தமிழ் எழுத்துக்களும் தமிழ் இலக்கங்களும் நாணயத்தில் பயன்படுத்தி உள்ள நாடு.
உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.
அது மொரீசியசு (Mauritius) (தமிழ் எண்கள்
௦ – 0,
௧- 1,
௨- 2,
௩- 3,
௪- 4,
௫- 5,
௬- 6,
௭- 7,
௮- 8,
௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.5 தமிழில் ௫) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
மொரிசியசின் பல பகுதிகளில் ஏறக்குறைய 75,000 தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்கள் தங்களை இந்துத் தமிழர்கள் எனத் தெரிவித்துள்ளனர். இவர்களில் 54, 000 தங்களது தாய்மொழி தமிழ் எனத் வாழ்கின்றனர்.. இவர்களில் 3,650 பேர் மட்டுமே தங்கள் வீட்டில் தமிழை அதிகமாகப் பேசுவதாகவும், மேலும் 3300 பேர் தமிழும் இன்னொரு மொழியும் வீட்டில் பேசுவதாகவும் என அரசுக் கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளனர்..
தமிழர்கள் திறமைவாய்ந்த உழைப்பாளிகளாக அறியப்பட்டனர். எனவே, மொரிசியசு அரசு, மொரிசியசு ரூபாய் பணத்தில் தமிழ் எழுத்துக்கள் பொறித்து வெளியிடுகிறது. தைப்பூசம், தீபாவளிப் பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பல இன மக்களின் மொழிக் கலப்பால் மொரிசியசு கிரியோல் என்னும் மொழி உருவானது. இம்மொழியின் பல சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது..
யாழறிவன்...Jackson Jackie
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக