வெள்ளி, 24 அக்டோபர், 2014

எவனடா? சொன்னது" இலங்கை தமிழன் வந்தேறு குடி" என்று!!

எவனடா? சொன்னது" இலங்கை தமிழன் வந்தேறு குடி" என்று!!

தமிழ் மக்களின் மனங்களில் எப்போதும் ஓயாமல் ஓலித்துக் கொண்டிருக்கும் கேள்வி;இலங்கையிலே நிம்மதியான வாழ்வு எங்களுக்கு கிடைக்காதா என்பது தான். தமிழ் மக்களுக்கு தனித் தமிழ் ஈழத்தைத் தராவிடினும் நிம்மதியான வாழ்வு வாழ அவர்களுக்கு சரியான தீர்வினை வழங்குவதற்கு இன்றைய சிங்கள அரசு பின்னடித்து வரும் நிலையில்; சில சிங்களப் பேரினவாதிகள் இலங்கையின் ஆதிக் குடிகள் சிங்களவர் தான், தமிழர்கள் வந்தேறு குடிகள் அவர்கள் சிங்களவர்களாலே ஆளப்பட வேண்டும் என்று புலம்புவதனை ஏற்க்க முடியாது.

சிங்களப் பேரினவாதிகள் சொல்வது போல் தமிழர்கள் வந்தேறு குடிகள? எனப் பிற சிங்கள மக்களால் சிந்திப்பதற்குப் பிரதான காரணம் தமிழர்கள் குடித்தொகையில் குறைவாக இருப்பதேயாகும். ஆனால் வரலாறு என்பது வெறும் தலைகளை மட்டும் எண்ணிக் கணக்கிடுவதில்லையே! இன்றைய உலக வல்லரசு ஆதிக்குடிகள் வீரம் செறிந்த செவிந்தியர்கள் அவர்கள் எல்லையோரங்களுக்குத் துரத்தப்பட்டு விட்டார்கள்.கங்காரு தேசம் அவுஸ்திரேலியாவின் உண்மைச் சுதேசிகள் கருப்பர்கள் தான்,ஆனால் இன்று அவர்களுக்கு அங்கு முகவரியே இல்லை. ஏனென்றால் அவை ஆட்சியாளர்களினால் திட்டமிட்டு மறைக்கப் பட்டு விட்டன.ஆட்சியாயர்கள் தங்கள் சர்வ வல்லமை அதிகாரங்களை பிரயோகித்து தங்களையே ஆதிக் குடிகள் என்று புதுக் கதி புனையும் வழக்கத்திற்கு மேலே சொன்ன இரு நாடுகளுமே சரியான உதாரணம் ஆகும்.

அமெரிக்கனும்,ரசியனும் விண்வெளி ஏகபோகத்திற்காய் போட்டியிட்டுக் காத்திருந்த இடையிலே வில்லத்தனமாய் இந்தியாவும், சீனாவும் புகுந்து போட்டியில் பங்கெடுக்கும் இக்காலகட்டத்தில்; இலங்கைத் தமிழர் வந்தேறு குடிகளாவேன்று காரசாரமான கருத்து மோதல் நடைபெறுவது ஆச்சரியமான விடயம் தான்.
1917 இல் டாக்டர் போல் பீரிஸ் சொன்ன கருத்துக்களப் புதைகுழியில் மூடிப் புதைத்துவிட்டு ,1984 இல் யாழ்ப்பான பல்கலைக்கழக முன்னால் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா கூறிய "கி.பி 13 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் இலங்கையில் குடியேறினார்கள்" என்ற ஒரு தவறான கருத்தை சிங்களப் பேரினவாத வரலாற்று ஆய்வாளர்கள் தூக்கிப் பிடிப்பது ஏன்? அவர்கள் டாக்டர் போல் பீரிஸின்கருத்தைக் கவனத்தில் கூட எடுக்க விரும்பாதது ஏன்? ஏனென்றால் உண்மைகள் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும் என்ற மாபெரும் அச்சத்தால் தான்.
டாக்டர் போல் பீரிஸ் அப்படி என்னதான் கூறினார் என்று பார்ப்போம். சிங்களத்தின் தோற்றுவாயாகக் கருதப்படும் வியாசன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே; இலங்கையில் கருத்தில் கொள்ளத் தக்கனவும் , முழு இந்தியாவினதும் வழிபாட்டுக்கு உரியனவுமான ஐந்து சிவாலயங்கள் இருந்திருக்கின்றன.

அவை........
01 . மகாதித்தவிற்கு அண்மையிலுள்ள திருக்கேதீச்சரம்
02 .சிலாபத்தில் பிரசித்தி பெற்ற முன்னிச்சரம்
03 .மாந்ததோட்டைக்கு அருகில் தண்டேச்சரம்
04 .பெரிய கொட்டியாரக் குடாவிற்கு எதிரேயுள்ள திருக்கோணேச்சரம்
05 .காங்கேயன் துறைக்கு (காங்கேசன் துறைக்கான உண்மைப் பெயர் ) அண்மையிலுள்ள நகுலேச்சரம்
என்பவையாகும் .

(ஆதாரம்:P.E Pieris, Nagadipa and Buddhist Remains in jaffna,Jrasb xxvi, NO 70 (1917) P;17-18 )
வியஜன் இலங்கையிழ்க் கால்வைக்க முன்னரே இலங்கையில் ஐந்து சிவாலயங்களைக் கட்டித் தமிழன் வலிபட்டிருக்கும் போது; முட்க்காலத்தில் தமிழல்களே இருந்திருக்கவில்லை என்று சிங்களப் பேரினவாதிகள் சொல்வது எப்படி நியாயம் ஆகும்?...இதற்குச் சிங்களப் பேரினவாதிகள் ஆதாரமாய்க் கையிலெடுப்பது இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூல்களில் ஒன்றெனக் கருதப்படும் சிங்களவர்களால் மட்டுமே (கவனிக்க) உருவாக்கப்பட்ட தீபவம்சத்த்திழ்க் கூறப்பட்டிருப்பதைத்தான்.

தீபவம்சம் "ஆதியில் இலங்கையில் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கவல்ல பிசாசுகளும்,பேய்களும்,பூதங்களும் வாழ்ந்து வந்தன" எனப் பூச்சாண்டிக் கதை கூறுகிறது. பேய்களும் பூதங்களும் எந்த நாட்டிலும் வாழ்ந்தது என்றால்; எந்தவொரு வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவை மநிடவியலுக்குப் புறம்பான கடடுக்கதைகளாகும்.இவை தமிழரின் மூலக் குடியான திராவிடர்கள் ஆதி இலங்கையில் வாழ்ந்ததை மறைப்பதற்காகச் சொல்லப்பட்டவையாகும்.

புத்தி விருத்தியுடையப் மனிதன் என்று முதலில் அறியப்பட்ட HOMOSAPIAN என்னும் மனிதவகை எலும்புக்கூடு பலாங்கொடையில் அகழ்வாராச்சியின் போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.HOMOSAPIAN மனிதனின் காலம் இற்றைக்கு 30000 ஆண்டுகளுக்கும் 15OOO ஆண்டுகளுக்கும் இடைப்பட்டதாகும். எனவே தீபவம்சத்தில் குறிப்பிடுவது போல் பேய்களும் பிசாசுகளும் வாழ்ந்த தேசத்தில் HOMOSAPIAN மனிதனின் எலும்புக்கூடு எவ்வாறு?எங்கிருந்து வந்தது?(பேய்கள் கொன்றுதின்ற மனிதர்களாய் இருக்குமோ? ஆய்வாளர்களே)
இது இவ்வாறு இருக்க இந்தியாவும் இலங்கையும் ஒரே நிலப்பகுதியாக இருந்தமை பற்றிச் சிங்கள பேரினவாத வரலாற்று ஆய்வாளர்கள் மௌனம் சாதிப்பது என்?கடல் நீரால் இலங்கை இந்தியாவிடமிருந்து தனித்தீவான காலகட்டத்திலேயே புத்தர் பரிநிர்வாணம் அடைந்தார்.இதில் வியப்பான விடயம் என்னவென்றால் புத்தர் இடந்த தினத்திலேயே வியஜனும் அவனது 700 தோழர்களும் இலங்கை வந்து சேர்ந்ததாக மகாவம்சமும், தீபவம்சமும் குறிப்பிடுவதுதான். உண்மையில் இத் தோற்றப்பாடு என் உருவாக்கப்பட்டது? புத்தர் இறந்த தினத்தில் தான் வியஜன் என்ற கதாபாத்திரம் இலங்கையை அடைந்தது என்ற கருத்தைச் சூழ வலியுறுத்தும் நோக்கிலேயே இத் தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.

இதிலயும் பெரிய வேடிக்கையான விடயம் என்னவென்றால் கி.மு 483 இல் புத்தர் இறந்ததாக இந்திய பௌத்த வரலாறும்,கி.மு 544 இல் இறந்ததாக சிங்கள பௌத்த வரலாறும் கூறுகின்றன.எனவே இங்கு முக்கியமான ஓர் கேள்வி எழுகிறது.உண்மையில் புத்தர் எப்போது இறந்தார்? வியஜன் எப்பது இலங்கைக்கு வந்தான்? இவை இந்திய வரலாற்றுக் கணக்குப் படியா? இல்லை சிங்கள வரலாற்றுக் கணக்குப் படியா?(வரலாற்று ஆய்வாளர்கள் தான் விடையளிக்க வேண்டும் )
இவை எல்லாம் என் சொல்லப்பட்டன? விஜயன் இலங்கைக்கு வந்த பின்னர் தான் இலங்கையில் மனிதர்கள் வாழத்தொடங்கினார்கள் என்ற ஒரு பெரும் பொய்யை உண்மையாகக் காட்டுவதற்குத்தான்.ஆனால் அகழ்வாராச்சிகள் இலங்கை மண்ணின் மைந்தர்கள் தமிழரின் மூலக் குடியான திராவிடர்கள் என்று பறைசாற்றிவிட்டன!................
மாந்தையில் அகழ்வாராச்சியில் அமெரிக்காவின் பென்சில்வேனியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோன் காஸ்வெல் பெருங்கற்காலக் கலாச்சாரப் படைக்குக் கீழே இடைக்கற்காலப் பண்பாட்டுக்குரிய குவாஸ் கல்லாயுதங்கள் எடுத்துக் காண்பிக்கப் பட்டது. இப் பண்பாட்டின் உருவாக்க காலம் கி. மு 28000 ஆண்டுகள் எனக் கணக்கிடப் பட்டுள்ளது.
தென் இந்தியாவில் நிலவிய திராவிடரின் பண்பாடான குருணிக்கட் பண்பாடும், பெரும் கற்காலப் பண்பாடும் சம காலத்தில் இலங்கையிலும் நிலவியிருப்பதற்கு ஆதாரமாக 1969 ,1984 ,1990 காலப்பகுதியில் அனுராதபுரம்,1970 இல் கந்தரோடை, பொம்பரிப்பு, 1980 இல் மாந்தை ,மற்றும் பலாங்கொடை, மாங்குளம் ,திஸ்ஸமஹாராம போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சி முடிவுகளை முன்வைக்கலாம்.

இவ்வாறு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திராவிடப் பழங்குடியினரின் வழித்தோன்றல்களே இயக்கரும், நாகர்களும் ஆவார்கள்.நாகர்கள் திராவிடர்கள் தமிழர்கள் என்ற காரணத்தினாலேயே அவர்கள் இலங்கையின் ஆதி வரலாற்றுக்கு உரித்துடையவர்கள் என்று காண்பிக்கும் முகமாகவே மகாவம்சமும், தீபவம்சமும் அவர்களை மானிடரல்லாத பிரவிகலாகச் சித்தரிக்கின்றன.

இவை இவாறு இருக்க மிகப்பெரிய நகைச்சுவையான விடயம் என்னவென்றால் சிங்களப் பேரினவாதியும், வரலாற்று ஆய்வாளருமான முன்னால் தொல்லியல் ஆணையாளரான செனரத் பரண விதான கூறுவதுதான். அது "நாகர்கள் மானிடர்கள் அல்ல என்றும்;ஆவார்கள் மனிதத் தலையும் பாம்பின் உடலையும் கொண்டிருந்தார்கள் அல்லது பாம்பின் தலையையும் மனித உடலையும் கொண்டிருந்தார்கள்" என்கிறார்.இதற்கு அவர் வட இந்திய இதிகாசங்களை ஆதாரமாக எடுத்துக் கொள்ள்கிறார்.இது ஏற்கப்பட முடியாதது...

திருகோணமலையிலுள்ள கோணேசரம் பாடல் பெற்ற தலமாகும்.கி. பி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தர் அதன் மீது பதிகம் பாடியிருப்பது யாவரும் அறிந்ததே! ஆனால் இலங்கைக் கல்வித் திணைக்களத்தால் விளியிடப்படும் சமய,சமூகக்கல்வி படப் புத்தகங்களில் கோணேசரம் கி. பி 13 ஆம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கைக் கல்வித்தினைக்கலப் பாடப் புத்தகங்கள் சொல்வது போல் கோணேசரம் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருப்பின்;எவ்வாறு சம்பந்தர் ஆறு நூற்றாண்டுகளின் பின் அதன் மேலப் பதிகம் பாடினார்? இல்லையேல் சம்பந்தர் ஆறு நூற்றாண்டுகள் உயிர் வாழ்ந்தாரா?

எந்தவொரு மனிதனும் ஆறு நூற்றாண்டு காலம் உயிர் வாழ்ந்திருக்க முடியாது.அப்படி வாழ்ந்தார் என்று சொன்னால் அது மிகப் பெரிய பொய் என்பது அனைவருக்கும் புரியும். எனவே இதிலிருந்து கோணேசர ஆலயம் இலங்கைக் கல்வித்தினைக்கலப் பாடப் புத்தகங்கள் சொல்வது போல் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்படவில்லை என்றும் அக்காலத்துக்கு முந்தியது என்றும் முடிவுக்கு வரலாம்.மாறாக கி.பி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தரே அதன் மேலப் பதிகம் பாடியுள்ளார் என்றால்;கி.பி 7 ஆம் நூற்றாண்டில் கோணேசர ஆலயத்தின் புகழ் உச்சத்தில் இருந்தது என்றே கொள்ளலாம்.எனவே கோணேசர ஆலயம் கி.பி 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே கட்டப்பட்டிருக்க வேண்டும்.

அனால் தமிழனின் வரலாற்றை இளம் கல்விச் சமுதாயத்திடம் தவறாய்ப் புகுத்த முயன்ற கல்வித்திணைக்களம் பெரும் கோட்டையை விட்டுவிட்டது.அது மகாவம்சத்தை தமிழர்களும் படிப்பார் என உணராமல் விட்டதுதான். மகாவம்சத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது "அனுராதபுரத்தில் அரசியற்றிய மகாசேனன் என்னும் மன்னன் (கி.பி 334 -361 ) நாலாம் நூற்றாண்டுக்கு முன்னரே கட்டப்பட்டிருந்த கோணேசர ஆலயத்தை இடித்துப் புத்த விகாரை கட்டினான் "என்பதாகும்.

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் இலங்கையின் வரலாற்று நூலெனக் கருதப்படும் சிங்கள -பாளி நூலான மகாவம்சம் கி.பி 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே கோணேசர ஆலயம் கட்டப்பட்டிருப்பதாக கூற இலங்கைக் திணைக்களத்தால் வெளியிடப்படும் படப் புத்தகங்கள் கோணேசர ஆலயம் கி.பி 13 ஆம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டிருப்பதாக கூறுவது என்? இங்கு ஒரே ஒரு கேள்வியை மட்டும் முன்வைக்கிறோம் அது;இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம் பொய்யுரை புனையும் நூலென ஒப்புக்கொள்கிறீர்களா? இல்லை தவறான வரலாற்றை இளம் கல்விச் சமுகத்திற்கு திணிக்கிறீர்களா? என்பது தான்.

ஆனால் நாம் இங்கு ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.இச் சித்து விளையாட்டுக்களெல்லாம் இலங்கைத் தமிழர்கள் இலங்கையின் சுதேச மக்கள் அல்ல .அவர்கள் வந்தேறு குடிகள் என்று காண்பிக்க நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் திட்டங்களாகும்.

தமிழர்கள் வந்தேறு குடிகலேன்று கூறும் அனைத்து ஆய்வாளர்களிடமும் ஒரே ஒரு சிறு கேள்வி "நீங்கள் கூறுவதுபோல் தமிழர்கள் வந்தேறு குடிகளேன்றால்;இலங்கையில் இருந்து வெறும் 19 மைல் தொலைவிலிருந்த தென்னிந்தியாவிலிருந்த தமிழர்களா?இல்லை ஆயிரக்கணக்கான மைல் தொலைவிலிருக்கும் வட இந்திய மாநிலங்களிலுள்ள ஆரியர்களா? இலங்கைக்கு முதல் வந்திருப்பார்கள்" என்பதுதான். இந்தக் கேள்விக்கு சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள் விடையளிக்கிறார்களோ! இல்லையோ !எனக்குத் தெரியாது ஆனால் எந்தவொரு பாமரனும் எதற்குச் சரியான விடையளித்து விடுவான்.
எனவே சில தவறான தரவுகளைக் கொண்டு தமிழர்கள் இலங்கையின் வந்தேறு குடிகளென்று கூறுவது அப்பட்டமான பொய்யாக அமைவதனை அகழ்வாராச்சி முடிவுகள் பறைசாற்றிவிட்ட நிலையில் தமிழனின் வரலாறு தவறாக இளம் கல்வி சமுதாயத்திடம் புகுத்தப்படுவதை எவராலும் பொறுத்துக்கொள்ள முடியாது...

யாழறிவன்... Yalarivan Jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக