வெள்ளி, 31 அக்டோபர், 2014

அழிந்து போன உயிரினம் லெமூரியாவில் வாழ்ந்ததா?

அழிந்து போன உயிரினம் லெமூரியாவில் வாழ்ந்ததா?

நியான்டர்தார்ஸ் வாழ்ந்த காலப்பகுதி லெமூரியாவிற்கு முன்னரானது என கருத்து நிலவி வருகிறதே… அது பற்றி இன்று பார்ப்போம்...

சமீபத்தில் சீன ஆராச்சியாள‌ர்களால் இந்தோனேசிய பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நியான்டர்தார்ஸினுடையதாக இருக்கலாம் என கருதப்பட்டது. நியான்டர்தார்ஸ் என்றழைக்கப்படும் உயிரினம் சுமார் 40 லட்சம் ( நான் குறிப்பிட்ட காலம் பிழையாக இருக்கலாம், சரியானது தெரிந்தவர்கள் பின் குறிப்பிடவும்.) ஆண்டுகளுக்கு முன் வரை மனிதனுடன் வாழ்ந்த உயிரினம். மனிதன் பரிமாண வளர்ச்சி பெற்ற அதே மூதாதையரிடமிருந்தே அவ் உயிரினமும் தோன்றியிருந்தது... உருவ அமைப்பிலும் மனிதனை ஒத்திருந்தாளும்; சில முக்கிய வேறுபாடுகள் காணப்பட்டன. அதாவது, தலை சாதாரன மனித தலையை விட சற்று பெரிதாகவும், நெஞ்சுப்பகுதி சற்று முன்னோக்கி நீண்டதாகவும், முக்கியமாக மனிதனை விட உடல் வலு மிக்கவைகளாக‌ காணப்பட்டாலும் மூளைவளர்ச்சி ஒப்பீட்டு ரீதியில் மிக குறந்ததாக இருந்துள்ளது. வழமை போலவே இவ் உயிரினமும் ஆதி மனிதனின் வேட்டையில் முற்றாக ஒழிக்கப்பட்டது.... ( நியான்டர்தார்ஸ்ஸின் உடலில் 13 சோடி விலா எலும்புகள் காணப்பட்டுள்ளன. இன்றும் மனிதரில் 5% ஆனோருக்கு 13 சோடி விலா எலும்புகள் உள்ளனவாம். அப்படியானால்… இனக்கலப்பு நடந்திருக்கலாம்… (சாதாரண மனிதரில் 12 சோடி விலா எலும்புகளே இருக்கும்.))...ஏன் நியான்டர்தார்ஸ் பற்றி சொல்ல வந்தேன் என்றால்… நமது புராணங்களில் (இராமாயணம்) ஹனுமார் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை அவர்கள் மனிதர்களுடன் (ராமர் முதலானோர்) இருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது....

அதற்காக ஹனுமார் நியான்டர்தார்ஸ் இனத்தை சேர்ந்தவர் என சொல்ல வரவில்லை, மனிதன் பூரண பரிமாண வழர்ச்சியை எட்டமுன் நியான்டர்தார்ஸ்+ஆதி மனிதன் இக்கு இடைப்பட்ட ஒரு உயிரினம் இருந்துள்ளது. ( டாவினின் பரிமாண படியில் காணாமல் போனது இதுவாக இருக்கலாம்.) அந்த இனத்தின் மிஞ்சிய குழுவே வாலி,சுக்ரீவனுடைவது. புராணங்களில் கூட மனிதனுடையதும் குரங்கினதும் உடலமைப்பை இணைத்தது போன்றே இவர்களது உடல்வாகு சித்தரிக்கப்பட்டுள்ளது....

ஆகவே, இராமாயணம், மகாபாரதம் என்பவை வெறும் இலக்கியமோ புராணமோஇல்லை. அவை உண்மையில் நடந்த வரலாறு.(பிற்காலங்களில் இட்டுக்கட்டப்பட்டு புராணமாக்கப்பட்டு விட்டது. ஏன்…??? அது பிறகு…) முக்கியமாக அது லெமூரியாக்கண்டத்தில் வாழ்ந்த அறிவுமிக்க, உயர்ந்த நாகரீகம்மிக்க மனிதர்களுக்கிடையே நடந்த வரலாற்று சம்பவங்கள்....

மேருமலை போன்றவை வெறும் கற்பனையல்ல. அவை அனைத்தும் லெமூரியாக்கண்டத்தின் மத்தியில் பெரும் சுவர் போன்று அமைந்திருந்த மலைகள். ( இன்றைய கிறீன் விச்சுக்கும் அதற்கும் தொடர்புண்டு; அதை பின்னர் பார்க்கலாம்…) லெமூரியா கண்டத்தின் மத்தியில் தொடர்ச்சியான நீண்டமலைத்தொடர் காணப்பட்டுள்ளது. ( இந்து சமுத்திரத்தின் ஆழங்களை ஆராயும் போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட ஒரு நீண்ட தூரத்துக்கு கடலின் ஆழம் குறைவாகவுள்ளது.)...

யாழறிவன்... Yalarivan Jackson

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக