மயன் என்ற தமிழன்...
மயன் என்பவர் குமரிக்கண்டத்தின் கடைச்சங்கத்தில் உள்ள சங்கப்பலகையை செய்த சிற்பி. இவரின் சங்கப்பலகையிலேயே அகத்தியம், ஐந்திரம் போன்ற பழந்தமிழ் இலக்கிய நூல்கள் ஏற்றப்பட்டன.
குமரிக்கண்டத்தில் வசித்த மயன் பற்றியும் வைசம்பாயனம் மற்றும் ஐந்திறம் போன்ற நூல்களிலும் காணப்படுகின்றன. அதனால் குமரிநாடும் அதன் எல்லைகளும் சங்கம்-முச்சங்கம் பற்றிய செய்திகளும் உறுதிப் படுத்தப்படுகின்றன.
ஐந்திறம் கூறும் குமரிக்கண்டம்
மயன் எழுதியதாக கருதப்படும் ஐந்திறம் என்னும் நூலில் குமரி மாபெரும் நிலமாக இருந்ததென்றும், பெருமலையிலிருந்து பல்துளி ஆறு வருகிறதென்றும் (மேருமலையிலிருந்து பஃறுளி ஆறு), ஏழேழ் நிலமும் ஏழேழ் நாடென அழைக்கப்பட்டதென குறிக்கப்பட்டுளது.
வைசம்பாயனம் கூறும் குமரிக்கண்டம்
வைசம்பாயணப் பாடல் ஒன்று குமரிநாட்டைப் பற்றியும், அதன் எல்லைகளையும், அந்த நாட்டில் மேருமலை(பெருமலை) இருந்ததையும் குறிக்கிறது...
மயன் வரலாறு
மயன் குமரி நாட்டில் பிறந்தவர். இவரது தாய் கருங்குழலியும் தந்தை திருமூலரும்(பதினெண் சித்தர்களுள் ஒருவரா என்று தெரியவில்லை) ஆவர்.
மயன் பிறந்தநாள் - தைத்திங்கள் பௌர்ணமி
லக்னம் - மகரம்
நட்சத்திரம் - பூசம்
ராசி - கடகம்
மயனும் தமிழ்சங்கமும்
மயன் தமிழ்ச்சங்கத்தில் இருந்தவர் என்பதை
செந்தமிழ் இயக்கங்கண்டேன்
என்ற மயனின் பாடலை வைத்து அறியப்படுகிறது.
மயன் சங்கப்பலகை செய்ததை
அவைக்களப் பலகை கண்டு அருந்தமிழ் பலகை யாக்கி
அவைக்களச் சான்றோர் வாழ்த்த அருந்தமிழ் பலகை ஏற்றி
அவைக்கள வேந்தன் வாழ்த்த அருந்தமிழ் நூல்களெல்லாம்
அவையுளோர் கண்க ளிக்க அரங்கேற்றி நின்றதன்றே -(ப.நூ.30)
என்ற பாட்டின் வழியறியலாம்.
கலைமூலன்
மயனே தமிழர்களின் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக் கலைக்கும், வானியற் கலைக்கும், மரக் கலைக்கும் தந்தை ஆவான். அவன் எக்கலைகளிலும் வல்லவன் என்பதை பழந்தமிழ் கலை நூல்கள் சொல்கின்றன
.நூல் பதிவுகள்
மயன் பற்றிய மற்ற பதிவுகள்.
சிலம்பு
மணிமேகலை
வைசம்பாயனம்
மேலும் வைசம்பாயனத்தின் 318,386,899,978,1084,1166,1177 பாடல்கள் மயன் பற்றி கூறுகிறது.
மயனின் முக்கிய நூல்கள்
1.செந்நூல்கள்
1. ஓவியச்செந்நூல் Treatise on drafting & painting
2. சிற்பமாச் செந்நூல் Treatise on Iconometry
3. கட்டிடச் செந்நூல் Treatise on Architecture
4. நிலமனைச் செந்நூல் Treatise on house building based on the land quality
5. மனைநிலச் செந்நூல் Treatise on land based on house building's nature
6. வானியல் செந்நூல் Treatise on Astro - Physics
7. பெருநடச் செந்நூல் Treatise on the Dance
8. மூலிகைச் செந்நூல் Treatise on Herbs
9. கணிதமாச் செந்நூல் Treatise on Mathematics
10. மரக்கலச் செந்நூல் Treatise on Ship building
11. விண்கலச் செந்நூல் Treatise on Space ship
12. ஏழிசைச் செந்நூல் Treatise on Music
2.பொது நூல்கள்
2.1.ஐந்திரம்
2.2.பிரணவ வேதம் (நான்மறைகளுக்கும் முற்பட்டது)
2.3.மயமதம் (கட்டிடவியல்-வாஸ்து)
2.4.சூரிய நூல் (வானியல்)
மற்றும் பல.
சிற்றம்பலச்சிற்பம்
மயனின் நடராச சிற்பம் உணர்த்துவது
ஐந்தொழிலையும் (படைத்தல்-மூலம், காத்தல்-சீலம், அழித்தல்-காலம், மறைத்தல்-கோலம், அருளல்-ஞாலம்), தனித் தொழிலாகச் செய்யும் மூலத்தின் வடிவமே நடராச திருவுரு என்கின்றான்.
மயனின் சீடர்கள்
எண் பிரிவு சீடர்கள் பெயர்
1. தமிழ் நாதன், ஆயன், மூலம், நூலன்.
2. சிற்பம் கீதன், போதன், வேதன், சீலன்.
3. நளினக்கலைகள் தூயன், மாயன், நேயன், வேலன்.
மயன் முக்கோண விதிக் குறிப்புகள்
மயனின் செங்கோண முக்கோண விதி
படக்குறிப்பு
இது செங்கோண முக்கோணத்துக்கு மட்டுமே பொருந்தும்.
தே=செம்பக்கம் (hypotenuse)
சி =சின்னபக்கம்
பெ=பெரிய பக்கம் (செம்பக்கம் தவிர்த்து)
செய்முறை
முதலில் சின்னப்பக்கத்தின் அலகை இரண்டால் வகுத்துக் கொள்ளுங்கள். (எ.கா. 3/2 =1.5)
அடுத்து பெரியப்பக்கத்தின்(செம்பக்கம் தவிர்த்து) அலகை ஏழால் பெருக்கி வரும் விடையை எட்டால் வகுத்துக் கொள்ளுங்கள். (எ.கா. 4*7/8 =3.5)
மேலுள்ள இரண்டு விடையின் கூட்டே செம்பக்கத்தின் நீளம். (எ.கா. 3.5 + 1.5 = 5 அலகுகள்)
மேலுள்ள எளிய விதியின் படி "தே = செம்பக்கத்தை" கண்டுபிடிக்க வர்க்க மூலமோ வர்க்கமோ தேவையில்லை.(no need for squares & square roots). இது மயனின் சிற்ப நூலின் படி பல்லாயிரம் ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இது பித்தாகரசு செங்கோண முக்கோணவிதியை விட மிகப்பழைய மற்றும் எளிய விதியாகும். மேலும் (π=pi=பை)யின் மதிப்பையும் மயன் கண்டுள்ளார்.
மயன் பல்கலைக்கழகம்
மயன் பல்கலைக்கழகம் என்பது கணபதி என்னும் சிற்ப கலைஞரின் வழிகாட்டுதலால் அமேரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைகழகத்தின் பாடங்கள் குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மயன் என்பவரால் எழுதப்பட்ட ஐந்திறம் மற்றும் பிரணவ வேதம் ஆகிய நூல்களிலிருந்து மீளுருவாக்கப்பட்ட நூல்களை மூலமாக கொண்டு அமைக்கப்பட்டது.
யாழறிவன்... Yalarivan Jackson Jackie
அருமையான தகவல் நன்றி.
பதிலளிநீக்குசிறப்பு
பதிலளிநீக்கு