திங்கள், 20 அக்டோபர், 2014

பண்டைய தமிழரின் சமயம்..

பண்டைய தமிழரின் சமயம்..

பகுதி-3

மாணிக்கவாசகரின் "சிவ புராணம்" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந்தம் ஒரு புராணம்(Sanskrit : पुराण purāṇa, "of ancient times") அல்ல.ஆகவே சமஸ்கிரத சிவ  புராணத்துடன்   இதை  குழப்பவேண்டாம்.

"எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு"

பெரும்பாலான சைவர்கள் மாணிக்கவாசகரின் வரலாற்றில் இருந்தும் அவரின் போதனையில் இருந்தும்  தெய்வீக உத்வேகத்தை  எடுக்கிறார்கள் .அவரின் சிவ புராணம் -துதி பாடும் மந்திரமாக பயன் படுத்துகிறார்கள் ."நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க"என திரும்ப திரும்ப ஒலிக்கும் எளிதில் மறக்க முடியாத  அடியை முதல் அடியாக கொண்டு அது தொடங்கிறது

சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால்  இயற்றப்பட்ட திருவாசகம்  என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப்  பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின்  தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத்  தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது

"நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க "

" ந ம சி வா ய "என்ற ஐந்து எழுத்துக்களாலானதுமான இந்த மந்திரம் சைவ பரம்பரை வழக்கம் / மரபின் படி ஒரு மிகவும் புனிதமான அஞ்செழுத்து மந்திரம்  ஆகும் .இதை முறைப்படியாக குருவிடம் இருந்து பெற்று,ஒழுங்காக  மீண்டும் மீண்டும் திருப்பிச் சொன்னால் ,இது தெய்வீக வாழ்வை நிறைவடைய செய்யும் .இதன் கருத்து நான் சிவனுக்கு தலை வணங்குகிறேன் . 

இது காறும் கூறியவற்றால் நாம் அறிந்தது :
ஆங்கில அறிஞர் சர் ஜான் மார்ஷல் முயற்சியால் சிந்து சம வெளி நாகரீகம்  அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு,  சிந்து சமவெளி மக்கள் திராவிடர்கள்  என்றும், இவர்களது மொழி பழந்தமிழ் எனவும், ஹரப்பா,  மொகஞ்ச தாரோவில் தோண்டி எடுக்கப்பட்ட புதைப் பொருட்களின் ஆராய்ச்சியில்  5000 ஆண்டு களுக்கு முன்னரே ஆதிமுன்னோரைச் சார்ந்த ஒரு வித[மூல] "தாய்"[சக்தி ] , சிவ வழிபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அத்துடன் லிங்க ,யோனி வழிபாடும் அங்கு இருந்ததும் தெரிய வருகிறது.அத்துடன் அரசமரம்  புனித மரமாக கருத்பட்டுள்ளது .ஆனால் அங்கு கோயில்  இருந்ததிற்க்கான  ஆதாரங்கள் இது வரை கிடைக்கவில்லை.

தொல்காப்பிய தமிழர்களிடையே தெய்வ வணக்கம் இருந்தது. ஆனால் கடவுள் நம்பிக்கையோ சமயமோ இருக்கவில்லை.தெய்வம் நமக்குள், நம்மோடு இருப்பது. கடவுள் நம்மைக் கடந்து இருப்பது[உள்ளது].உதாரணமாக கடவுள் என்னும் சொல் திருக்குறளில் இல்லை. தெய்வம் என்னும் சொல் திருக்குறளில் ஆறு இடங்களில் பயன்றுவருகிறது...தெய்வம் எனப் போற்றப்படுபவர் துறவிகள்,கணவன்......தொல்காப்பியம் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்னும் தெய்வங்களை நானிலத் தெய்வங்களாகக் காட்டுகிறது.

மேலும் மிகவும் விரும்பிய தெய்வமாக முருகன் இருந்தார்.போரில் வீரச் சாவு அடைந்த வீரர்கள் உயர்வாக மதிக்கப் பட்டனர் . இந்த வீரர்கள் புதைத்த இடத்தில் நடு கல்கள்  நாட்டப்பட்டன என சங்க பாடல்கள்  குறிப்பாகத் தெரிவித்துள்ளன .இப்படி நடு கல்  கட்டி எழுப்பும் வழக்கம் ,சங்க காலத்திற்கும் பிறகும் ,நீண்ட காலத்திற்கு பதினோராவது  நுற்றாண்டு வரை தொடர்ந்து உள்ளது .போரில் வெற்றி வேண்டி ,நடு கல் வணக்கம் செய்வது ஒரு வழமையாக இருந்ததுள்ளது .சங்க காலத்து கோவில்கள் அழிந்து போகக்கூடிய .பொருட்களால் கட்டப்பட்டதால் ,இன்று அவற்றின் சிறு அடையாளங்களே  காணக் கூடியதாக உள்ளது ...

சங்க காலத்தில் வேத நெறியும் கடவுள் நம்பிக்கையும் கால்கொள்ள ஆரம்பித்தன. இருந்தும் அமைப்பு முறையாக நிறுவப்பட்ட (established) சமயம் இருக்கவில்லை.சங்கம் மருவிய காப்பிய காலத்தில் தமிழர்கள் வைதீக, சமண, பவுத்த மதத்தை தழுவி இருந்தார்கள்.

பக்திஇயக்க காலத்தில் ஆரியரின் வேதநெறி சங்க கால தலைவன் தலைவி உறவையும் நடுகல் வணக்கத்தையும் உள்வாங்கிக் கொண்டு சமண பவுத்த மதச் செல்வாக்கை சாய்த்தன.

துரதிஷ்டவசமாக .இந்த தமிழரின் சமயத்திற்கு ,சமஸ்கிரத வேத சமயம் ,தங்களது வேதம் புராணம் இதிகாசம் ஆகியவற்றை ,தமிழரின் சமயம் போல் கொடுத்து விட்டனர் .இது இரண்டு சமயத்தையும்  ஒன்று இணைத்தது [ஒன்றிப்பு] மூலம் முடிவாயிற்று .முருகன்U+2192.svgஸ்கந்த ,கார்த்திகேய ஆனார் .சிவாவிற்கு மகன் ஆனார் .அதுபோலவே கொற்றவை உமா ஆனார் .சிவாவின் மனைவியாகவும் முருகனின் தாய்யாகவும் .மயோன் விஸ்ணு  ஆனார் .இப்படியே மற்றவையும் .

பல்லவர் ஆட்சிக் காலத்தில்தான் சைவசமயம் அப்பர், ஆளுடைப் பிள்ளையார், சுந்தரர், மாணிக்வாசகர் தலைமையில் பக்தி இயக்கமாக எழுச்சி பெற்றது. இதுவே சைவ சமயத்தின் பொற்காலம் என்று சொல்லலாம்.

'நாமார்க்கும் குடியல்லோம்

நமனை அஞ்சோம்
ஏமாப்போம் பிணியறியோம்
பணிவோ மல்லோம்.'

'அஞ்சுவதுமில்லை யஞ்சவருவது மில்லை'

என்ற அப்பரின் வீர முழக்கங்கள் மக்களுக்கு சங்ககால புற வாழ்க்கையை நினைவூட்ட உதவின போலும்.

பிற்கால பல்லவர் சேர சோழ பாண்டியர் ஆட்சியில் சைவமும் வைஷ்ணவமும் வளர்ச்சியடைந்தன. அதே சமயம் சாதிப்பாகுபாடும் கூர்மை அடைந்தன.

[The Murugan temple at Salavanakuppam near Mahabalipuram. The brick temple excavated in 2005 dates to the Sangam period and is believed to be the oldest Hindu temple to be found in Tamil Nadu.]

சைவ சமயத்தின் முக்கிய நூலக பெரிய புராணம் இருக்கிறது.இது தென் இந்தியாவில் வாழ்ந்த 63 நாயன்மார்களின்/திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாறு  பற்றிய இலக்கியம் ஆகும்.மாணிக்கவாசகரின் தெய்வீக பாடல்களே தலை சிறந்ததாக விளங்குகிறது.அது போலவே வைஷ்ணவ பக்தி இயக்கத்தில் 12 ஆழ்வார்களின் பாடல்கள் முதன்மை பெறுகின்றன.பக்தி காலத்தின் தொடக்கத்தில் இருந்து ஆலய வழி பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது .கோவில்கள்    நிலைத்து நிற்கக்கூடிய பொருட்களாகிய பறையை குடைந்தும் கற்களாலும் எட்டாம் நுற்றாண்டில் இருந்து தோன்றத் தொடங்கின .

இன்று இந்து மதத்தின் உட்பிரிவான சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது. இருந்தும் பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று காணப்படவில்லை. இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது

மெய்கண்டார் எழுதிய சிவஞான போதத்துடன் சேர்த்து பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட 14 நூல்கள் சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்களாக,1200-1800 AD.காலப்பகுதியில் வெளிவர தொடங்கின.சைவ சித்தாந்தம்,ஒரு தென் இந்திய சமயமாக ,தமிழர்களுக்கிடையில் மட்டும் காணப்படுகிறது. இந்த  ஒழுங்கு முறைப்பட்ட 14 நூல்களை தவிர ,வேறு பல துணை  நூல்களும் விளக்கவுரைகளும் தமிழில் உள்ளன. சைவ சித்தாந்தம்  ஆகமங்களை,சிறப்பு படி நிலை யிலும்  வேதங்களை பொது படி நிலை யிலும் வைத்து,அவைகளின் அடிப்படையில்  தத்துவத்தை விளக்குகிறது .இப்படி  ஆகமத்திற்கு கொடுத்த முக்கியம் ,சைவ மதத்தை இந்து சமயத்தில் இருந்து ஒரு  தனித்தன்மையாக காட்டுகிறது.சைவ சித்தாந்தம் ,தனது அடிப்படை கட்டுக்கோப்பை ,தனது புனித நூலான பன்னிரு திருமுறையில் இருந்தே எடுக்கிறது.

மேலும் இந்த நவீன உலகில் ,தமிழர்களின் பண்பாட்டு கருத்துருவமாக  திருக்குறளும் ,தமிழர்களின் பொன் காலத்து  உயர்வான .இலக்கியமாக சங்க இலக்கியமும் இன்னும் கருதப்படுகிறது.

........................................முற்றும்...

யாழறிவன்... Yalarivan Jackson Jackie....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக