பண்டைய தமிழரின் சமயம்
[The religion of the ancient Tamils]
பகுதி-2
கிறிஸ்திற்கு பின் 300 ஆண்டுவரை நீடித்த சங்க காலம் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு பொன் காலம்.இதற்கு பின் சில நூற்றாண்டுகளிற்கு,களப்பிரர் ஆட்சியில் இலக்கிய ஆரவாரமில்லாமல் ஒரு அமைதி நிலைவியது.கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழ் மன்னர்களின் ஆட்சி வீழ்ந்தது. களப்பிறர் எனப்படும் கன்னடர், தெலுங்கர், உள்ளிட்ட,வேற்றுமொழி இனத்தவர் கி.பி. 250 முதல் 575 வரை முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தின் பெரும்பகுதிகளைக் ஆட்சி செய்தனர்.மேலும் களப்பிரர்கள் சமண சமயத்தையும், பௌத்த சமயத்தையும் சார்ந்தவர்கள். தமிழ் வீசியெறியப்பட்டது. இதனால் ,இதை இருண்ட காலம்[கறுப்பு வரலாறு] என அழைப்பார். அதன் பின் வந்த நாலு நுற்றாண்டுகளை கொண்ட பக்தி காலத்தில்(கி பி600-கி பி1000/6- 10th C.AD),பக்தி இலக்கியங்கள் பெருமளவில் தோன்றியது.வேறு எம்மொழியிலும் தமிழில் தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை.பல முக்கிய,அறுபத்தி மூன்று நாயன்மார்கள் அருளிய,சைவ இலக்கியங்களும் பன்னிரு ஆழ்வார்கள் அருளிய வைஷ்ணவ இலக்கியங்களும் இந்த காலத்தில் தோன்றின. அவை நம்பி ஆண்டார் நம்பியாலும் நாதமுனிகளாலும் முறையே பன்னிரெண்டு திருமுறையாகவும்[தேவாரம்] நாலாயிரம் திவ்விய பிரபந்தமாகவும்[பாசுரம்] தொகுக்கப்பட்டன.மேலும் கிறிஸ்திற்கு பின் 1700 ஆண்டுவரை "மதம்" என்ற சொல் இருக்கவில்லை .
சைவ சித்தாந்தம் தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும்.டாக்டர் போப்"சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக,சைவம் தென் இந்தியாவில் இருந்து,தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக இருந்தது "என்று கூறியுள்ளார்.ஏறக்குறைய கி.மு. 3000 ஆண்டு தொடங்கி கி.மு. 1500 வரை, இன்று ஈராக் எனப்படும் நாட்டுப் பகுதியில் சுமேரு மொழி பேசிய மக்கள் வாழ்ந்தனர். கடந்த 150 ஆண்டுகளாக பற்பல ஆகழ்வாய்வுகள் செய்து அறிஞர்கள் பலர் அந்த சுமேரு மக்களின் இலக்கியங்களை வெளிக்கொணர்ந்து
வாசித்து பொருளும் கண்டு அச்சிட்டு வெளியிட்டுள்ளனர்.அவற்றில் ஒன்றே" ஏண் உடு அன்னா"[[Enheduanna] ] எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய பாடலாகும்.கொற்றவையே இங்கு 'ஈனன்னா'[Inanna] எனப்படுகின்றார் என முனைவர் கி.லோகநாதன், அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு பல சான்றுகளுடன் கூறுகிறார். கொற்றவை ஒரு சுயாதீனமான தெய்வம் என்றும் ,பின்னர் சிவாவுடன் இணைந்தார் /விவாகம் செய்யப்பட்டார் என்றும் கற்றறிவாளர்கள் கூறுவார்கள் பிராமண வேதத்தில் சிறந்த/பெரிய பெண் தெய்வம் என்ற பொதுக் கருத்து அங்கு இல்லை ,ஆனால் இந்து சம வெளி நாகரிகத்திலும் ,பின்னைய இந்து சமயத்திலும் உண்டு.அஸ்கோ பர்போலா[Asco Parpola.] என்ற அறிஞர் தமது புத்தாகத்தில் துர்காவிற்கும் ஈனன்னாவிற்கும் தொடர்பு இருப்பதை எடுத்து காட்டியுள்ளார் .மேற் கூறிய பாடலின் மூலத்தை வெளியிட்டவர் William W.Halloவும் J.J.A. Van Dijk என்பாரும் ஆகும். 'The Exaltation of Inanna' என்பதே இங்கு சுமேருத்தமிழில் 'ஈனன்னை சீர்பியம்' எனப்படுகின்றது.18 பாடல்களை கொண்டது இது . பிற்காலத்தில் சைவசித்தாந்தமாக வளர்ந்துள்ள சைவத்தின் நல்லவோர் வளர்ந்த நிலையை இப்பாடல்கள் காட்டுகின்றது. இதின் முதல் பாட்டை மட்டும் தமிழில் கிழே தருகிறேன்.
"அனைத்து சக்தி அன்னை, தெள்ளிய ஒளி வடிவினள்
மிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது;
விண்ணிலும் புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப்படுகின்றவன்.
ஆண் எனப்படும் மகாதேவனின் நங்கை; சிகையில் பெரும் பெரும் அணிகளை சூட்டியவள்.
மெய்யான அழகோடு விளங்குபவள்; உயர்ந்த பதவிக்கு தகுந்தவள்.
ஏழுவகை மெய்களை கைகளில் (வளையல்களாக) அணிபவள்;[மெய்: சக்தி)]
என் அன்னையே, பெரும் பெரும் மெய்களை சிரசில் கட்டுபவள் நீயேதான்
அனைத்து மெய்களையும் எடுத்து உடம்பில் அணிகளாய் அணிகின்றாய்:
மெய்களை திரட்டி மெய்யான உன் கவசாக நெஞ்சில் தைத்துக் கொள்கின்றாய்"
[[Curiously both Sumerians and Hindu ever depicted their "gods" taming lions.]]
சைவ சித்தாந்தம் என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி. இது சைவ சமயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப் பொருள்படும். (அந்தம் – முடிவு). அதாவது ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப்பட்டது சைவசித்தாந்தம்...
சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றியதாகச்
சிலஅறிஞர்கள் கருதுகிறார்கள். சிந்து வெளியில் கண்டெடுக்கபட்ட சிவலிங்கவடிவங்கள் இதற்குச் சான்றாக இருப்பதாகவும் அவர்கள் கருதுவர்.
தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன்படுத்தப்படாவிட்டாலும், சிவன் தொடர்பான செய்திகள் ஆங்காங்கே உள்ளன. திருக்குறளிலும் கூட சைவ சித்தாந்தக் கருத்துக்களை ஒத்த கருத்துக்கள் காணப்படுகின்றன. இவ்வாறு சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலரால் எழுதப்பட்டதும், சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் காணப்படுகின்றது. "சித்தாந்தம்" என்ற சொல் முதல் தடவையாக திருமூலர் என்ற மாமுனியால் எழுதப்பட்ட திருமந்திரம், செய்யுள் வரி-1421 யில் காணப்படுகிறது
"கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞான முறைமுறை நண்ணியே
சொற்பத மேவித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே."
நான் யார்? கடவுள் இருக்கிறாரா?கடவுள், உயிர்,அண்டம்,இவைகளின் இயல்பு என்ன ?உலகத்துடனும் ,கடவுளுடனும் எனது தொடர்பு என்ன ?ஒருவரால் கட்டுப் படுத்த முடியாத ஒரு சம்பவம் ,எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்ன? எந்த தத்துவ அமைப்பிலும் இப்படியான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன .சைவ சித்தாந்தம் இவைகளுக்கு எளிதில் நம்பத் தக்க , வாத வகையில் நேர்மையாக விடையையும் காரணத்தையும் கொடுக்கிறது .
மக்களின் சுதந்திரம் ,விடுதலை,உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும் ,இயற்கைக்கு எதிராக செயல்படுவதையும் இந்த தத்துவம் ஆலோசனை கூறவில்லை .மூட நம்பிக்கையிற்கும் ,கண்மூடித்தனமான விசுவாசத்திற்கும் இங்கு இடமில்லை .கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை. சைவ சமயத்தையும் தத்துவத்தையும் நிறுவியவர்களும் அதை பிரச்சாரம் செய்தவர்களும் பரந்த நோக்குடையவர்களாகவும் மேன்மை பொருந்திய இதயம் படைத்தவர்களாகவும் இருந்தார்கள்.
"அன்பே சிவம்","தென்னாடுடைய சிவனே போற்றி ; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது.அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை .இரண்டும் ஒன்றே! இந்த முதுமொழி,தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது அதாவது அன்புதான் கடவுள் என்று இது போதிக்கிறது .
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. "யாதும் ஊரே, யாவரும் கேளீர்"என புறநானுறு கூறுகின்றது.இந்த கூற்று,நியூ யோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் நுழைவாயிலில் பொன்னால் பொறிக்கும் அளவிற்கு இன்று தகுதியாகி உள்ளது "ஒன்றே குலம் ஒருவனே தேவன்"என்று எம்மை அது வழி காட்டுகின்றது. அறம் ,பொருள் ,இன்பம் & வீடு[வாழ்வில் நிறைவு அடைதல் ] என்ற நான்கு வழி பாதையை திருக்குறள்,தேவையற்ற சடங்குகளையும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளையும் தவிர்த்து எடுத்துக்காடுகிறது. தமிழ் சைவ பாரம்பரியத்தின் படி ஒரு வாழ்க்கைத் தத்துவ நூல் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு பிரிவுகளை உள்ளடக்கி இருத்தல் வேண்டும் வள்ளுவர் வீடு பற்றிக்கூறாமல் விடுத்துள்ளார் அறம் பொருள் இன்பம் என்பன பற்றி கூறியவர் இந்த மூன்று கட்டங்களையும் தாண்டிச் செல்பவன் தானாகவே வாழ்வில் நிறைவு அடைவான் என்று அவர் கூறாமல் விளங்கவைத்துள்ளார் போலும்.
வையத்து வாழ்வாங்கு வாழ்வோம் உலகத்து இயற்கையை அறிந்து வெல்வோம், புகழுடன் தோன்றுவோம் என்பதே குறிக்கோள்.எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் என்று திரும்ப திரும்ப சைவ சமயம் எதிர் ஒலிக்கிறது...
-கி .பி 600 ஆண்டுகளுக்கு பின்-
சித்தர்களில் திருமூலர் முதன்மை இடம் வகிக்கிறார். அவர் பாடிய
திருமந்திரம் 3,027 பாடல்களைக் கொண்டது. இதுவே சைவ
சித்தாந்தத்தின் அடிப்படையை விளக்குகிறது.
'ஒன்றே குலம் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே-திருமந்திரம் 2104'.அது போலவே "ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது" -திருமந்திரம் 2962 கூறுகிறது.இதன் மூலம் அவர் எல்லா தமிழரையும் சாதி வேறுபாடு இன்றி ஒன்றாய் இணைத்தார் .அது மட்டும் அல்ல திருமூலர் கோட்பாட்டை எந்த பகுத்தறிவுவாதிகளும் ஒப்புக் கொள்கிறார்கள்.மேலும்
அன்பும் சிவமும் இரெண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே
என்கிறார் திருமூலர்.அதாவது "அன்பே சிவம்"என ஆணித்தரமாக கூறுகிறார்.
"கங்குல்பக லற்றதிருக் காட்சியர்கள் கண்டவழி எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே."என்று தாயுமானவரும்
"அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்" என்று சுந்தரரும்
"அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி "என்று மாணிக்கவாசகரும் கூறியுள்ளார்கள்.
பல வகைப்பாடான கடவுள் தன்மையை[இறைமையை] புராண இலக்கியங்களில் ஒருவர் எதிர்கொள்ள/சந்திக்க நேர்ந்தாலும் ,தேவாரங்களை மிக நுணுக்கமாக படிக்கும் போது,அவை அதற்கு எதிர் மாறானதே உண்மை என சுட்டிக் காட்டும்.எல்லா நாயன்மார்களும் ஒப்புயர்வற்ற கடவுளின் தனித்தன்மை[ஒருமை] ஒன்றையே உறுதியாக்குகிறார்கள் .மாணிக்கவாசகர் தமது திருத்தெள்ளேணத்தில் "ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!"என்கிறார்.அதாவது ஒரு பெயரும், ஒரு வடிவமும், ஒரு தொழிலும் இல்லாத இறைவனுக்கு, ஆயிரம் திருப் பெயர்களைக் கூறி நாம் ஏன் துதிக்கிறோம்?.என கேள்வி கேட்கிறார் .
நற்றிணை 170 இல்,
"மடக் கண் தகரக் கூந்தல் பணைத் தோள்
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின்
பிணையல் அம் தழை தைஇ துணையிலள்
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே
எழுமினோ எழுமின் எம் கொழுநற் காக்கம்
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு நம்
பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினே"
ஆரியர் நெருங்கிச் செய்த போரின்கண்ணே பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்துப் பலருடன் சென்று உறையினின்று உருவிய ஒள்ளிய வாட்படையையுடைய மலையனது; ஒப்பற்ற வேற்படையை அஞ்சி அவ் ஆரியப்படை ஓடியதுபோல--இப்படி ஆரியரை விரட்டியதை எடுத்து கூறுகிறது.இது நடந்தது சங்க காலத்தில் .ஆனால் அதன் பின்???..,
தொடரும்... பகுதி-3 பார்க்கவும்..
யாழறிவன்... Yalarivan Jackson Jackie
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக