வெள்ளி, 24 அக்டோபர், 2014

ஆண்ட இனம் மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு" !!

ஆண்ட இனம் மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு" !!

"ஒரு இனத்தை அவ்வினத்தைச் சேர்ந்தவன் தான் ஆள வேண்டும்"

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் நண்பர்களே...

"ஆண்ட இனம் மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு" நினைப்பதில் தவறில்லைத்தான். ஆனால் அதற்கு நாம் தயாராக வேண்டுமே................................................................................................
இலங்கையில் தமிழரின் உண்மை வரலாறு அதிகாரத்தில் இருந்தவர்களால் மறைக்கப்பட்டுவிட்ட காலத்தில்; தமிழர்களாகிய நாம் இந்த இலங்கைத் தீவினிலே அன்று எப்படி வாழ்ந்தோம்? எப்படி இருந்தோம்? என்ற எமது புராதன வரலாற்றைப் பற்றி அறியாமல் இருப்பது நியாயம் ஆகாது.

இதனை அறிவதற்கு ஆசைப்படும் எவரும் கட்டாயமாக வரலாற்று ஆய்வாளனாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. உண்மைகளை ஆராய்ச்சியால் மட்டுமின்றி 7 ஆம் அறிவில் போதிதர்மர் சூர்யா சொன்னது போல் முயற்சியாலும் வெளிக்கொணரலாம். அந்த உண்மைகளின் நியாயத் தன்மையினை துறைசார் வல்லுனர்கள் உறுதி செய்வார்கள்.

ஆக நாம் செய்ய வேண்டியது என்னவெனில் எம் புராதன வரலாற்றைப் பற்றி புரிந்து கொண்டோ,புரியாமலோ அறிய முற்பட வேண்டும்.அப்படி நாம் எல்லோரும் செய்தால் அது ஓர் தீர்வு காணப்பட வேண்டிய விடயமாக துறைசார் வல்லுனர்கள் கவனத்தில்க் கொள்வார்கள்.
இவ்வாறு முயற்சித்து விடைகாண விளைகையில் அதிகாரத்தில் இருந்தவர்களால் பூசி மெழுகப்பட்டு மூடி மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றின் உண்மை முடிச்சுக்கள் நிச்சயமாக எதோ ஒரு வழியில் அவிழ்ந்தே ஆக வேண்டும்.

இந்நிலையில் தமிழர்களுக்கும் ஓர் எண்ணம் பிறக்கலாம்.அது
"ஆண்ட இனம் மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன தவறு" நினைப்பதில் தவறில்லைத்தான்.இந்த எண்ணமும் வரவேற்க்கப்பட வேண்டியதுதான். ஆனால் சமகாலத்தில் இது சத்தியப் பாடற்றது. இதனைப் பெறுவதற்கு அதிக விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். ஏன்? கொடுத்தான் இருக்கிறோம்.

ஆனால் தற்சமயம் தமிழர்கள் தம் நிலையை நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும்.ஆள்வது ஒரு புறம் இருக்கட்டும்;இப்போது தமிழர்கள் முக்கியமாக இலங்கைத் தீவினில் தமது வாழ்வுரிமையைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,.
தூங்கி எழும் ஒவ்வொரு பொழுதிலும் அங்குலம் அங்குலமாக தமிழர் தாயகப் பகுதிகள் திட்டமிட்டு அபகரிப்புச் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

"கப்பலில் சென்று கடாரம் வென்ற" கதைகள் போய்இப்பொழுது அந்நிய தேசங்களுக்கு வர்த்தகத்திட்காய் அல்ல; அகதிகளாய் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் இன்று இலங்கைத் தமிழனின் நிலையிருக்கின்றது.

இதைவிடப் பாரதூரமான விடயம் என்னவென்றால்; இதுவரை இரண்டாவது பெரும்பான்மை இனமாகக் கருதப்பட்டு வந்த தமிழ் இனம் அந்த அந்தஸ்த்தை வேகமாக இழந்து வருகிறது.இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் நாம் எதுர்காலத்தில் செலுத்தவேண்டிய விலை இன்னும் அதிகமாக இருக்கலாம்.

எங்கள் தேசத்தில் உங்களுக்கு அத்தனை வசதிகளையும் அள்ளி வழங்குவோம், அவிபிருத்தி செய்கிறோம் என்ற பெயரில் சீரழிவு நோக்கங்கள், விழுமியப் பிறழ்வுகளை பரப்பி தொலை நோக்கு சிந்தனையுடன் எங்கள் இனத்தின் எதிர்காலத்தை சிதைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது புரியாமல் நாமும் எம்முடைய, எமக்கே உரித்தான காலச்சார விழுமிய வரம்புகளைச் சர்வசாதாரணமாக மீறத்தொடங்கியிருக்கின்றோம் என்பதற்கு தமிழர் பிரதேசங்களில் நடப்பதாய் தினம் தினம் வெளிவரும் செய்திகள் சான்று பகிர்கின்றன.

இந்நிலைமை தொடருமானால் ஆண்ட இனம் மீண்டும் ஒரு முறை ஆள்வது என்ற பேச்சுக்கே இடமில்லமல்ப் போய்விட வாய்ப்புண்டு. போராடும் போது வறுமையும் துன்பமும் மிகப்பெரிய எதிரிகள் ஆனால் அவற்றை சமாளித்தே ஆக வேண்டும்.இல்லையேல் சாதனைகள் சாத்தியமாகாது.
ஆடம்பரம், அவிபிருத்தி என்ற பெயரில் தமிழ் இனத்தின் வருங்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் சந்ததியை அவர்களுடைய இலட்சியப் பாதையிலிருந்து மெல்ல மெல்ல விலக வைக்கிறார்கள்.இதனை ஒவ்வொரு தமிழனும் விரைவாக உணராவிட்டால் ஆண்ட இனம் ஆண்ட இனமாகவே போய்விடும். மீண்டும் ஆள நினைப்பது வெறும் கனவாகவே இருந்திடும்...

யாழறிவன்... Yalarivan Jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக