புதன், 29 அக்டோபர், 2014

தமிழரின் வரலாறே மாறியுள்ளது

தமிழறின் வரலாறே மாறியுள்ளது.--இங்கே நாம்-அங்கே பிற இன  மக்கள்
தமிழா  நம் முன்னோர்கள் சாதித்தார்கள்--

இதை படிக்க  தவறினால் நீங்களும் தவறு செய்கிறீர்கள்... தயவு செய்து படிக்கக்கவும்..... ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது---
                                                          பிற இன  மக்கள் பேச மொழியே தோன்றாத போது

இங்கே நாம் இலக்கியங்கள் படைத்தோம்! இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட "நன்னூல்"எனும் நூலில் தமிழ் எழுத்துக்கள் உடலில் எந்தெந்த இடங்களில் பிறக்கின்றன, பிறந்த எழுத்துக்களை ஒலிக்க எந்த உறுப்புகள் துணை புரிகின்றன, துணை புரியும் உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை படித்து அதிர்ச்சி அடைந்தேன் !!!தமிழின் பெருமையும் அழகும்-தமிழ்.இலக்கியங்கள்-திருக்குறள் -அபிராமி அந்தாதி, தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ், திருமுருகாற்றுப்படை, திவ்ய பிரபந்தம், திருப்பாவை, ஆண்டாள் பாசுரம் ,வெண்பா என பல செல்வங்கள் நம்மிடம் உள்ளன இந்த அற்புத வரிகளில் அருமையாக வெளிப்படுகிறது.. அவற்றை போற்றி பாதுகாப்பது நமது கடமை.
                                         
                              ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா? முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.

உலகின் பல இனங்கள் காட்டில் வேட்டையாடி உண்ட போது
இங்கே நாம்   மெசொபோத்தேமியாவில் இருந்துதமிழீழம் வரை கல்லணையை கட்டி கொண்டு  செய்ததே விவசாயம்..
                     பலருக்கு நிலத்தில் மட்டுமே போர் புரிய தெரிந்த காலத்தில்,
இங்கே நிகரற்ற ஒரு கப்பற்படையை வைத்திருந்தோம்!
                              முதல் கப்பல் படையை நிறுவி, தன் மகன் தெற்காசியா வரை சோழ கொடியை நாட்ட வழிவகுத்த ராஜ ராஜா சோழனின் கப்பல் படை.
  இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி-இந்தோனேசியா- அந்தமான்- மற்றும் நிகோபார் தீவுகள்,- இலட்சத்தீவுகள்-, சுமத்ரா-, ஜாவா-, மலேயா- மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான்.

                                 பல மன்னர்கள் அடுத்த பகுதியை வெற்றி கொண்டு சாதனை எ கூறிய போது,
தெற்காசியா முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் வைத்து ஆண்ட தமிழர்கள்.
தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.
14ஆம் நூற்றாண்டில் தோற்கடிக்கப்பட்ட பாண்டியர்கள், பின் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு 1650ஆம் ஆண்டு வரை ஆண்டதற்கு சான்றுகள் உள்ளன...அவர்களை 'தென்காசிப் பாண்டியர்கள்' என்று கூறுவர்.

இந்த செய்தி இப்பொழுது வரை 'தென்காசிப் பாண்டியர்கள்' பற்றி வெளியில் வரக்கூட இல்லை...எல்லாம் நம் வரலாற்றை அழிக்க நினைத்தவர்கள் செய்த சதி...பெரும்பான்மையான மக்களுக்கு இந்த வரலாறு தெரியவே தெரியாது.

    இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.
                                          அழித்தொழிக்கப்பட்ட மாயன் கூட்டம் தமிழர்கள்

“நுண்வினைக் கம்மியர் காணா மரபின; துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு மயன் விதித்துக் கொடுத்த மரபின”   “மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி” “ [-சிலப்பதிகாரம்-] --
                                                                           மாயனின் வரலாறு கி.மு.4000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பமாகியிருக்கிறது என்பதற்கு சரித்திர ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனாலும் கி.மு.2000 முதல் கி.பி.900 ஆண்டுகள் வரை உள்ள காலப் பகுதிகளில்தான் மாயன்களின் நாகரீகம் உச்சத்தை அடைந்திருந்தது 3500 ஆண்டுகள் வாழ்ந்த இந்த இனமானது கடந்த 15-ம் நூற்றாண்டில் அழிந்தது. இந்த இனத்தினர் விஞ்ஞானிகளைவிடவும் புத்திசாலியாக வாழ்ந்ததாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன. மாயன் இனத்தவர் கட்டிடக் கலை, வான சாஸ்திரம், ஜோதிடம்,  கணித சூத்திரம் போன்ற அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற வித்தகர்களாக இருந்தனர்
.
அழித்தொழிக்கப்பட்ட தமிழீழ தமிழர்கள் கூட்டம்

தமிழீழ அரசாங்கம்-முப் படை​வீ​ரர்​கள் தமிழீழ விடுதலைப் புலிகலிடம்-இருந்தும்
எமது அபிலாசைகள் நிறைவேறாமைக்குத் தற்குறைவாக. அமைந்ததுசிவப் பலமே.
சில போர்களால் தமிழறின் வரலாறே மாறியுள்ளது.
இழந்த இன அடையாளத்தினை மீளத்தேடும் கறேபியன் தீவுத் தமிழர்கள் கூட்டம்

                                அங்கே பிறஇன   மக்கள் பொருள்அறியா பெயர்களைசூட்டினர்----
.
இங்கே நாம் துய சைவதமிழ்இலக்கிய பெயர்களைசூட்டிமகிழ்ந்தோம்

                    ஆனாள் எமது  தற்போதைய தலைமுறையினர்  தம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும்.( வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?  அன்னை அன்னை யார்?  )தம்மினத்தின் சிறப்பறியாது தம்மைத்தாமே சிறப்புறச் செய்வதாக எண்ணித் தாழ்த்தும்  பகுத்தறிவு  தமிழரை நினைத்து வேதனை கொள்ளாதிருக்கவும் முடியவில்லை. உன் மொழியை அடகு வைத்து வேறு மொழியில் பெயர் வைக்காதே

இங்கே நாம் சைவ சித்தாந்த யோகாசனம்(YOUGA)படைத்தோம்! 
(எமது உடலுக்குள் நிகழவேண்டிய  கிரியை ஆகும் )
இங்கே தமிழ்.-விஞ்ஞானம்-!உலகையே கட்டுப்படுத்தும் அபூர்வ கலை ! !

சித்தர்கள் சக்திகள் உடையவர்கள்  எனினும் இவர்கள் உலகாயு இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்..
                                                            -சித்தர்கள் கண்டறிந்த வாத வித்தையே சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாகும். உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர். காட்டிலும் மலையிலும் குகையிலும் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். இன்றிருப்பதைப்போல பரிசோதனை சாலைகள் அன்று இருக்கவில்லை. எனினும் அவர்களின் ஆராய்ச்சிகள் இன்றைய விஞ்ஞான ஆய்வுடன் ஒத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
                                                             செயற்கைக்கோள் உதவியில்லை, தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் !!!
பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்த கால அளவுகள் இத்தனை துல்லியமானவையா !!!கட்டிடங்களில் கணிதக் கலை ! ! நம்மை வியப்பில் ஆழ்த்தும் கணக்கதிகார செய்யுள்கள்.
                                   
தமிழர் சிற்பகலை கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு--

               தமிழர் சிற்பகலை    தமிழின் பெருமை சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்கஇருந்தனர் என்று கருதுகிறார்கள்

  ---தாண்டவ நடராஜரின் திருவுருவமானது சைவசமயத்தின் தத்துவங்களையும் உள்ளடக்கியதாகும். நடராஜரின் அந்தத் திரு நடனக் கூத்து ஒவ்வொரு அணுவிலும் நடைபெறுவதாகச் சொல்வார்கள். அகிலம் முழுவதையும் வெளியாக - அரங்கமாகக் கொண்டு இறைவன் அங்கே நடனம் புரிகிறார். ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், அடக்கல் என்ற ஐந்தொழில்களையும் திரு நடனத்தின் மூலம் புரிகிறார். இச்செயலே ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இடைவிடாது நடந்தேறிக் கொண்டிருக்கிறது. அவருக்கு நான்கு கரங்கள். வலக்கரம் ஒன்றில் ஏந்தியிருக்கும் டமருகம் ஒலி மூலம் அவர் உலகைப் படைக்கிறார் என்பதைக் குறிப்பதாகும். மற்றொரு வலக்கரம் சகல விதமான ஜீவர்களையும் அவர் ஆசிர்வதிக்கிறார் என்பதைக் குறிப்பதாகும். இடது கரம் ஒன்றைத் தூக்கி நிற்கும் பாதத்தைச் சுட்டிக் காட்டி ஒவ்வொரு ஜீவனும் இறைவனின் திருவடியை அடைய முயல வேண்டும் என்பதைக் குறிப்பதாகும். மற்றொரு இடக் கரத்தில் இருக்கும் நெருப்பு அனைத்து மலங்களையும் பொசுக்கி ஜீவனைப் பரிசுத்தமாக்கும் தெய்வத் தன்மையை குறிக்கிறது. ஆணவ மலத்தை அடக்கிக் கட்டுப்படுத்தினால்தான் இறைவன் திருவடிப் பேறு கிட்டும் என்பதை முயலகனைக் காலால் மிதித்து நசுக்குவது போல் காட்டப்பட்டுள்ளது. துள்ளும் பாவனையில் இருக்கும் மான் உருவம் ஜீவர்களின் சஞ்சலத்தைக் குறிப்பதாகும். புலிக்கு இருப்பதைப் போன்ற வலிமையும், கொடிய குணமும் தன்னல உணர்வுக்கு உண்டு. அதை அடியோடு அழித்து நம்மிலிருந்து பிரித்து எடுத்து விட வேண்டும் என்பதை அரையில் கட்டியிருக்கும் புலித்தோல் உணர்த்துகிறது. கங்கையும், திங்களும் இன்பத்தையும், தண்மையையும் குறிக்கின்றன. தாண்டவமாடும் முழுத் தோற்றமும் முடிவில் அடைய வேண்டிய பேரானந்த நிலையைக் குறிப்பதாகும். இப்படி அனைத்து இறைத் தத்துவங்களையும் உள்ளடக்கிய நடராஜரின் திருவுருவைக் கண்டு மேலைநாட்டினரே வியந்து போற்றுகிறார்கள். இத்தகைய கலை வடிவம் தமிழ் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கிடையாது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கூட லிங்க வழிபாடுதான் நடைபெறுகிறதேயன்றி நடராஜர் வழிபாடு கிடையாது. மேலும் சிதம்பர இரகசியம் என்பது அருவ வழிபாடாகும். வெட்ட வெளியாகிய விண்ணாகிய ஆகாசமே இறைவன் என்பதை உணர்த்துவதாகும். தமிழனின் பண்பாடையும், கலாச்சாரத்தையும், ஆன்மிக பேருணர்வையும் உலகுக்கே பறைசாற்றும் ஒப்பற்ற கோவில் சிதம்பரம் நடராஜர் கோவிலாகும்.--
                        உலகில் உன்னதமாய் வாழ்ந்த ஒரு இனம் இன்று உலகின்முன் உருக்குலைந்து கிடந்தும் ஒருவர்கூட எம்மினத்தின் தொன்மையை மற்றவர் முன் நிறுவவோ அதைக் காக்கவோ முனையவில்லை. நாம் மட்டுமே எமக்காகப் போராடி எம்மை முன்னிறுத்தும் பணியில் ஈடுபடவேண்டும். ஒரு சிறிய தீப்பொறியே பெருநெருப்பை உண்டாக்க வல்லது. கற்றவர்கள் நிறைந்திருக்கும் தமிழ் சமூகத்தில் கற்றவர்களே தமிழுக்கு எதிரிகளாய் உள்ளனர். 
           சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த தமிழர் தொன்மையைக் கண்டறிந்து உலக நாடுகள் முன் அதை நிறுவித் தமிழரை மீண்டும் தலை நிமிரச் செய்ய வேண்டும்.கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியினர்  தமிழர்
                                                    
தமிழா! நீ தமிழனா-உண்னால்  முடியுமா இன்பமாய்  இருக்க முடியுமா?
                   கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க் குடையாமல் ஊழி இருக்கலு மாமே.

அங்கே பிற இன மக்கள் செய்வதற்கு ஒன்றும் இல்ளை--!

தமிழர்களுடைய மதி நுட்பத்தையும், கணித முறைகளையும் கண்டு வியந்து தாமும்
-நம்முடைய முறையைக் கையாளத் தொடங்கினர்
                                               உலகின் முதல் நாகரிக மாந்தன், எத்தனை ஆண்டுகளானாலும் அழிய முடியாத பண்பாட்டைக் கொண்டவன், உலகின் முதல் நகரை அமைத்தவன், உலக மக்களுக்கு எல்லாவற்றையும்  கண்டுபிடித்துக் கொடுத்தவன், எல்லாவற்றுக்கும் மேலாக உலகிற்கு உன்னத மொழியை தந்தவன் என்று தமிழனின் பெருமை பற்றிக் கூறிக்கொண்டே போகலாம். அத்தோடு உயிர்மெய்த் தத்துவத்தைக் கண்டறிந்து உலக மக்களின் உயரிய வாழ்வுக்கான வழிவகைகளைச் சொன்னவனும் தமிழனே என்றால் மிகையாகாது.
                         
ஆனாலும் நாம் எம் சிறப்பை அறிந்துவிடாதிருக்க எம்மையே முட்டாள்களாக்கி, திசைதிருப்பி  சிறிய வட்டத்துள் சுழல விட்ட  மேற்குலகின் தந்திரமான செயலை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை. அதற்க்கு சாமரம்வீசிக்கொண்டு தம்மினத்தின் சிறப்பறியாது தம்மைத்தாமே சிறப்புறச் செய்வதாக எண்ணித் தாழ்த்தும் தமிழரை நினைத்து வேதனை கொள்ளாதிருக்கவும் முடியவில்லை.
                            நம் வரலாற்றை அழிக்க நினைத்தவர்கள் செய்த சதிஅப்பொழுதே  தமிழர்களைப் அழிக்க  சதி செய்ய தொடங்கிவிட்டனர்..
  ஆனாள் எமது  தற்போதைய தலைமுறையினர்  சைவத்தையும்  தமிழளையும் பிரித்து தமிழர்களையும்-தமிளையும் அழிக்க  சதி செய்ய தொடங்கிவிட்டனர்.

.எல்லாம் நம் வரலாற்றை அழிக்க நினைசைவ தவர்கள் செய்த சதி..
.                       !சிவம் எழுந்தபோதெல்லாம் தமிழும் தமிழனும் எழுச்சி பெற்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை!
                            அங்கே பிறஇன   மக்கள் செய்வதற்கு ஒன்றும் இல்ளை
தமிழா உன் பெருமையை உன்னைத் தவிர யாவரும் அறிவர்.-
                                                                        அதை அழிக்க வேண்டும் என்பதே அறிந்தவரின் நோக்கமல்லாமல் காக்க வந்தவர் யாரும் கிடையாது. இனியும் வரப்போவதில்லை
                                              இதை உணர்ந்தால் நீயும் உயரலாம், உன்னோடு சேர்ந்த சிவத்தமிழ்ப் பண்பாடும் மேன்மையுறும். சிவபெருமான் திருவருளால் இவ்வுலகே உய்யும்.

  இதை-சரணாகதி  என்பது பணிதல் அல்ல. சரண் புகவேண்டும். அவ்வாறு தஞ்சமெனப் புகும்போது மாயாசக்திகளிடம் சிக்கிக்கொள்ளகூடாது. இதையே திருநாவுக்கரசர் தனது தேவாரத்தில் கீழ்வருமாறு தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
“நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்” இதுவரையில் பணியாது துணிவதே சிவபெருமானிடம் சரணாகதி அடைய நம்மைத் தகுதிப்படுத்தும்.
அவ்வாறு தகுதியடைந்த பின் எவ்வாறு இருப்போம் என்பதை அடுத்த அடியில் கூறுகிறார். ‘இன்பமே எமக்கு எந்நாளும் துன்பமில்லை’
இந்த நிலையில் நாம் சிவனடியில் சரண் அடைந்தோம் என்று பொருள். இதையே அடுத்து வரும் அடிகளில் கீழ்வருமாறு உரைக்கிறார்.
“தாமார்க்கும் குடியல்லாச் சங்கரன் நற்சங்க வெண்குழை ஓர் காதில் போமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச் சேவடி இணையே குறுகினோமே”
இவ்வாறு மாயவிருளுக்குப் பணியாமல் துணிந்த பின்னரே சிவனடியில் சரணாகதி அடைய முடியும்.
தமிழா உனக்கு ஏன் இந்தத் தாழ்வு? எதை வைத்திருந்தபோது நீ உயர்ந்திருந்தாய்? எதைத் தொலைத்ததால் இன்று சிறுமையுற்றாய்?
“கடுஞ்சினத்த கொல் களிறும் கதழ்பரிய கலி மாவும் நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல் மறவரும் என நான்குடனே மாண்டராயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” என்கிறது சங்க இலக்கியம் புறநானூறு யானை(களிறு), குதிரை (மா), தேர், காலாள் (மறவர்) என ரதகஜதுரக பதாதிகளைச் சேனையாகக் கொண்டிருப்பினும் ஒரு மன்னனின் மெய்யான கீர்த்தி (புகழ்-மாட்சி-மாண்ட) அறம் தவறாமையே ஆகும் என்பது இப்பாடலின் பொருள். “பொன் செய் கொல்லன் தன் சொல்கேட்ட யானோ அரசன் யானே கள்வன் மன்பதை காக்கும் தென்புலம் நீதி என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்” எனக் கூறி நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியன் அக்கணமே உயிர் துறந்தான் எனச் சிலப்பதிகாரம் உரைக்கிறது. “வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் உகுநீர் நெஞ்சுசுட” என தன் கன்றை இழந்த பசு ஆராய்ச்சி மணியை அடித்தபோது பசுவின் கண்களில் வழிந்த நீர் மனுநீதி சோழனின் நெஞ்சிலே “உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுமடி” எனச் சுட்டது. இந்த அறம் எங்கே போயிற்று? நெஞ்சிலே செம்மை இல்லாமல் போயிற்று மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்.

தமிழா முக்காலத்தும் உன்னைச் செம்மைப் படுத்தியது சிவமே என்பதை ஏன் மறந்தாய்?

இதுதானா நாளைய எமது தலைமுறையின் நிலையும்?-இழந்த இன அடையாளத்தினை மீளத்தேடும்  தமிழர்கள் கூட்டம்
                                                
தமிழா! நீ தமிழனா-உண்னால்  முடியுமா?
      
தமிழா  நம் முன்னோர்கள் சாதித்தார்கள்--
தமிழா! நீ தமிழனாகப் புறப்பட்டு வா,
தமிழா உண்னால்  உண்னால்  முடியா விட்டால்-நீ வெட்கம், சூடு, சொரணை, மனச்சாட்சி அற்ற தமிழினரோகி நீ .

சூழ்கலி  நீங்கத் தமிழ்மொழி   ஓங்கத்--- துலங்குக வையக மே!--தொல்லை வினை தரு தொல்லை யகன்று  சுடர்க தமிழ்
                      எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய செந்தமிழ் திருநாடு!!!

யாழறிவன்... Yalarivan Jackson

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக