வெள்ளி, 24 அக்டோபர், 2014

தமிழ் மொழியின் சிறப்பு...

தமிழ் மொழியின் சிறப்பு...

எந்த மொழிகளுக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு
உயிராய் மதிப்பவர்கள் தமிழர்கள். வேறு மொழிகளில் இல்லாத பெருமை தமிழுக்கு உண்டு. வேறு எந்த மொழிகளிலும் மொழியைத் தன் பெயராய் வைத்துக்கொள்வதில்லை. ஆனால் தமிழர்கள் – தமிழ்ச்செல்வன், தமிழரசி, தமிழ்ச்செல்வி, தமிழாயினி, தமிழன்பன், தமிழரசன், தமிழ், தமிழ் நிலா, தமிழச்சி…

தமிழின் நேர் வாக்கியத்தில் எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அதன் அர்த்தம் மாறாது. இது தமிழுக்கே உண்டான சிறப்பு. உதாரணம் (ராமன் ராவணனைக் கொன்றான்) இந்த வாக்கியத்தில் எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அர்த்தம் மாறுவதில்லை. RAMA KILLS RAVANA இதில் சொல்லை மாற்றினால் அர்த்தமே மாறிவிடும். இந்த சிறப்பு வேறு மொழிகளில் கிடையாது.

தமிழ் சொற்கள் அனைத்தும் தொண்டை மற்றும் நாவினால் பேசப்படுபவை. வயிற்றிலிருந்து கத்தும் சொற்கள் இல்லை – உதாரணம் : வயிற்றிலிருந்து கத்தும் ஹிந்தி எழுத்துக்கள் (ஜ், ஹா, gha, kha) போன்றவை கிடையாது. இங்குதான் மொழியின் இனிமை அடங்கி இருக்கிறது. பேசும்போதே கத்துவதெல்லாம் இல்லாமல் மென்மையாக பேசி இனித்தால்தான் அது இனிய மொழியாகும். (ஆனால் இந்த வயிற்றிலிருந்து கத்தும் எழுத்துக்கள் தமிழில் இல்லை என குறைகூறும் மூடர்களும் இங்குதான் இருக்கிறார்கள்.)

பேசுவதும், எழுதுவதும், வாக்கியங்களும், வார்த்தைகளும், சொற்களும் ஒன்றேதான். ஒவ்வொரு சொல்லாய்ச் சொன்னாலும் அர்த்தம் மாறுவதில்லை. அம்மா – ஒவ்வொரு சொல்லாய் சொல்லுங்கள் அ-ம்-மா மாற்றமில்லை. MOTHER ஒவ்வொரு சொல்லாய் சொல்லுங்கள் எம் – ஓ – டி – ஹச் – ஈ – ஆர். இப்படி பேசினால் புரியுமா?

பழங்கால மொழிகளான சீனம், எகிப்து, லத்தீன், பாலி (புத்தரின் போதனைகள் பாலியில்தான் உள்ளது), சமஸ்கிருதம் ஆகியவை இப்போது உலகில் வழக்குமுறை / பேச்சுமுறையில் இல்லை. 19-ம் நூற்றாண்டுடன் பழைய சீன மொழி அழிந்துவிட்டது. இப்போது சீனா முழுவதும் பேசப்படும் மொழியாக மாண்டரின் உள்ளது. பழங்கால மொழிகளில் இன்னும் மாறாமல் (இலக்கண இலக்கியங்களில்) அப்படியே இருக்கும் ஒரே ஒரு மொழி தமிழ் மட்டுமே.!

பிற மொழிகளைப் பழிப்பது என் வேலையல்லை – உதாரணத்திற்காக மட்டுமே கூறப்பட்டுள்ளது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.!

யாழறிவன்... Yalarivan Jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக