திங்கள், 1 டிசம்பர், 2014

கொள்ளிடம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் எங்கு தோண்டினாலும் முதுமக்கள் தாழி கிடைக்கிறது.

கொள்ளிடம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் எங்கு தோண்டினாலும் முதுமக்கள் தாழி கிடைக்கிறது.

கொள்ளிடம் அருகே கிராமத்தில் கொள்ளிடம் அருகே கிராமத்தில் தோண்ட தோண்ட முதுமக்கள் தாழி தொல்பொருள் ஆய்வு நடத்த கோரிக்கை
கருத்துகளை தெரிவிக்க

நாகை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த மேலப்பாளையத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (60). விவசாய கூலித் தொழிலாளி. கான்கிரீட் வீடு கட்ட  2 அடி ஆழத்தில் அஸ்திவாரம் தோண்டிய போது, பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட முதுமக்கள் தாழி தென்பட்டது. அதில் சிறு, சிறு மக்கிய எலும்புத் துண்டுகள், உடைந்த மண் விளக்கு, கலயம் ஆகியவை இருந்தன.

மேலப்பாளையம் கிராமத்தில் எங்கு தோண்டினாலும் முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருகின்றன. இதுவரை 5 அடி உயரத்தில் 25 தாழிகள் கிடைத்துள்ளன. வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் போதெல்லாம், தாழிகள் கிடைக்கின்றன. தாழிக்களில் 150 கிலோ வரை நெல், தவிடு போன்ற தானியங்களை கொட்டி பாதுகாக்க முடிகிறது. ‘மேலப்பாளையம் வரலாற்று சிறப்பு மிக்க கிராமம். இங்கு தொல்பொருள் துறையினர் ஆராய்ச்சி நடத்தினால் பல்வேறு தகவல்கள் கிடைக்கும்‘ என்கின்றனர் பொதுமக்கள்.
___________________________________

யாழறிவன்... Yalarivan Jacksan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக