வெள்ளி, 24 அக்டோபர், 2014

தை பிங்க் யூலன்" இல் இருந்து ஆதாரங்கள்!!

தை பிங்க் யூலன்" இல் இருந்து ஆதாரங்கள்!!

இலங்கைத் தமிழனின் தொன்மை வரலாற்றுக்கு சீனாவின் அதிகார பூர்வ வரலாற்று ஏடான "தை பிங்க் யூலன்" இல் இருந்து ஆதாரங்கள்.

இலங்கையில் தமிழரின் வரலாறு மறைக்கப்பட்டதற்கு பிரதான காரணம் இலங்கையின் சுகந்திரத்திற்குப் பின்னர் வரலாற்று ஆய்வாளர்களாக இனத்துவேசம் மிக்க சிங்களவர்கள் அப்பணியில் இருந்ததுதான்.அவர்கள் தான்தோன்றித் தனமாக வரலாற்றை மாற்ற முனைந்தார்கள் அதற்கு எதிராக இருந்த ஆதாரங்களை சிதைத்தார்கள்.

எது எப்படி ருப்பினும் வரலாறு மறைக்கப்பட முடியாதது."மாபிள்ளையின் சீப்பை எடுத்து ஒளித்து வைத்தற்கு விட்டால் திருமணம் நின்றுவிடும்" என்ற முட்டாள்தனமான கருத்துப்போல; இலங்கையில் தமிழரின் தொன்மைக்கான சான்றுகளை அழித்துவிட்டிருக்கின்றனர். முன்னைய ஆட்சியில் இருந்தவர்கள்.

அது அவ்வாறு இருக்க வெளிநாட்டு வரலாற்று ஏடுகளில் இலங்கைபற்றிக் கூறப்பட்டுள்ளவை பெருமளவில் இன்று வரை ஆராயப்படவில்லை. இது என்?
ஆனாலும் இலங்கையின் வரலாற்றப் பொறுத்தமட்டில் எந்தத் திறமையான ஆய்வாளர்களாலும் நிராகரிக்க முடியாத பல ஆதாரங்களை சீனாவின் அதிகாரம்மிக்க வரலாற்று ஏடான "தை பிங்க் யூலன்" கொண்டிருக்கிறது.இவ் ஆதாரங்கள் சீனாவில் இருந்து புராதன இலங்கைக்கு அவ்வப்போது வந்த சீனக் கடலோடிகளால் பதிவு செய்யப்பட்டவையாகும்.

(1 ). பூனான் ருசு
சீனத்து வரலாற்று ஏடுகளில் இலங்கைக்கு "சூற்றில் ஆஓ" எனக் குறிக்கப்படுகிறது. 12 ஆம் நூற்றாண்டின் பின்னரே இலங்கைக்கு சிலோன் எனப் பெயரிட்டு அவ் நூலில் இருக்கிறது. இலனைக்கு கி.பி 3 ஆம் நூற்றாண்டில் வந்த சீனத்துக் கடலோடி "பூனான் ருசு" என்பவரின் வரலாற்றுக் குறிப்பினை சீனத்து வரலாற்று ஏடான "தை பிங்க் யூலான்" அதிகாரம் 787 இல் பின்வருமாறு பதிவு செய்கிறது. "இலங்கையின் குடாக்களில் உப்பு விளைகிறது. இங்கு விளயுயும் உப்புக்களில் தேவையான பகுதிகளை மக்கள் எடுத்துக் கொண்டு;மிகுதியை அரசனுக்கு அளித்துவிடுவர்" என்பதாகும்.

இலங்கையின் வடபகுதியில் 13 ஆம் நூற்றாண்டின் பின்னரே குடியேற்றங்கள் ஆரம்பமானதாக; முன்னாள் தொல்லியல் ஆணையாளரான திரு. பரண விதான கூற; அதற்கு ஆமாம் சாமி போட்டுள்ளார் யாழ் பல்கலைக் கழகத்தின் முன்னாள் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா அவர்கள். மேலும் பரண விதான இலங்கையின் வட பகுதியில் கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் குடியேற்றங்கள் அவை பெய்களுடையதும் பிசாசுகளுடையதும் எனக் கூறுவது நகைப்புக்கிடமானது.

ஆனால் இலங்கையிலுள்ள குடாக்களில் விளையும் உப்புக்களில் தமக்குப் போதுமானதை மக்கள் எடுத்துக் கொண்டு மிகுதியை அரசனுக்குக் கொடுத்தார்கள் என்பதே சீனத்து வரலாற்று ஏடான தை பிங்க் யூலான் சொல்லும் செய்தியாகும்.கி.பி 3 ஆம் நூற்றாண்டின் பின்னர் இலங்கையில் உப்பு விளையும் பிரதான குடாக்கள் எவையும் நிலத்தில் மறைந்த்தாகவோ அல்லது நீரில் அள்ளுண்டதாகவோ வரலாறுகள் இல்லை.

மக்கள் உப்பை அள்ளினார்கள் என்று சொல்லும் அளவுக்கு உப்பு விளையும் குடாக்கள் வடக்கிலும் கிழக்கிலுமே உள்ளன.குறிப்பாக வறண்ட குடாவான மன்னார்க் குடாவைக் குறிக்கும் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாகும்.எனவே இலங்கையின் வடக்கில் 13 ஆம் நூற்றாண்டளவில் தான் குடியேற்றங்கள் ஆரம்பமாகின என்றால் அங்கு உப்பை அள்ளியவர்கள் யார்?

(2 ).வூசி -வாய்கு -சூ -ஆன்
சீனத்து ஆரம்பக் கடலோடிகளில் ஒருவரான இவரின் குறிப்பு ஒன்றை சீனத்து வரலாற்று ஏடான தை பிங்க் யூலான் அதிகாரம் 699 இல் பின்வருமாறு பதிவு செய்கிறது. "இலங்கையில் இருந்து குளிக்கப்பட்ட முத்துக்கள் இந்தியாவின் மன்னர்களுக்கும் கோவில்களுக்கும் அனுப்பப்பட்டன" என்பதாகும்.

இலங்கையில் முத்துக் குளிக்கும் இடங்கள் வடக்குக் கிழக்கிலேயே அமைந்துள்ளன. எனவே பரண விதன கூறுவது பொய் என்பது தெளிவாகிறது.

(3 ).இலங்கைக்கு கி.பி 3 ஆம் நூற்றாண்டில் வந்த இவரது குறிப்பு ஒன்றை சீனத்து வரலாற்று ஏடான தை பிங்க் யூலான் அதிகாரம் 787 இல் பின்வருமாறு பதிவு செய்கிறது. "இலங்கையின் கடல்ந நடுவே ஒரு நெருப்புத் தீவு உள்ளது. கோடைகாலத்தில் இங்கு தீயேற்றி வைக்கப்படுகிறது. தீ எற்றுவதற்றக்கா எண்ணையும் சேலையும் பயன்படுத்தப் படுகிறது" என்பதாகும்.

இந்தத் தீ வைப்பு விஷயம் ஒரு புறம் இருக்கட்டும்.இலங்கைக்கு சொந்தமான தீவுகள் அனலைதீவு,நெடுந்தீவு, காரைதீவு, காக்கைதீவு, எழுவைதீவு, புங்குடுதீவு நயினாதீவு, கச்சைதீவு என்பவையாகும்.இவை அனைத்துமே இலங்கையின் வடக்கு பக்கத்தில் அமைந்திருக்கின்றன. எனவே மூட்டப்பட்ட தீயானது இத் தீவுகளில் ஒன்றிலிருந்தே மூடப் பட்டிருக்கும் என்பதை நிராகரிப்பது எவருக்கும் கடினமான ஒன்றாகும்.இங்கு மூட்டப்பட்ட தீயானது கடலில் பயணம் செய்யும் மரக்கலங்களுக்கு வழி காட்டுவதற்க்காக மூட்டப்பட்டிருக்கலாம்.

அந்தக் கடலோடி கூறுவது போல் கி.பி 3 ஆம் நூற்றாண்டிலேயே தீ மூட்டுவதட்க்காய் எண்ணெயையும் சேலையையும் எம் முன் ஜாதி பயன்படுத்தியுள்ளது என்றால்;தமிழன் கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரேயே நாகரிகமான உடைகளை அணிந்துள்ளான் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

(4 )நான் சௌ கி.பி 4 ஆம் நூற்றாண்டில் வியஜம் செய்த இவரது குறிப்பினை சீனத்து வரலாற்று ஏடான தை பிங்க் யூலான் அதிகாரம் 789 இல் பின்வருமாறு பதிவு செய்கிறது."இலங்கைத் தீவில் மூன்று இராச்சியங்கள் உள்ளன,அங்கு வீதிகளும் பாதைகளும் நிறைந்துள்ளன"என்பதாகும்.
இலங்கைத் தமிழர் வரலாற்றை 13 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கும் ஆய்வாளர்கள் இந்த சீனத்து வரலாற்று நூலிலுள்ள ஆதாரங்களுக்கு என்ன பதில் கூறுவார்கள்?

(5 ).ஐவன் பிச்சு
இலங்கை வரலாறு பற்றிப் பல தகவல்களைத்க் குறிப்பிட்டுள்ள அயான் பிச்சு பின்வருமாறு குறிப்பிடுகிறார். "இட் தீவு பெரும் மலைத் தொடர்களைக் கொண்டது.ஏறத்தாள 20000 அடி கொண்ட மலைத் தொடரில் 8 பாதச்சுவடுகள் காணப்படுகின்றன. இவற்றுக்குப் போதிசத்துவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை விழா எடுப்பார்கள்".என்பதாகும்.
இருப்பினும் 8 பாதச்சுவடுகள் காணப்பட்ட மலையில் தற்போது ஒரேஒரு பாதச்சுவடு மாத்திரமே காணப்படுகிறது.மிகுதி 7 ம் எங்கே மாயமாகின என்பது பெரும் புதிராகும்.

(6 ). வை குவா சீ
இலங்கைக்கு 3 ஆ நூற்றாண்டின் இறுதியிலும் 4 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் விஜயம் செய்தவரான இவரது குறிப்புக்களை சீனத்து வரலாற்று நூலான தை பிங்க் யூலான் அதிகாரம் 132 இல் பின்வருமாறு பதிவு செய்துள்ளது. "இலங்கையிலிருந்த பணக்காரக் கிழவர்கள் தேவ சமாதிகள் கட்டினார்கள்" என்பதாகும்.தேவ சமாதி என்பது தூய தமிழ் சொல் ஆகும்.இந்த தமிழ் சொல் அவ்வாறே சினத்து வரலாற்று நூலான தை பிங்க் யூலானில் இடம்பெற்றுள்ளது. இது தமிழனின் தொன்மையையும், இந்து சமயத்தின் சிறப்பையும் பறைசாற்றுவதாக அமைகிறது .

(7 ). செங்கோ
கி.பி 1405 ற்கும் கி.பி 1407 ற்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் இலங்கைக்கு வந்த போது அழகக்கோனார் என்னும் அரசனைத் தோற்க்கடித்தார்.இதனை நினைவு கூறும் கல்வெட்டு 1409 இல் காலியில் நிறுவப்பட்டது. இதில் சிங்கள மொழியே இல்லை. தமிழ்,பாரசீகம்,சீனம்,ஆகிய மொழிகளே இடம்பெற்றிருக்கின்றன. இதனை வரலாற்றிலிருந்து எவராலும் மறைக்க முடியாது.

எது எப்படி நடந்து இருப்பினும்;உண்மைகள் நிச்சயம் உலகிற்கு வெளிவந்தேயாகும்.இலங்கையின் வரலாறு பற்றி பிறநாட்டு நூல்களை ஆராய்து ஒப்புநோக்கப்படும் இடத்து சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாவதோடு; பல சிங்கள வரலாற்று ஆய்வாளர்களின் மொழித் திரிபுகளும், இருட்டடிபுக்களும்,மூடிமரைப்புக்களும் வெளிவந்து உண்மைகள் உதயமாகும். இதனை யார் செய்வார்கள்?...

யாழறிவன்... Yalarivan Jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக