இராமன் கடவுளாக இருப்பதற்கு எந்த விதத்தில் தகுதியானவன்..!சொல்லுங்க நண்பர்களே...?
தேவி சீதையோ இராவணன் என்ற வீரனிடம் சிக்கிக் கொண்டிருந்தாள்.
மனைவி மாற்றானிடம் மாட்டிக் கொண்டிருக்கும் போது கூட கடவுள் இராமன் எந்தக் குறையுமின்றி வாழ்க்கையை சொட்டு விடாமல் சுவைத்து கொண்டிருந்தான்.
சுக்ரீவனிடம் - கடவுள் இராமன் கடவுள் இராமன் நாடு வீட்டேகி காடு புகுகின்றான் தன் மனைவியோடு.
சுக்ரீவன் மான் வேடம் பூண்டு தோற்றந் தந்து கடவுள் இராமனை ஏமாற்றி விடுகின்றான்.
கடவுள் இராமனால் சாதாரண சுக்கிரீவன் பூண்டிருந்த மாறுவேடத்தைக் கூட கண்டு கொள்ள இயலவில்லை.
மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்.
இராவணன் என்ற மாபெரும் வீரனிடம்தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கையேந்தி மனைவிப் பிச்சை கேட்டான்.
குரங்குக் கடவுள் ஹனுமான் மனிதக் கடவுள் இராமனின் மனைவியை மீட்டுத்தரும் மகத்தான சாதனையைச் சாதித்திட இசைகின்றான்.
ஆனால் ஒரு நிபந்தனையை விதிக்கின்றான். தான் மனைவியை மீட்டுத்தரும் இந்தச் சாதனையைத் துவங்குமுன் கடவுள் இராமன், குரங்குக் கடவுள் ஹனுமானின் நண்பன் சுக்கிரீவன்னின் சகோரதரனை கொலை செய்திட உதவி செய்திட வேண்டும்.
இப்படி சகோதர கொலையை கைமாறாகக் கேட்கின்றான் ஒரு கடவுள் இன்னொரு கடவுளிடம்.
கடலுக்குக் குறுக்கே பாலங்கட்டி கடலைக் கடந்து தனது சொந்த மனைவியை மீட்க கடவுள் இராமணனுக்கு 12 ஆண்டுகள் ஆயின.
ஆனால் இந்தக் கடவுளின் மனைவியை கடத்தி செல்ல வீரன் இராவணனுக்கு ஒரே நாள் தான் தேவைப்பட்டது.
சொல்லுங்கள் இதில் யார் ஆற்றல் மிக்கவன்? கடவுள் இராமனா? வீரன் இராவணனா?
ஹனுமான் மலைகளைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றிடும் ஆற்றல் நிறைந்தவன் எனப் பேசப்படுகின்றது.
இது உண்மையானால் அவன் இராமனையே தூக்கிக் கொண்டு லங்காபுரத்திற்குப் பறந்திருக்கலாம்.
இதன் மூலம் அவர்கள் சீதையை வெகு சீக்கிரமாகவே மீட்டிருக்கலாம்.
இந்த 12 ஆண்டுகளாக இராவணன் சீதையை என்னென்ன செய்தான் என்பதை யாரறிவார்கள்.
எந்த இடத்திலும் இராவணன் சீதையுடன் தப்பான முறையில் நடந்தான் என்று கூறப்பட வில்லை.
ஆனால் கடவுள் இராமன் சீதையை தப்பானவளாக என்னு கின்றார் அக்கினி பிரவேசம் செய்ய சொல்கிறார்.
கட்டிய மனைவியை சந்தேகப்படும் இவரை கடவுளாக வணங்குவது முறையா..??
ஹனுமான் இராமனுக்கு உதவி செய்வதற்கு முன்னால் இராமனைக் கொண்டு தனது நண்பனின் சசோதரன் வாலியை கொலை செய்தான்.
பின்னால் இருந்து அம்பெய்துதான் ஹனுமானின் நண்பன் சுக்கிரீவன்னின் உடன் பிறப்பை வீழ்த்தினான் இராமன்.
இராமன் உண்மையிலேயே கடவுளாக இருந்தால் இந்த அற்பச் செயலைச் செய்திருப்பானா..?
**இறைச்சியுண்ட கடவுள் இராமன்...
*
*
இராமன் வனவாசம் போக வெண்டும் என்ற நிலைவந்த போது இராமன் மெத்த வருத்தத்தோடு தன் தாயாரிடம் சொன்னான்.
'அம்மா நான் இராஜாங்கத்தையும் பரிபாலனத்தையம் இழக்க வெண்டும். மன்னர்களுக்கே உரித்தான எனல்லா சுகங்களையும் இழக்க வேண்டும். சுவை மிகுந்த இறைச்சி உணவுகளையும் இழக்க வேண்டும்.(அயோத்தியா காண்டம் 20,26,94 ஆகிய அத்தியாயங்கள்)
இராமன் மது, மாமிசம் இவைகளை உட்கொண்டவனே!
*
*
ராஜ ரிஷிகளின் சம்மதத்தோடு நடைபெற்ற வேட்டையாடும் பழக்கம் உலகின் வேறு எவற்றாலும் வெல்ல முடியாததாக இருந்துள்ளது வேட்டையில் அவனுக்கிருந்த ஆர்வம், மாமிசம் உண்பதில் அவனுக்கு இருந்த அதீதமான விருப்பத்தையே காட்டுகிறது.
லட்சுமணனையும் வானப் பிரஸ்த வாழ்க்கை வாழச் சொல்லிக் கங்கையைக் கடந்தான். நடு ஆற்றில் வரும்போது, நதியை வணங்கி சீதை தன் சங்கல்பத்தைக் கூறினாள்:
காட்டிலிருந்து பத்திரமாகத் திரும்பி வந்தால் நதிக்கு 1000 குடம் மதுவையும் (ஒயின்) மாமிச உணவும் படைப்பதாக உறுதியளித்தாள். (அயோத்யாகாண்டம் சர்க்கம் 52 சுலோகம் 89)
நதியின் தெற்குக் கரையை அடைந்தபோது, அவள் இதை உறுதிப்படுத்தினாள். சகோதரர்கள் இரவுப் பட்டினி, பசியால் வாடினர். வளர் பருவத்தில் இருந்த அவர்களின் (ராமனுக்கு அப்போது வயது 17தான்) வலுவான உடல் வழக்கமான உணவுக்காக ஏங்கியது; காட்டில் இருக்கும் நிலை தூண்டவே, நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்றனர்; ஒரு காட்டுப் பன்றி, புள்ளிமான், சாம்பார் மான், ருரு (எனும் ஒருவகை விலங்கு) ஆகியவற்றைக் கொன்று அவற்றின் மாமிசத்தை எடுத்துச் சமைத்து ஒரு மரத்தடியைத் தம் வீடாக்கித் தின்றனர் (அயோத்யா காண்டம். சர்க்கம் 52, சுலோகம் 102)
சித்திர கூடத்தில் ராமனுடன் காட்டாற்றுக் கரைகளில் உலவி வந்த சீதையைத் திருப்திப்படுத்த மாமிச உணவைக் கொடுத்து ராமன் கூறினான், ``இது ஊட்டம்மிக்க உணவு, ருசியான, திருப்பத்தைத் தரக்கூடியது (அயோத்யா காண்டம், சர்க்கம் 96 சுலோகம் 1)
ராமனிடம் கபந்தன் சொன்னவற்றின்படி `கி போன்ற மாமிசம் மிக்க நீர்ப் பறவைகளும் மீன்களும் ராமனுக்கு மிகவும் பிடித்தமானவை. பம்பா ஏரியில் தெளிந்த நீரில் நீந்தி விளையாடும் மீன்களைக் கூரிய அம்புகளை எய்து லட்சுமணன் பிடித்து வரவேண்டும் என்று கபந்தன் விரும்பினான்....
அதோடு போகவில்லை அவர்களின் மாமிச மோகம்! நீர்க்கோழி (கி.)களில் இறைச்சி அதிகமாக இருக்குமாம். ஆகவே அவையும் மீன்களும் மிகவும் பிடிக்குமாம்.
கபந்தன் என்பான் லட்சுமணனிடம் கூறுகிறான் - தெள்ளிய ஆற்று நீரில் பம்பா ஏரியில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அவற்றை உன் கூரிய அம்பை எய்துக் கொன்று ருசி பாருங்கள், ராமனுக்கு ரொம்ப ஆசையாசன உணவு இது என்கிறான் (நூலின் பக்கங்கள் 131, 132).
இத்துடன் முடியவில்லை. ``இறைச்சிப் படலம்! விருந்தினர்களுக்கு, அவர்கள் வேண்டாத விருந்தாளியாக இருந்தாலும், இறைச்சிச் சாப்பாடு போட்டிருக்கிறார்கள்.
தனியே இருந்த சீதையின் குடிலுக்கு மாறு வேடத்தில் ராவணன் வருகிறான்.
அவனை வரவேற்றுப் பேசி சீதை கூறுகிறாள்
- சவுகரியமாக இருங்கள், என் கணவர் விரைவில் வந்து விடுவார். காட்டுப் பொருள்கள் (புஷ்கலம், வன்யா) கொண்டு வருவார். மான்கறி கொண்டு வருவார்; இஷ்னுமான் (முதலை முட்டை சாப்பிடும் விலங்கு) காட்டுப் பன்றிகளைக் கொன்று அவற்றின் இறைச்சியைக் கொண்டு வருவார் (ஆரண்ய காண்டம், சர்க்கம் 47, பாடல்கள் 22,23).
யமுனை நதியின் தெற்குக் கரையில் உள்ள ஆலமரத்தைத் தாண்டி காட்டினுள் சென்று வேட்டையாடி ஏராளமான (எண்ணெய்) மான்களை வேட்டையாடி வந்தனர் (அயோத்யா காண்டம், சர்க்கம் 55, பாடல் 32) (நூலின் பக்கங்கள் 139, 141).
இராமன் கறி தின்றதை, ஏதோ ஓரிடத்தில் எழுதினார் என்றில்லாமல் பலப்பல இடங்களில் குறித்துள்ளார்
வால்மீகி ராமன் இறைச்சியையே விரும்பி உண்ணும் இளைஞன் பல இடங்களில் வலியுறுத்தி நிக்கிறார்.
இந்த லட்சணத்தில் `ராமனை எதோ சுத்தப் சுயம்பிரகாசம் என்பது போலச் சிலர் இங்கே பேசுகிறார்கள், இன்றைக்கும் பேசுகிறார்கள் என்றால், இவர்களை என்ன பெயரிட்டழைப்பது.
இராவணன் சிறந்த தமிழ் மன்னன்..
கம்பன் சிறந்த தமிழ் கவிஞர் வடநாட்டவனை கடவுளாக சித்தரித்து தமிழர்களுக்கு பெரும் துரோகம் செய்து விட்டான்......
யாழறிவன்... Yalarivan Jackson Jackie...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக