வெள்ளி, 31 அக்டோபர், 2014

தமிழ் இனத்தின் பெருமையை தமிழ் மொழியின் தொன்மையை திட்டமிட்டு மறைக்கும் இந்திய அரசு

தமிழ் இனத்தின் பெருமையை தமிழ் மொழியின் தொன்மையை திட்டமிட்டு மறைக்கும் இந்திய அரசு !

அகண்ட தமிழகம்:
சுமார் பத்தாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழ் எழுத்துக்கள் இதுவரை அதற்குறிய
அங்கீகாரத்தை பெறவில்லை. சமஸ்கிருத வெறி கொண்ட இந்திய அரசு தமிழ் மொழியின்
தொன்மையை ஏற்க மறுக்கின்றது. சிந்து சமவெளியில் கிடைக்கப்பட்ட பட எழுத்துக்கள்,
அசைவெழுதுக்கள் முதல் தமிழி எழுத்துருக்கள், வட்டெழுத்துக்கள் , இன்றைய தமிழ்
எழுத்துருக்கள் வரை தமிழ் எழுத்துக்கு நீண்ட நெடிய வரலாறும் தொடர்பும் இருந்து வருகிறது .

தமிழகத்தில் கிடைக்கப்பட்ட கற்கோடாரியில் சிந்து சமவெளியின் எழுத்துக்கள்
காணப்படுகின்றன. மேலும் இந்திய அளவில் கிடைக்கப்பட்ட எழுத்துக்களில் ஆதிச்சநல்லூரில்
கிடைக்கப்பட்ட தமிழி எழுத்துருவே மிகப் பழமையானது ஆகும் . ஆனால் இதை இந்திய அரசு
திட்டமிட்டு மறைக்க முயல்கிறது. இதை இந்திய அரசிதழில் பதிவு செய்ய வர மறுக்கிறது.
இந்திய அரசின் பாட புத்தகத்திலும் கொண்டு வர மறுக்கிறது. மாறாக எழுத்துரு இல்லாத
சமஸ்கிருத மொழியை இந்திய மொழிகளுக்கு தாய் மொழி என்று மக்களிடம் ஒரு பொய்யை
பரப்பி வருகிறது இந்திய அரசு . தமிழர்களுக்கான ஒரு அரசு இன்னும் அமையாத
காரணத்தால்
தமிழ் மொழியின் தொன்மையை ஆணித்தரமாக உலக அரங்கில் பதிவு செய்ய முடியாத
நிலையில் தமிழர்கள் உள்ளனர்.

இந்திய நிலப்பரப்பு எங்கும் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு பல்வேறு சான்றுகள்
வரலாற்றில் உள்ளது. சங்க இலக்கியங்களும் குமரி முதல் பனிமலை வரை தமிழர்கள் வாழ்ந்து
வந்துள்ளனர் என்பதை பதிவு செய்துள்ளது. சிந்து சமவெளியில் உள்ள ஊர் பெயர்கள் முதல்
வடநாட்டில், தென்னாட்டில் இருக்கும் பல்லாயிரம் ஊர்ப் பெயர்கள் வரை தமிழ் ஊர்ப்
பெயர்களாகவே உள்ளன. ஊர் என்னும் தமிழ்ச் சொல் சுமேரிய நாகரீகத்திலும்
காணப்படுகிறது.
இந்திய துணைக்கண்டம் முழுவதும் ஊர் என்று முடியும் பல நகரங்களை காணமுடிகிறது.

இதற்கு பல சான்றுகளும் உள்ளன. தமிழர்கள் வாழ்ந்த இடமெல்லாம் அவனுடைய
பண்பாட்டை,
மெய்யியலை, எழுத்துக்களை, மொழியை விட்டுச் சென்றுள்ளான். இவை இந்திய துணைக்
கண்டம் முழுவதும் விரவிக் கிடக்கிறது. இது தமிழர்கள் சிந்து சமவெளி, வடநாடு, தென்னாடு என
எங்கும் பரவி வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை தெளிவுபடுத்துகிறது. பாண்டியர்கள் இமயம் வரை
உள்ள நிலப்பரப்பை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பதையும் பல சங்க
இலக்கிய பாடல்கள் மூலமாக நாம் அறிய முடிகிறது.

ஆகவே இன்று சுருங்கிய தமிழக நிலப்பரப்புக்குள் வாழும் இடம் மட்டுமே தமிழகம் அல்ல .
இந்திய துணை கண்டம் முழுவதும் தமிழர் நாடு தான் என்பதை வரலாறு நமக்கு கூறுகிறது .
இந்த நிலப்பரப்பு முழுவதும் 5000 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழி தமிழ் மொழியே
என்பதும் உறுதி படுத்தப்பட்டுள்ளது. அகண்ட தமிழகம் என்பது சிந்துவெளி முதல், இலங்கை
வரை நீள்கிறது. ஆதலால் இந்திய நாட்டை ஆட்சி செய்வதற்கு முழு உரிமை கோரத்
தகுதியுள்ள
ஒரு பண்பட்ட இனம் தமிழினமே என்பதை தமிழர்கள் உணரவேண்டும். இந்திய ஆட்சி
அதிகாரத்தில் தமிழர்களுக்கு உரிய பங்கை நாம் கேட்க வேண்டும். தன்னாட்சி அதிகாரம்
கொண்ட அரசு தமிழர்களுக்கு தற்போது தேவையாகவும் உள்ளது. தமிழ் மொழியே
இந்தியாவின்
ஆட்சி மொழியாக இருக்க அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது.
இந்திய வரலாற்றில் தமிழர்களின் பங்களிப்பையும் , தமிழ் மொழியின் தொன்மையையும்
கருத்தில் கொண்டு தமிழர்களுக்கு உரிய உரிமைகளை இந்திய அரசு வழங்க வேண்டும். தமிழே
இந்தியாவின் முதல் மொழி என்று இந்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழ் மொழியை ஆட்சி
மொழியாக்க வேண்டும். தமிழ் மொழி ஆய்வுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்.
தமிழர்களுக்கு இந்திய அரசியலில் மிக உயர்ந்த இடத்தை தர வேண்டும். தமிழர்
பண்பாட்டையும், மொழி , நிலம் , நீர், இன உரிமைகளை பாதுகாக்க தமிழக அரசுக்கு
தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். இதற்கான சட்ட திருத்தங்களை இந்திய அரசியல்
அமைப்பில் கொண்டு வர வேண்டும். காஷ்மீருக்கு இருக்கும் 370 சட்டப் பிரிவை போல
தமிழகத்திற்கும் தன்னுரிமை தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் சட்டப் பிரிவு தேவையாக
உள்ளது. இதை தமிழக மக்கள் போராடிப் பெற்றால் தான் தமிழ் இனத்தின், தமிழ் மொழியின்
தனித்தன்மையை பாதுகாக்க இயலும்...

யாழறிவன்... Yalarivan Jackson

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக