வியாழன், 30 அக்டோபர், 2014

சிங்கம் + சுப்பாதேவி = மகாவம்சம்.

சிங்கம் + சுப்பாதேவி = மகாவம்சம்.

முன்னொரு காலத்தில் வட இந்தியாவில் ஒரு அபூர்வ சம்பவம் (விஞ்ஞான ரீதியில் விளக்க முடியாத பெரும் சம்பவம்) நிகழ்ந்தது. அதில் சுப்பாதேவி என்ற ஒரு மனிதப் பெண்ணை ஆண் சிங்கம் ஒன்று கற்பழிக்க.. அவளுக்கு இரண்டு மனிதக் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒன்று ஆண் மற்றது பெண். அவற்றில் ஒன்று தான் சிங்கபாகு. அவன் தன் சிங்கத் தந்தையைக் கொன்று விட்டு பின் தன் சொந்த சகோதரியையே மணம் முடித்தும் கொண்டான். அவர்களின் பிள்ளையே விஜயன். அதாவது சிங்கத்தின் இரண்டாம் தலைமுறை குழந்தையான விஜயன் ஒரு கொடியவன். அவனின் கொடுஞ்செயல் கண்டு அவனையும் அவனின் கொடுமைக்கார கூட்டாளிகளையும் கடலில் விட்டனர். அவர்கள் போக்கிடமின்றி அலைந்து காற்றின் திசையில் வந்து சேர்ந்த இடம் தற்போதைய சிறீலங்கா. முந்தைய தம்பபரணி.

அதன் பின்னர் விஜயன்.. குவேனி என்ற பெண்ணை தம்பபரணியில் மணந்தான். அவனின் கூட்டாளிகளும் அங்குள்ள பெண்களை மணந்தனர். இறுதியில் வங்காளி.. குஜராத்தி.. தமிழ்.. கன்னடம் எல்லாம் கலந்து பேசும் ஒரு மொழியை உருவாக்கி அதற்கு சிங்களம் என்று பெயர் வைத்து பேசவும் வெளிக்கிட்டனர். இதுதான் ரத்தினச் சுருக்கமான மகாவம்சத்தின் ஆரம்ப பாகம் சொல்லும் சிங்கள இனத்தின் கதை.

"At the beginning of the chronicle (see History of Sri Lanka) the King of Vanga is married to the daughter of the King of Kalinga. Their daughter, Suppadevi, was not only 'very fair and very amorous', but was also prophesied to consummate a 'union with the King of beasts'[3] - in the Mahavamsa, a lion. When this duly happened, she gave birth to two children - Sinhabahu and Sinhasivali. 'Sinhabahu' means 'lion-armed' and the young prince himself is described as having 'hands and feet...formed like a lion's'. [3] The family lived together in the lion's cave, blocked in by a large rock the lion had placed to prevent their exit. Eventually, however, Suppadevi and her two children flee the cave. Later Sinhabahu kills his father with an arrow. Then, marrying his sister, he establishes a kingdom based on a city called Singhapur. Sinhasivali bears him a series of twins; their eldest child is named Vijaya, and his younger twin brother Sumitta.

Vijaya is described as indulging in 'evil conduct, and his followers were...(like himself), and many intolerable deeds of violence were done by them'. So antisocial were his activities that the people of the kingdom eventually demanded that the (now aging) King Sinhabahu have him executed.[3] Instead Sinhabhu had half their heads shaved (a sign of disgrace) and exiled Vijaya with his followers, their wives and children, from the kingdom - traditionally said to number a total of 700 souls. After resting in several places they are found to be hostile, and the wayward prince and his associates eventually 'landed in Lanka, in the region called 'Tambapanni.[3]

Vijaya married Kuveni (local Yaksha princess) like his army marrying off local women. Later this given rise to modern Sinhala race who speak a language phonetically much similar to modern Bengali. Vijaya landed on Sri Lanka near Mahathitha (Manthota or Mannar), and named the island "Thambaparni" ('copper-colored palms). These are attested in Ptolemy's map of the ancient world. Mahavamsa also claims, Lord Buddha visiting Sri Lanka three times. Firstly, to stop a war between a Naga (Vedda) king and his son-in-law who were fighting over a ruby chair. It is said that on his last visit, he left his foot mark on Sripada (Adam's Peak). Tamirabharani was the old name for second longest river in Sri Lanka (known as Malwatu Oya in Sinhala & Aruvi Aru in Tamil). This river was main supply route connecting the capital, Anuradhapura to Mahathitha (Mannar). The waterway was used by Greek and Chinese ships traveling the southern Silk Route. Mahathitha was an ancient port linking Sri Lanka to Bengal and Persian Gulf." http://en.wikipedia....ya_of_Sri_Lanka

நாம் இன்று அறிவியல் வளர்ந்துவிட்ட ஒரு இலத்திரனியல் கணணியுக உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் சிங்கம் புணர ஒரு மனிதப் பெண் கருவுற்றாள் அதன் வழி ஒரு மனிதப் பரம்பரையே தோன்றி அது இலங்கையை ஆளத் தகுதி பெற்றுள்ள வீரப்பரம்பரை என்று ஒரு கூட்டம் சொல்வதை இன்னும் அப்படியே வரலாறு என்று நம்பிக் கொண்டு.. அதற்கு பாதுகாப்பும் பொருளாதார ஆயுத உதவியும் செய்து கொண்டு ஒரு உலகம் இருக்க வேடிக்கையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் சிங்களவர்கள் ஆகிய சிறீலங்காவின் இன்றைய பெரும்பான்மையினர் வட இந்திய வழி வந்தவர்கள். அங்கிருந்து கடலில் தத்தளிக்கவிட்ட இடத்தில் தவறுதலாக வந்து சிவ வழிபாடு கண்ட நீண்ட வரலாற்றியல் தொன்மைகள் கொண்ட இலங்கைத் தீவில் அடைக்கலம் புகுந்து கொண்டனர். அதன் பின் அந்த நிலத்தை அடாவடித்தனங்கள் மூலம் அபகரித்தும் கொண்டனர்.

மகாவம்சமே விஜயனின் தோற்றம்.. அவனின் கொடுமைத்தனங்களை வெளிப்படையாக சொல்லும் நிலையில்.. அவன் வழி வந்த சிங்கள இனம் பற்றிய உலகின் பார்வை இன்னும் வரலாற்று புனை கதைக்குள் புதைந்து கிடக்க விளைகிறதே அன்றி அந்த வரலாற்றின் உண்மைத் தன்மையை அறிவியல் கொண்டு அணுக நினைக்கவில்லை.

உண்மையில் விஜயன் சிங்கத்தில் இருந்து வந்திருந்தால் அவனுடைய பரம்பரை அலகில்.. (சிங்கத்திற்கு 23 சோடி நிறமூர்த்தங்கள் இல்லை என்பது வேறு கதை. சிங்கம் மனித முட்டையை கருக்கட்டச் செய்ய முடியாது என்பதும் அறிவியல் உண்மை. அப்பவே யாரோ குளோனிங் செய்திருக்கினம்.. என்று வைச்சுக் கொள்வோம்) கிட்டத்தட்ட 50% சிங்கத்தினுடையதாக இருக்க வேண்டும். அவன் வழி வந்த சிங்களவர்களிடமும் அது இன்றும் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும்.

சிறீலங்காவில் வாழும் சிங்களவர்களிடமும்.. வட இந்தியாவில் விஜயன் பிறந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் ( இப்போது இந்தியாவில் சிங்கங்கள் வாழ்வதற்கான தடயமே இல்லை) சிங்கங்கள் வாழ்ந்திருந்தால் அவற்றின் மரபணுக்களையும் அவற்றின் சுவடுகளில் இருந்து பெற்று டி என் ஏ மாதிரி ஒப்பீடு மூலம் உண்மையில் சிங்களவர்கள் சிங்கத்தில் இருந்துதான் வந்தனரா என்பதை அறிவியல் ரீதியில் நிரூபிக்க முடியும்.

அதுமட்டுமன்றி சிங்களவர்களின் இழைமணி மற்றும் வை(Y) நிறமூர்த்தங்களினை வட இந்திய.. மற்றும் தென்னிந்திய வாழ் மக்களின் நிறமூர்த்தங்களோடு டி என் ஏ பகுப்பாய்வு மூலம் ஒப்பிட்டு நோக்கின்.. சிங்களவர்கள் வட இந்தியர்களில் இருந்து தோன்றி இருந்தால் அவர்களின் நிறமூர்த்தம் கூடிய அளவு வட இந்தியர்களோடு கூடிய அளவு ஒத்துப் போக வேண்டும். அப்படி ஒத்துப் போனால்.. சிங்களவர்கள்.. வட இந்திய வர்க்கங்கள் என்பது நிரூபணமாகும். ஒருவேளை அவர்களின் நிறமூர்த்தப் பகுப்பாய்வு தென்னிந்தியர்களோடு அதிகம் ஒத்துப் போனால் சிங்களவர்கள் இலங்கைத் தீவை அடைந்த போது அங்கு தென்னிந்தியர்கள் வாழ்ந்ததும்.. விஜயன் குழுவினர் அவர்களை திருமணம் செய்து கொண்டதும் வெளிப்படும்.

இதன் மூலம் மகாவம்சத்தின் பொய்த் தன்மையும் சிங்கள இனம் பற்றிய வரலாற்றியல் பொய்களும் வெளிப்படுவதோடு அவை முற்றுமுழுதான பொய்யே என்றும் மெய்ப்பிக்கப்படும். சிங்கள இனம் என்ற ஒரு இனம் மகாவம்சப் படி இருக்க வாய்ப்பில்லை என்பதும் அறிவியல் உலகில் நிரூபணம் ஆகும்.

மகிந்த ராஜபக்ச போன்ற கோமாளிகள்.. கற்பனை இதிகாசத்தை ஒரு இனத்துக்கான வரலாற்றுச் சான்றாகக் காட்டிக் கொண்டு அதில் 3 ம் 4 ம் 5ம் 6ம் பாகங்கள் என்று சிங்களவர்கள் இலங்கைத் தீவில் செய்த மனித உரிமை மீறல்களை வரலாறாக பதிவிட முனைகின்றனர்.

எவ்வாறு விஜயன் என்ற ஒரு குற்றவாளி ஒரு இதிகாசத்தின் கதாநாயகன் ஆனானோ.. அதேபோல் மகிந்த ராஜபக்ச என்ற ஒரு போர்க்குற்றவாளியை இதிகாச மகாவம்ச வழியில் கதாநாயகனாகக் காட்ட சிங்கள "அறிவியலாளர்கள்.. மூத்தோர்" முனைந்து கொண்டிருக்கின்றனர். இதனை இலங்கைத் தீவின் பூர்வீக மக்களான தமிழ் மக்கள் (இலங்கையின் பாறை அமைப்பு தமிழகப் பாறை அமைப்பை ஒத்ததாக புவிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த வகையில் தமிழர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல அதனோடு இணைந்திருந்த இலங்கையிலும் மிக நீண்ட காலமாக வாழ்ந்திருக்கவே அதிகம் வாய்ப்பிருக்கிறது. இதுவும் அறிவியல் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட முடியும்.) தடுக்க நவீன உலகிற்கு ஏற்ற முறையில் அறிவியல் கொண்டு உருப்படியான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

அதைவிடுத்து ஒரு கற்பனை இதிகாசப் பின்னணியில் ஒரு இனத்துக்கான வரலாற்றை எழுதி வைத்துக் கொண்டு அதன் வழி குற்றவாளிகள், மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் தங்களை தீரர்களாக உலகிற்கு இனங்காட்டவும் பிற மனிதர்களையும் இனங்களையும் வேட்டையாடவும் ஆதிக்கவும் செய்யவும் அனுமதிக்கக் கூடாது.

அது இந்தப் பூமிப்பந்தில் தவறான ஒரு வரலாற்றை எழுதி விடவே உதவும். அதுவும் இத்தனை நவீனத்துவம் வாய்ந்த அறிவியல் தழைத்தோங்கியுள்ள நிலையிலும் இயற்ற முடியுது அல்லது தொடர முடியுது என்றால் அதுவே அந்த இனத்தின் முழு வெற்றியாகவும் அமையும். அதற்கு நாளை அறிவியல் சாயமும் பூசி.. மெய்யென காட்டவும் அந்தச் சிங்கள இனம் முனையும்.

இதையிட்டு இலங்கைத் தீவில் பூர்வீகமாக வாழும் தமிழ் மக்கள் என்ன பதில் நடவடிக்கை எடுக்கப் போகின்றனர்.. அறிவியல் சார்ந்து அதனை எடுப்பார்களா என்பதை தமிழ் அறிஞர்கள் தான் அந்த மக்கள் சார்பில் தீர்மானிக்க வேண்டும்.

மகிந்த ராஜபக்ச செய்வது வெறும் மகாவம்ச இதிகாச நீட்சி அல்ல. உண்மையில் அவர் மகாவம்சத்துக்கு நவீன உலகின் போக்கில் உயிர் கொடுக்க முனையும்.. இலங்கைத் தீவில் சிங்கள இன வரலாற்றை நவீனப்படுத்தும் ஒரு நடவடிக்கையே செய்கிறார். இதனை இட்டு தமிழ் மக்கள் வாழாதிருக்க முடியாது. மாறாக தமிழ் மக்கள் மகாவம்ச போலிகளை அறிவியல் கொண்டு இனங்காட்டிய படி தமக்கான வரலாற்றை பூர்வீக உண்மைகளை அறிவியலின் உதவியோடு ஆதாரப்படுத்தி இலங்கைத் தீவில் தமிழர்களின் பூர்வீகம் பற்றிய உண்மைகளை உலகுக்குச் சொல்லுதலிலும் தமிழர்களின் விடுதலையின் கனதி தங்கியுள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது...

யாழறிவன்... Yalarivan Jackson

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக