வெள்ளி, 31 அக்டோபர், 2014

கண்ட நகர்வும் லெமூரியாவும்

கண்ட நகர்வும் லெமூரியாவும்.

போனபதிவில், மூ மற்றும் லெமூரியா பற்றி பேசிய அதேவேளை லெமூரியா இந்து சமுத்திரத்தில் தான் இருந்தது என்பதற்கு சில சான்றுகள்(!) கூறியிருந்தேன். முக்கியமான ஒரு காரணத்தை கூற மறந்துவிட்டேன். ஆபிரிக்கா கண்டத்தில் மேற்கே காணப்படும் மலைத்தொடரானது தென்னமெரிக்கா கண்டத்தில் கிழக்கே காணப்படும் மலைகளுடன் ஒத்து போகக்கூடியதாக இருக்கிறதாம்.....( அதாவது இரண்டினதும் சமுத்திரத்தை நோக்கிய பக்கங்களிலுள்ள சரிவுகள் ஒன்றை ஒன்றுடன் இணைக்க கூடியதாக இருக்கின்றதாம்.) இது நிகழ்காலத்தில் பார்த்தறியக்கூடிய ஒரு விடையம்....ஆகவே, இந்து சமுத்திரத்தில் தான் லெமூரியா இருந்திருக்கும் என்பது தெளிவாகுகிறது.

“லெமூரியா” எப்படி அழிந்திருக்கும்......????

கண்ட நகர்வு இதை பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள்… அதாவது பூமியில் பல தட்டுக்கள் காணப்படுகின்றன (அந்த தட்டுக்களின் மேல் தான் நாம் வாழும் நாடுகள், கடல்கள் என்ப இருக்கின்றன.) அந்த தட்டுக்கள் நிலையாக இல்லாமல் நகர்ந்து கொண்டுள்ளன. என்பது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒரு விடையம். ஆனால் இன்னொரு முக்கியமான விஷையம் என்னவென்றால்… அத்தட்டுக்கள் சாதாரண‌மாக நகராமல் ஒரு சிறிய(!!!???) மேல் கீழான அசைவினையும் கொண்டுள்ளன. ( நாங்கள் விளையாடிய “ஸீஸோ” விளையாட்டுமாதிரி) அத்தோடு ஒவ்வொரு தட்டிற்கும் இந்த நகர்வுவேகம்,அசைவு வேகம் என்பன மாறுபட்டிருக்கின்றது...

(மேற் கூறியதெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்)...

இந்த தட்டுக்களின் நகர்வினாலேயே இமைய மலையின் உயரம் வருடா வருடம் ஒரு சிறிய அதிகரிப்பை காட்டுகிறது. (என்னை பொறுத்தவரையில் எவெறெஸ்ட் சிகரத்தில் உயர அதிகரிப்பு தெரிய வாய்ப்பில்லை. காரணம், புவி வெப்பமடைவதன் காரணமாக பனி உருகுகிறது… ... ஆகவே நகர்வினால் ஏற்படுத்தப்படும் உயர்வு கணிக்க முடியாதிருக்கலாம்) இங்கு இமயமலையின் கீழ் இரு தட்டுக்கள் பொருந்தியுள்ளன என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்....இந்த இமயமலை தோன்றியதே இரண்டு தட்டுக்கள் ஒன்றுடனொன்று முட்டி மோதியதால் தான்! (இமயமலைப்பகுதியிலுள்ள பாறைகளில் கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது நம்பாதவர்களுக்காக)

சுனாமி ஏற்பட்டதும் இரு தட்டுக்களின் முறுகல் தான்!...

உங்களது கருத்துக்கள் எதிர் பார்க்கப்படுகின்றன! ( ஏன் என்றால் நான் ஒன்றும் பெரிய அறிவாளி இல்லை! வாசிச்சது தான் இந்த ஆக்கம். அதனால்,  பிரயோசனமாக்குவதற்கு உங்களது பங்களிப்பு நிச்சயம் தேவை!)..

யாழறிவன்... Yalarivan Jackson

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக