இராமாயணத்தின் கதாநாயகன் இராமனின் பெயரில் ஒரு வானரக்கூட்டம் அன்று இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றும், கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால், இராமாயணப் புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது.
தசரதன் அல்லாத சிரங்கனுக்குப் பிறந்த இராமனை, இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னைத் திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின் மூக்கு, முலை, முடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்டதன் மூலம் இராமன், பெண்களைக் கொச்சைப்படுத்துகின்றான்.
ஒரு பெண் ஆணை விரும்பி திருமணம் செய்யக் கோருவது குற்றமா?
இதை இராமாயணம் மறுக்கிறது. பெண்ணின் உடலைச் சிதைப்பதுதான் இராமாயண நீதி. இன்று பெண் மீதான சித்ரவதைகள் இதுபோன்று இராமனின் வழிகாட்டலில் நடப்பதை நாம் எதார்த்தத்தில் காண்கின்றோம்.
சீதை இராமனின் சகோதரி என்ற இராமாயண வரலாறு மூலம், சகோதர - சகோதரி திருமணம் நிகழ்ந்த சமுதாயத்தையே எமக்குக் கோடிட்டுக் காட்டுகின்றது.
வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல், இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது.
இராவணனை வென்ற இராமன் சீதையைப் பார்க்க மறுத்த நிலையில், ''இராவணனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந்தொல்லையை
மேற்கொள்ளவில்லை" என்று தனது ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்தினான்.
மேலும் அவன் ''உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்கவேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது. சகிக்கவில்லை.
ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம்... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா.."என்று கேட்கின்றபோது,
தனது நிலையில் நின்றே உரைக்கின்றான்.
தான் இராவணன் இடத்தில் இருந்தால் கற்பழித்திருப்பேன் என்பதையே சொல்லாமல் சொல்லுகின்றான்;.
இந்த இடத்தில் சீதை தெளிவாக அவனை நிர்வாணப்படுத்திக் கூறுவதைப் பார்ப்போம்.
''நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே."
இந்த இராமன், இராவணனிடம் இருந்து மீட்ட சீதை மீதான ஆணாதிக்கச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அவளைத் தீக்குளிக்கும்படி கட்டாயப்படுத்தினான்;.
கற்பு பற்றி ஆணாதிக்க இறை ஒழுக்கம் வக்கிரம் பிடித்திருப்பதை இது காட்டுகின்றது.
நாடு திரும்பிய பின் சீதை கர்ப்பமாக இருக்கும்போது, வண்ணான் ஒருவன் சீதையின் ஆணாதிக்கக் கற்பு ஒழுக்கத்தை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் சந்தேகப்பட்ட நிலையில்,
இராமன் அதன் வழியில் சீதையின் கண்ணைக்கட்டி, நடுக்காட்டில் துரத்திவிட்டான். இந்த இறைத் தூதர்களின் ஆணாதிக்கம் பெண்வதைகளைக் கொண்டது.
இன்று எதார்த்தத்தில் பெண் மீதான சந்தேகங்கள், அது சார்ந்த சித்ரவதைகள், இதனால் பெண்ணைக் கைவிடுதல் போன்றவற்றின் முன்னோடியான தந்தையாக ஆணாதிக்க இராமன் இருக்கின்றான் என்றால் அதை மறுக்கமுடியாது.
இங்கு இராவணன் சீதையைத் தூக்கிச் சென்று நடத்திய முறைகள் பொதுவான எல்லையில் ஆணாதிக்கக் கண்ணோட்டம் கொண்டவையல்ல.
இராவணன் சீதையைத் தூக்கியதே, தங்கை சூர்ப்ப நகைக்கு நடந்த கொடுமையின் அடிப்படையில்தான்;. இந்த இடத்தில் இதற்காகச் சீதையைக் கொண்டு சென்றது குற்றமே ஒழிய (''வால்மீகி இராமாயணப்படி, சீதை இராமனை விட்டுவிட்டு இராவணனுடன் தானாகவே சென்றாள்."34), இராமன் செய்தது போன்ற இழிந்த ஆணாதிக்கக் குற்றமல்ல.
வரலாற்றில் மத யுத்தங்கள் முதல் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் வரை நடந்ததைப்போல பெண்களைக் கைப்பற்றுவதும், கற்பழிப்பதும், தொடர் விபச்சாரத்தில் தள்ளுவதும், தமது வைப்பாட்டியாக வைத்திருப்பதும் என்ற ஆணாதிக்கக் கொடூரம் எதையும் இராவணன் செய்ததில்லை.
இராவணன் சீதையை விரும்புகின்றபோது, அவளின் விருப்பமின்றித் தொடுவதைக் கூடக் கைவிட்டவன்;. சீதையை இராவணன் தொடாது நிலத்துடன் தோண்டி சென்ற போது, இராவணன் காமம் கொண்டு சிதைக்கவில்லை. மாறாக, பெண்ணைப் பெண்ணாக மதித்தான்.
இராமாயணத்தின் நீதி இராவணன் தளத்தில் இருந்து சொல்லப்பட வேண்டிய பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதே ஒழிய, இதை மறுத்து இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தைச் சொல்லுவதே இராமாயணம்.
சீதையைக் காட்டுக்குத் துரத்திய இராமன் ஆட்சி எப்படி இருந்தது. உத்தர காண்டம் சரகம் 42, 43 இல்,
முறையே சுலோகம் 8,1 இல், ''குடி, கூத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி, பெண்களைக் கூட்டம் கூட்டமாகக் கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்;.
சீதை அவனுடன் இருந்த போதும் இதையே செய்ததுடன், சீதையையும் இதில் ஈடுபடுத்தினான்.
இதில் இயல், இசை, நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா, அப்சரசுகள் போன்றவர்களும், பல அழகிகளும் அந்தப்புரத்தில் சிக்கி கிடந்தனர்.
சர்கா 4,2 செய்யுள் 18.21 இல், ''மதுபோதையில் மாமிசத்தைச் சுவைத்தபடி, சீதைக்கு மதுவைக் கொடுத்தபடி, மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாகப் பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.
சீதையை மீட்ட இராமன் இராவணனின் மனைவி மண்டோதரியைத் துரோகி வீபீஷணனுக்குக் கொடுக்கின்றான். இதுதான் இராமனின் ஆணாதிக்க நீதி.
இதுபோல் வாலியின் மனைவி தாரகையைச் சுக்ரீவனுக்குக் கொடுக்கின்றான். பெண்களை, பெண்களாக ஏற்றுக் கொள்ளாத இராமாயணம் வெறும் பாலியல் நுகர்வுப் பண்டமாகக் கைப்பற்றுவதும் கொடுப்பதுமாகப் பெண்களைச் சிறுமைப்படுத்தியது.
ஆணாதிக்க இராமன் சீதையைக் காட்டிற்குத் துரத்திய பின் சீதை வால்மீகியின் ஆசிரமத்தில் வாழ்கின்றாள். அங்கு இரட்டைக் குழந்தைகளை அவள் பெறுகின்றாள்;.
12 ஆண்டுகளுக்குப் பின் இராமனைக் காணும் வரை, சீதையை இராமன் சென்று பார்த்தது கிடையாது. 12 வருடத்திற்குப் பின் இராமன் செய்த யாகத்துக்கு அழைப்பு திட்டமிட்டே கொடுக்க மறுத்த நிலையில், வால்மீகி சீதையின் மகனை அழைத்துக் கொண்டு யாகத்துக்குச் சென்றான்;.
அங்கு இராமன் மகனைக் கண்டதுடன், சீதை மீதான சந்தேகத்தை மீளவும் சுட்டிக் காட்டினான்.
அதை நிவர்த்திக்க விரும்பினால் சீதை பெரும் மக்கள் கூட்டம் முன்பு மீண்டும் தனது கற்பை நிரூபிக்க வேண்டும் என்றான். சீதை அழைத்து வரப்படுகின்றாள்.
அங்கு இராமனின் அவமானகரமான அவதூறுகளைக் கேட்டுத் தன்னைத்தானே தற்கொலைக்கு இட்டுச் செல்லுகின்றாள்;.
கடவுளாகக் காட்டப்படும் ஆணாதிக்க இராமனின் யோக்கியதை இது.
ஒரு பெண்மீதான அவதூறுகள், இழிவுகள் இராமனின் வழியில் இன்று இந்துப் பண்பாடாக இருப்பது சமுதாயத்துக்கே கேவலமானது. இந்தக் காட்டுமிராண்டித்தனத்துக்கு முடிவுகட்டாத வரை நாம் மனிதனாக வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கின்றது.
யாழறிவன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக