Charcoal samples were collected which were assigned to 785 BCE, by the Tata Institute of Fundamental Research, Mumbai.
___________________________________
யாழறிவன்... Yalarivan Jacksan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக