சிங்களமும், பௌத்தமும் எப்படி? எப்போது? வந்தது...!!!
இலங்கையில் தமிழரின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு விட்டமை யாவரும் அறிந்ததே.
இலங்கையில் இன்று பெரும்பான்மையின மக்களாக உள்ள சிங்களவர்கள் தமக்கென அமைத்துக் கொண்ட வரலாறுகளின் படி அவர்கள் கலிங்க தேசத்தில் இருந்து கி.மு 5 ஆம் நூற்றாண்டளவில் இலங்கைக்கு வந்த விஜயனின் வம்சத்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது.
ஆனால் விஜயன் சிங்களவனும் அல்ல,பௌத்தனும் அல்ல. விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே இலங்கையில் நாகரிகமடைந்த மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.அவர்கள் தமிழரின் சுதேசிகான இயக்கரும் நாகர்களும் ஆவார்கள்.
இவ்வாறு தமக்கென சிங்களமும், சிங்கள வரலாற்று நூல்களும் கூறும் வரலாற்றினை ஆராய்ச்சியாளர்களின் முடிவுகள் முற்று முழுதாக மறுதலிக்கின்றன.அவர்களது கருத்துப்படி விஜயன் என்ற கதாபாத்திரம் இலங்கைக்கு வந்ததற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என்பதில் உறுதியாயிருக்கின்றனர்
இது இப்படியிருக்க 1980 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தென்னாசியக் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய சிங்களப் பேராசிரியர் கலாநிதி குணதிலக்க என்பவர் ஆரியக் குடியேற்றம் என்பது ஆதாரமற்ற கட்டுக்கதை எனக் கூறியிருக்கின்றார்.
இதே கருத்தையே H .W . CODRINGTON என்ற வரலாற்று ஆய்வாளரும் பின்வருமாறு கூறுகின்றார்."மகாவம்சம்,தீபவம்சம் மற்றும் சிங்கள பௌத்த நூல்களை நன்கு ஆராய்ந்த பின்னர் விஜயனின் வருகை என்பது பல விநோதக் கதைகளின் கூட்டு என்பது புரிகிறது" என்றார்.
சிங்கள வரலாறு கூறும் தகவல்களை முற்றாக மறுத்துரைக்கின்றார்.அது மட்டுமின்றி தற்குரிய காரணத்தையும் ஆதாரபூர்வமாகக் கூறியிருக்கின்றார். இனி சிங்களம் என்ற பெயர் எவ்வாறு தோற்றம் பெற்றது என நோக்குவோம். DR .A.H .MIRANDO என்ற மாபெரும் சரித்திர வரலாற்று ஆய்வாளர் "சிங்களம்" பற்றி அது கறுவாவிட்க்கான சமஸ்கிருதப் பெயர் "சின்ஹல" என்பதாகும்.கறுவா அதிகம் விளையும் நாடு என்பதால் அது முன்னர் சின்ஹல நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது.அது பின்னர் மருவி சிங்கள நாடு ஆகியது.இதனால் அங்கு வாழ்ந்த மக்கள் சிங்களவர்கள் எனப் பெயர் பெற்றனர் என்பது அவரது கருத்தாகும்.
அவர் கருத்து அப்படியிருக்க இலங்கை வரலாற்றில் சிங்களத்தை எப்படிச் சித்தரித்திருக்கிறார்கள் பாருங்கள்.சிங்கத்துக்கும் ஒரு இளவரசிக்கும் பிறந்தவனான சிங்கபாகு என்பவனின் மகனே விஜயன் என்றும் அவனது தோற்றுவாயே சிங்கள இனம் என்று கதைவிட்டிருக்கிரார்கள்.
இங்கு வரலாறு ஒரு புறம் இருக்கட்டும். இவர்கள் மாநிடவியளுக்கே சவாலான இனத்தவர்களா? வேறு வேறான இன அங்கிக் கூட்டங்கள் இணைந்து எச்சங்களைத் தோற்றுவிக்க முடியுமா? என்பது தான் எம் எல்லோருடைய கேள்வியும்.இதற்கு விடையை சிங்கள வரலாற்றினை எதற்க்கு எடுத்தாலும் ஆதாரமாய்க் காட்டுபவர்கள் தான் கூற வேண்டிய கடப்பாடு உள்ளவர்கள்.
இது இவ்வாறு இருக்க இலங்கையை குறிக்கும் எந்த இடத்திலும் "ஸ்ரீ லங்கா" என்று இட்டு சிங்களச் சொல்லொன்றை இட்டு விட்டதாய்ப் பெருமைப் பட்டுக் கொள்ளும் எத்தனை சிங்களவருக்குத் தெரியும் "லங்கா" என்ற சொல் தமிழில் இருந்து மருவியதென்று.
அதை மேலும் பார்க்கையில் கறுவாவிட்க்கான தூய தமிழ் சொல்லு "இலவங்கம்" என்பதாகும். இந்த இலவங்கமே திரிபடைந்து இலங்கையானது.மேலும் வடமொழிப் பாதிப்பால் லங்கா ஆனதாக DR .A .H .MIRANDO கூறுகிறார்.
இவாறான தனது விளக்கங்களுக்கு DR .A .H .MIRANDO பின்வருவனவற்றை ஆதாரமாய் எடுக்கிறார்.சம்ஸ்கிருத அகராதி,codrington எழுதிய "A short histroy of cyelon ", மூலிகைகள் பற்றிய அகராதிகளான சரஸ்வதி நிகண்டு, சித்த சுவாத நிகண்டு H .H WILSON எழுதிய சம்ஸ்கிருத அகராதி என்பவையாகும்.
இவற்றின் மூலம் தனது கருத்துக்கு வலுச்சேர்த்த DR .A .H .MIRANDO மற்றும் codrington ஆகியோர் சிங்களவர்கள் ஆரியர்கள் என்ற கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கும் அதே வேளை, மொழியை வைத்து ஒரு இனத்தைத் தீர்மானிக்க முடியாது என உறுதியாகக் கூறுகின்றனர். இதே அடிப்படையிலான கருத்தைத் தான் சிங்கள மானிடவியல் ஆய்வாளரான G .OBEYASEKARA உம் கூறியிருக்கின்றார்.
தேவநம்பிய தீசன் மன்னன் காலத்திலேயே இலங்கையில் பௌத்த சமயம் அறிமுகமானது. அப்போது பௌத்த சமயத்தினைப் போதிக்கும் பீடங்களாக மகா விகாரையும், அபயகிரி விகாரையும் விளங்கின. மகா விகாரையிழ்ப் பாளி மொழியிலும், அபயகிரி விகாரையில் தமிழ் மொழியிலும் பௌத்த சமயம் கற்பிக்கப் பட்டது.
கி. பி 6 ஆம் நூற்றாண்டளவில் சைவமும்,வைச்னவமும் மாபெரும் புத்துணர்வு பெற்றது. அத்தோடு மகாயான பௌத்தம் என்ற ஒரு பிரிவும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில்ப் புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக கூறப்பட்டது இதனால் காஞ்சியிலிருந்த பெருமளவான புத்த கோவில்கள் விஸ்ணு ஆலயங்களாக மாறின.
இதன் பாதிப்பு இலங்கையிலும் வெளிக்காட்ட ஆரம்பித்தது. பௌத்த சமயத்தின் மூல வடிவான தேரவாத பௌத்தத்தில் ஆழ்ந்திருந்த மகா விகாரையின் மகா சங்கப் பிக்குகள் மகாயான பௌத்தத்தின் தாக்கத்திற்கு அஞ்சி தேரவாத பௌத்தத்தைக் காக்கும் முயற்சியில் இறங்கினர்.
தமிழ் மொழியில் பௌத்த சமயம் அபயகிரி விகாரையில் போதிக்கப்பட்டதால் அங்கு மகாயான பௌத்தத்தின் செல்வாக்கு இலகுவில் பரவி விடும் என்று அஞ்சிய மகா சங்கத்தினர் தீவிரமாகச் செயற்ப்படத் தொடங்கினார்கள். அதன்படி அவர்களால் "தாம் தீப " கொள்கை உருவாக்கப் பட்டது.
இக் கொள்கைப்படி இலங்கை சிங்கள பௌத்த நாடு, சிங்களவர்கள் பௌத்தத்தின் காவலர்கள் என் விபரிக்கப் பட்டது. ஆனால் இக் கொள்கை தமிழர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட கொள்கையாக ஆரம்பத்தில் இருக்கவில்லை. அபாயத்திலிருந்த தேரவாத பௌத்தத்தைக் காப்பாற்றவே இக் கொள்கை உண்மையில் வகுக்கப்பட்டது.
ஆனாலப் பின்னாளில் வாழ்ந்த தீவிர சிங்கள இனத்துவேசப் பித்தர்களால் தவறான வழியில் ஆதாரமாகக் கொள்ளப்பட்டு விட்டது.இருப்பினும் பின்னாளில் தமிழ் சிங்கள இனங்களிடையே வேற்றுமைகள் எழுந்ததற்கு இக்கொள்கை ஓர் முக்கிய காரணமாகும்.
எது எப்படி இருப்பினும் அனுராதபுரம் பற்றி 17 ஆம் நூற்றாண்டில்க் கண்டி மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்ட ஆங்கிலேயரான Robert knox என்பவர் தன்னுடைய இலங்கை பற்றிய அனுபவங்களை கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் ஆதரவுடன் வெளியிட்ட "A Historical Relation of the islaand of ceylon "என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"கண்டி மன்னனின் சிறையிலிருந்து இலங்கையின் வடக்குப் பக்கமாகத் தப்பியோடிய போது அனுராதபுரம் என்ற இடத்தை அடைந்தேன் அங்குள்ள மக்களுக்கு சிங்கள மொழி தெரிந்திருக்கவில்லை அதனால் அவர்களோடு உரையாடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. அவர்கள் தங்கள் தலைவனிடம் என்னை அழைத்துச் சென்ற பொழுது அவனுடன் உரையாட எனக்கொரு மொழிபெயர்ப்பாளன் தேவைப்பட்டான். என்றும் அவர்கள் பேசிய மொழி தமிழ் மொழி" என்றும் குறிப்பிடுகிறார்.
இலங்கையில் மன்னராட்சியின் இறுதிக்கால கட்டத்தில் அனுராதபுரத்தில் சிங்களம் பேசத்தெரிந்த மக்களே இல்லாதிருந்த போதும் இன்று மக்களாட்சி நடைபெறும் இலங்கையின் அனுராத புரத்தில் சிங்களமொழியை தாய் மொழியாகக் கொண்ட சிங்களவர்களே அதிகம் இருக்கின்றனர்.இது எவ்வாறு சாத்தியமானது? அங்கிருந்த தமிழர்கள் என்ன ஆனார்கள்? எங்கு சென்றார்கள்?
ஆட்சிப் பீடத்திலிருந்த தீவிர சிங்கள இனத்துவேசிகளால் தமிழனின் வரலாறு மறைக்கப்பட்டு விட்டன...
யாழறிவன்... Yalarivan Jackson Jackie
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக