கிறிஸ்மஸ் தாத்தா
கிறிஸ்மஸ் என்றாலே முதலில் கண்ணுக்கு தெரிவது கிறிஸ்மஸ் தாத்தாதான்.யார் இந்த கிறிஸ்மஸ் தாத்தா குழந்தைகளக்கு பிரியமான இவரை சற்று ஆராய்வோம்.
துருக்கி நாட்டில் மிரா நகரில் 04ம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர் புனித நிக்லஸ்இவர் கிறிஸ்தவ ஆயராவார்.மனித நேயத்தின் சின்னமாக விளங்கிய இவர் ஏழை எளியவர்க்கு உதவுவதையே தன் குறிக்கோளாக கொண்டிருந்தார்.இவர் சிறு வயது முதலே தபத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார்.புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் மாத்திரம் உணவு உண்டார்.வறுமையின் வீரியத்தையும் மக்கள் படும் துன்பத்தையும் நேரில் கண்ட அனுபவமே இவரை மனித நேயவாதியாக மாற்றியது.
ஏன் நான் இவரைப்பற்றி கூறவேண்டும் என நீங்கள் யோசிக்கலாம்.வேறொன்றும் இல்லை இவர்தான் நம் கிறிஸ்மஸ் தாத்தா..அவர் பகிரங்கமற்ற முறையில் ஏழைகளுக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.யேசு பிறப்பின் போது மூன்று மேதைகளின் பரிசுப்பொதிகளே இவரின் இந்த தாத்தா வேடத்திற்க காரணமாக அமைந்தது.ஏழைகளின் விட்டில் அவாகளுக்கே தெரியாமல் பரிசுகளை எறிந்து விட்டு வந்து விடுவார்.அழுகையுடன் தம் இரவை கழிக்கும் அந்த ஏழைகள் குதுாகல பகரலை சந்திக்க செய்த அந்த மனித நேயத்தின் தொடர்ச்சிதான் இன்று கிறிஸ்மஸ் தாத்தாவாக வளர்ந்து நிற்கிறது.
ஆசிய ஜரோப்பிய மற்றும் மேக்கத்தேய நாடுகளில் கிறிஸ்மஸ் தாத்தா
புனித நிக்லஸ் பற்றிய செய்திகள் சுபார் 16ம் நுாற்றாண்டில்தான் ரஸ்யா நாட்டில் நுழைந்தது. அவரை மக்கள் உதவியாள் என்றே அன்புடன் அழைத்தனர்.1087இல் நிக்லஸின் நினைவுச்சின்னங்கள் எல்லாம் அகற்றப்பட்டன.அவை இத்தாலியில் உள்ள பேரி நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.இது ஜரோப்பாவில் புனித நிக்லஸ் பற்றிய செய்திகள் பரவ காரணமாயிற்று.
டிசம்பர் 06ம் திகதிதான் புனித நிக்லஸ் தினமாக கத்தோலிக்கர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இன்றும் இவர் விழா பரிசு வழங்கும் விழாவாகதான் கொண்டாடப்பட்டு வருகிறது.ஸிண்டர் கிளாஸ் எனும் டச் வார்த்தையின் அமெரிக்க வடிவமே இந்த சாந்தா கிளாஸ் என்பதாகும்.
வருடந்தோறும் நினைவுகளின் இடுக்கைகளின் இருந்த இவ்விழா வியாபார வட்டாரத்துக்குள் வந்த பின்னரே கிறிஸ்மஸ் தாத்தா பிரபலமடைந்தார்.எது என்னவோ புனித நிக்லஸ் தொடக்கிய இந்த சேவை முறை இன்றும் அழியாது பேணப்பட்டு வருகின்றமை பேற்றுதற்குரிய விடயமே.
___________________________________
யாழறிவன்... Yalarivan Jacksan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக