புதன், 29 அக்டோபர், 2014

உலகம் ஆண்ட தமிழன்

லெமூரியா

உலகிலுள்ள பெருங்கடல்களில் ஒன்றான அட்லாண்டிக்கின் ஜிப்ரால்டருக்கு மேற்கே ஒரு பெருந்தீவு அல்லது  கண்டம் இருந்ததாக  தன்னுடைய  முன்னோர்கள்  குறிப்பிட்டிருந்ததை தத்துவஞானி பிளாட்டோ (கி.மு.427 & 347) காலக்கட்டத்தில் அறிவித்தார்.

அது அறிஞர் பலரின் சிந்தனைக்கு உள்ளாகி, அத்தீவு மெய்யாகவே இருந்ததா? அல்லது, கற்பனையா? என்ற வினாக்களை எழுப்பிப் பல நூல்கள் தோன்றக் காரணமாயிற்று. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா (தென்துருவக் கண்டம்) முதலியன அடங்கிய மிகப்பெரிய கண்டம் ஒன்று 3000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் தென்பகுதியில் இருந்தது . அதனை “கோண்ட்வானா’ என்று அறிஞர்கள் குறித்துள்ளனர்.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உடைந்த கோண்ட்வானா, சிதறுண்ட பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர்கூட இந்து மாக்கடலின் வடமேற்கில் லெமூரியா என்ற பெரிய கண்டம் தொடர்ந்து இருந்து வந்தது.

ஹோமோ சேப்பியன் எனும் மனிதன் தற்போது கடலில் மூழ்கிக் கிடக்கும் லெமூரியாவிலிருந்து தோன்றினான் என்றார் ஹக்ஸ்லி. அவரது கொள்கையை ஹெகல் விரிவுபடுத்தினார். இவர்கள் இருவரின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே ஃபிரடரிக் எங்கல்ஸ் (1820 & 1895), “”பரிணாம வளர்ச்சி பெற்ற ஆந்திரபாய்ட் என்ற மனிதக் குரங்குகள் இன்னும் இந்து மாக்கடலுள் மூழ்கியுள்ள பெரிய கண்டத்தில் வாழ்ந்திருக்கலாம்'’ என்று “மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய கட்டத்தில் உழைப்பு ஆற்றிய பங்கு’ என்ற நூலில் கூறுகிறார். லெமூரியாவானது குமரிக்கண்டம், குமரிநாடு, நாவலந்தீவு என்பனவாகத் தமிழ் இலக்கியங்களில் இயம்பப் படுகிறது. இளம்பூரணர் போன்ற ஆசிரியர்களின் உரைகளாலும், இறையனார் களவியல் உரை, அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரை போன்ற உரைகளாலும் குமரிக் கண்டம் விளக்கம் பெறுகிறது.

”நெடியோன் குன்றமுந்த தொடியோள் பெüமும்
தமிழ்வரம் பறுத்த தண்டி னன்னாட்டு'’ (சில 8:12)
“”வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள'’ (சில 11:1:20)

இன்றுள்ள குமரிமுனைக்கு 200 கல் தொலைவில் தெற்கில் குமரிமலையில் தோன்றி கிழக்கு நோக்கிப் பாய்ந்தது குமரியாறு. குமரியாற்றுக்கு சுமார் 700 கல் தெற்கில் பன்மலைத் தொடரில் தோன்றி பஃறுளியாறு (பல்+துளி= பஃறுளி; துளி=சிற்றாறு) என்னும் பேராறு பாய்ந்தது.

அப்பெரு வளநாடு நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் உடையதாக மக்களின் நல்வாழ்வுக்கு ஏற்ற நன்னாடாக விளங்கியது. பலமுறை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அவை யாவும் கடலுள் மூழ்கிவிட்டன..குமரி கடலின் அடியில் உள்ள லெமூரியா கண்டம் என்ற குமரிக் கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான்.

குமரிக்கண்டம் –எல்லைகள்

லெமூர் என்றால் பரிணாம வளர்ச்சியில் குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்டவன் என்று பொருள். ஆக உலகின் முதல் பரிணாம வளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது. பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம்.

குமரிக்கண்டம் –எல்லைகள்
1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும். இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அதாவது

ஏழு தெங்கநாடு - தென்னை மரம் சார்ந்த இடம்
ஏழு மதுரைநாடு - மதுரையும் மதுரையை சுற்றி இருந்த இடம்
ஏழு முன்பாலைநாடு - பாலை நிலம் சார்ந்த நாடுகள்
ஏழு பின்பாலைநாடு - பாலை நிலமே (ஏன் இந்த இரண்டு பிரிவு என்று தெரியவில்லை)
ஏழு குன்றநாடு - மலை சார்ந்த இடம்
ஏழு குணகரைநாடு - கடற்கரை சார்ந்த நிலம்
ஏழு குறும்பனைநாடு - பனைமரம் சார்ந்த நிலம்

அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பினர்.
19-ம் நூற்றாண்டில் சேலஞ்சர் என்ற கப்பல் கடலாய்வு செய்தது. 1889-ம் ஆண்டு ஜெர்மனின் பேஷல் என்ற கப்பலும்இ ரஷ்யாவின் வித்யசு என்ற கப்பலும் கூட கடலாய்வு செய்தது.
இறுதியாக 1960-ம் ஆண்டு அமெரிக்கா பிரான்ஸ் ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக குமரிக் கண்டத்தை ஆராய்ந்தது. அப்போது தான் கடலுக்குள் மலைகள்  இருப்பது தெரிய வந்தது. அமெரிக்க தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குமரிகண்டத்திற்கு வரைபடம் வெளியிட்டுள்ளனர்.

லெமூரியா மக்கள் ஏழு அடிவரை உயரமாக இருந்திருக்கிறார்கள். உடலின் எடை மிகமிக அதிகம். கைகள் நீளமாக, பெரியதாக, சதைப்பற்று மிக்கதாக இருந்திருக்கிறது. கால்கள் இதற்கேற்றார் போல நீளமாக இல்லை. ஆனால் வலுவாக திரண்டு இருந்திருக்கிறது. தலை முடியை பின்னியிருந்தனர். இக்கால மனிதனைவிட அவர்கள் விரல்கள் நுண்ணிய வேலைகள் செய்யக் கூடிய அளவுக்கு இருந்தன. அவர்கள் உடலில் அதிசயமான விஷயம் நெற்றி. அது அகன்று உயர்ந்திருந்தது. மூக்குக்கு மேல் பாதாம்பருப்பு போல - நெற்றி நடுவில் ஒரு புடைப்பு இருந்தது. மூன்றாவது கண் எனப்படுகிறது. இது முக்காலங்களை, பிறர் எண்ணங்களை, தொலை நிகழ்ச்சிகளை அறியும் அறிவுக்கண் என்கிறார் அறிஞர் கார்லே."...

உலகம் ஆண்ட லெமூரியன்

லெமூரியர்களுக்கு பல அரிய பொருள்கள் தெரிந்திருந்தன. தண்ணீரை எதிர்ப்பக்கம் தள்ளும் ஆற்றல் மிக்க 'கல்' அவர்களுக்கு தெரிந்திருந்தது. படகைத்தள்ள அந்த கல்லை பயன்படுத்தி இருக்கிறார்கள். நீராவிக் கருவி, வான ஊர்தியும் தெரிந்திருந்ததாகவே கருதப்படுகிறது.'ஒளி' பற்றி அதிசயம் ஒன்று உண்டு! மின்சாதனத்தைவிட ஏதோ ஒரு வகையில், இரவை பகலாக்கும் அளவுக்கு ஒளிரச் செய்திருக்கிறார்கள். கலிபோர்னியா காட்டில் இன்றும் நெடுந்தூரம் வரை வீசும் ஒளி தெரிகிறது. அங்கே பழங்குடி மக்கள் பதுங்கி வாழ்கிறார்கள்.

அடுப்பில் சமைத்தவர்கள், நெருப்பு, அல்லது வெய்யிலை பயன்படுத்தி சமைத்திருக்கலாம். வீடுகள் காற்றோட்டமாக அமைக்கப்பட்டது. தெருக்கள் சிமெண்டைப் போல பொருளால் அமைக்கப்பட்டது. ஒட்டகம் போல ஒருவகை விலங்கின் மீது அமர்ந்து பயணம் செய்தார்கள். இதெல்லாம் அவர்கள் வரைந்த ஓவியங்கள் மூலம் அறியப்படுகிறது. பொன்னும் வெள்ளியும் அன்று இருந்தன. அணிகலன்களுக்கு பயன் படுத்தப்பட்டிருக்கிறது. சொல்லப் போனால், பொன்னைவிட விலை உயர்ந்த பிளாட்டினம் போன்ற ஒன்றையும் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்! "லெமூரியா பற்றி இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. லெமூரியாவில் மிச்சம் இருந்தவர்களே 'சித்தர்கள்' என்று பன்மொழிப்புலவர் அப்பாதுரை கூறுவார் பழந்தமிழ் மக்கள் லெமூரியர்களையும், எகிப்தியர், அமெரிக்க மாயா நகர மக்களையும் ஒத்திருந்தனர்.

ஆஸ்திரேலியா நாட்டின் பழங்குடியினர் இன்னும் 'சிவா நடனம்' என்ற பழம்பெரும் தமிழர் நடனத்தை ஆடுகிறார்கள். நெற்றியில் கண் வைத்துக் கொண்டு முக்கண்ணுடன் ஆடுகிறார்கள். வன உயிர்களை வேட்டையாட அவர்களை 'பூமராங்' என்ற ஆயூதத்தை பயன்படுத்துகிறார்கள். இது எதிரியை தாக்கி விட்டு திருப்பி வந்து விடும். இந்த பூமராங்கை இன்னும் ஊட்டி கொடைக்கானல் பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்.

எனவே ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா பழங்குடியினர் கலாச்சார ரீதியாக நம்முடன் ஒத்திருக்கிறார்கள். மெக்சிகோ நகரில் சிவப்பு இந்தியர்கள் (மாயன்) சிறுபயற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். நாம் அனைத்து விழாக்களிலும் தாய் மாமனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் அவர்களும் கொடுக்கிறார்கள். தமிழன் பயன்படுத்தும் அம்மியும்இ உரல்களும் அங்கு சகஜம். இவையெல்லாம் ஒரு காலத்தில் அனைத்து பகுதிகளும் ஒன்றாக இருந்திருக்கிறது என்ற வாதத்திற்கு வலுவூட்டுவதாய் அமைந்திருக்கிறது.

குமரிக் கண்டத்தில் குமரிகோடு என்ற இடம் இருந்ததாக வரலாறு. இதையொட்டிதான் தற்போதைய குமரி மாவட்டத்தில் விளவன் கோடு அதன்கோடு ஆண்டுகோடு இடைகோடு மெக்கோடு நெட்டன்கோடு திருவிதாங்கோடு பரகோடு வெள்ளைக்கோடு கட்டிமன்கோடு என்று ஊர்களுக்கு பெயரிடப்பட்டது. சங்கம் வளர்த்த தமிழ் குமரிக் கண்டம் தான் உலகில் முதன் முதலில் தோன்றியது என்பதற்கு இன்னொரு அடையாளம் குமரி என்ற பெயர் பல கண்டங்களில் இருப்பது. குறிப்பாக ஆப்பிரிக்கா அருகே மடகாஸ்கர் தீவிற்கு குமர் என்று பெயர். இங்கு வாழும் மக்கள் கொம்ரி என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஆப்பிரிக்கா மடகாஸ்கர் மொசாம்பி ஆகிய இடங்களுக்கு இடையேயுள்ள தீவை கோமர் அல்லது கோம்ரான் என்று அழைக்கிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி கோம்ரூல் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. எனவே இவற்றிற்கெல்லாம் தோற்றுவாய் குமரிதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தென்அமெரிக்கா மேல்கரை, பஜகாலிபோர்னியா, நெவதா முதலிய இடங்களில் ஒருவகை கல் அமைந்த வேலைப்பாடுகள் காணப்படுகிறது. இவை கருங்கல்லைவிட உறுதியானவை. இவற்றை சிமெண்டை விட உறுதியான குழம்பு கொண்டு, சேர்த்து கட்டம் கட்டி இருக்கிறார்கள். அந்த கல் எங்கும் இன்று இல்லை.

திரிகோணப் பாறை எனப்படும் விவேகானந்தர் பாறையிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் 36 மீ ஆழத்தில் 15000 சதுர அடியில் பழைய கால இடிபாடுடன் கூடிய கோயில் உள்ளது.  இதனை டாலமியும் சொல்லியுள்ளார்.  பின்பு, இந்தியப் பெருங்கடல் முழுவதும் ஆய்வு செய்தபோது இது வரை நான்கு இட்பாடுகள் உள்ள இடங்களும் மற்றும் ஒரு தீவு மூழ்கி உள்ளதும் தெரியவந்தது. இப்படி உலகில் முதல் மனிதன் தோன்றிய லெமூரியாவை குறித்து இன்னும் பல  ஆராய்ச்சி செய்ய வேண்டும். லெமூரியா கல் வெட்டுகளையும், சிந்துநதி பக்கமுள்ள கல் வெட்டுகளையும் புரிந்து முயலும்போது  இன்னும்  பல புதிர்கள் அவிழும். தமிழ் இனம் பற்றி பல புதுமைகள் அறிய முடியும்."..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக