வியாழன், 16 அக்டோபர், 2014

தமிழ்தேசியம் - திராவிடம்

**தமிழ் தேசியம் : திராவிடர் என்பது தமிழ்ச் சொல்லா?...திராவிடர் என்பதற்கு இணையான

**தமிழ்ச்சொல் என்ன?...அதற்கு இணையான தமிழ்ச் சொல்லை வைத்து தமிழரை அழைக்க வேண்டியதுதானே...தமிழ் தமிழ் என்று கூறிவிட்டு ஏன் தமிழரை ஒரு வேற்றுமொழிச் சொல் மூலம் அழைக்கிறீர்கள்?...இதற்கு பதில் சொல்லிவிட்டு உங்கள் அரசியலைத் தொடருங்கள்...

பதில் 1 :
======
**திராவிடம் : திராவிடர் என்றால் தமிழர்...தமிழர் என்றால் திராவிடர்(கருணாநிதி கூறியது)...

**தமிழ் தேசியம் : அப்போது, தமிழரை தமிழர் என்றே அழைக்கவேண்டியது தானே...பிறகு எதற்கு திராவிடர் என்ற சொல் தேவைப்படுகிறது...

**திராவிடம் : தமிழர் என்றால் பிராமணர் வந்துவிடுவார்...திராவிடர் என்றால் வரமாட்டார்...

**தமிழ் தேசியம் : தமிழர் என்றால் பிராமணர் வந்துவிடுவார் என்றால் அப்போது நீங்கள் எதிரியாக முன்னிறுத்தும் ஆரியர் என்பவர் யார்?...உங்கள் அரசியல் படி பிராமணர் தமிழரா?...ஆரியரா?...

**திராவிடம் : ?!@#$%^&*

பதில் 2 :
======
**திராவிடம் : திராவிடர் என்றால் தென்னிந்தியர் என்று பொருள்...

**தமிழ் தேசியம் : 1956ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு தமிழர்க்கென்று ஒரு மாநிலம் உருவான பின்பு தென்னிந்தியர்க்கான அரசியலை எப்படி தமிழர்க்கான மாநிலத்தில் எடுக்க முடியும்...திராவிடத்தின் தேவை(இருந்ததில்லை...ஒரு வேளை இருந்திருந்தால்) 1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதே முடிகிறதல்லவா...

**திராவிடம் : இல்லை...பகுத்தறிவு மூலம் மூடநம்பிக்கை, சாதி மத ஏற்றத்தாழ்வுகளை அழிக்கும் வரை திராவிடதிற்கான தேவை இருக்கும்(பகுத்தறிவு என்ற பெயரில் தமிழரின் அடையாளங்களையும் தமிழர்க்கு அதன் மேல் உள்ள பற்றையும் அழிப்பதே திராவிடத்தின் நோக்கம்)...

**தமிழ் தேசியம் : அதை தமிழர் என்ற பெயரில் செய்யவேண்டியது தானே...ஏன் திராவிடர் என்ற சொல் தேவைப்படுகிறது?...தமிழரை திராவிடர் என்று அடையாளப்படுத்தும் உங்கள் செயலின் நோக்கம் என்ன?...

**திராவிடம் : ?!@#$%^&*

(தமிழரை தமிழர் என்று அடையாளப்படுத்தினால் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழரல்லாத தெலுங்கு கன்னட இனத்தவரால் தமிழ் நாட்டில் அரசாட்சி செய்ய முடியாது...

தற்காலத்தில், தமிழர் தன்னை திராவிடர் என்று அடையாளப்படுத்திக்கொள்வது இழிவாக பலராலும் கருதப்படுவதால், இந்த நிலை நீட்டித்தால் தமிழரல்லாத தெலுங்கு கன்னட இனத்தவரால் தமிழ் நாட்டில் அரசாட்சி செய்ய முடியாது...ஆகையால், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் தமிழர் இன வரையறையை குழப்ப துவங்கியுள்ளனர் இந்த திராவிடர்கள்.)

பதில் 3 :
======
**திராவிடம் : திராவிடம் என்பது திருவிடம் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு...

**தமிழ் தேசியம் : அப்போது, தமிழகத்தை திருவிடம் என்று எந்த தமிழ் இலக்கியத்தில், கல்வெட்டு, செப்பேட்டு ஆதாரத்தில் அழைக்கின்றனர்?...குறைந்தபட்சம் மொழியியல் ஒப்பாய்வாவது உண்டா?(உண்மையில் இதற்கு ஆதாரங்களே இல்லை..இது உச்சரிப்பின் காரணமாக ஊகத்தால் வைக்கப்பட்ட வாதம்...)...

**திராவிடம் : ?!@#$%^&*

(ஊகத்தின் அடிப்படையில் கூறப்பட்ட இந்த பதிலை உறுதியான பதில் போல் திராவிடவாதிகள் வைத்ததற்கு காரணம், தமிழ் தமிழ் என்று சொல்லிவிட்டு தமிழரை எப்படி வேற்றுமொழிச் சொல் மூலம் அழைக்கலாம் என்று பிறர் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகவே. அப்படி திராவிடம் என்பது தமிழ்ச் சொல் இல்லை என்று தெரிந்துவிட்டால் தமிழர்கள் அதற்கான தமிழ்ச் சொல் தேடிக் கண்டுபிடிக்கும் போது உண்மையை கண்டுகொள்வர். ஆகையால், திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லின் திரிபு தான் என்று உண்மையை மறைக்க முற்பட்டனர். இதற்கு ஈ.வெ.இராமசாமி நாயுடுவும் உடந்தை(அவரது எழுத்துக்களே ஆதாரம்).)

திராவிடம் தமிழர்க்கான அரசியல் அல்ல...தமிழரை ஏமாற்றுவதற்கான அரசியல்...தமிழர் மண்ணில் தமிழரை அடிமைப்படுத்தி, தமிழரை அடக்கி அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை தமிழரே அறியாதவாறு உணராதவாறு, ஆதிக்கத்தில் இருந்த தமிழரல்லாதாரால் அரசாட்சி செய்ய உருவாக்கப்பட்ட அரசியல்(கருத்தியல்)...ஆகையால், எப்படி பதில் சொன்னாலும் தமிழரால் திராவிடத்திற்கு ஆப்பு உறுதி...

(உண்மையில், திராவிடத்திற்கான பொருளாக திராவிடம் கூறும் பொருள் அனைத்தும் தவறு...வரலாற்றின் படி திராவிடர்(<த்ராவிட்) என்பது ஒரு குறிப்பிட்ட வகை பிராமணரைக் குறித்த சொல்...இதைத் தான் திராவிடம் தமிழராகிய நம்மிடமிருந்து மறைக்கிறது...)

யாழறிவன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக